அனாமிகா கண்ணா
அனாமிகா கண்ணா ( Anamika Khanna) ஜோத்பூரில் பிறந்தார், 19 ஜூலை 1971) ஓர் இந்திய ஆடை வடிவமைப்பாளர் ஆவார், அவர் கொல்கத்தாவில் உள்ள தனது படமனையில் இருந்து செயல்படுகிறார். [1] பாரம்பரிய இந்திய ஜவுளி மற்றும் நுட்பங்களை மேற்கத்திய சில்ஹவுட் மற்றும் தையல்களுடன் ஆடைகளைத் தயாரிக்கும் பாணியினால் இவர் பிசினஸ் ஆஃப் ஃபேஷன் (BOF) என அறியப்படுகிறார்.[1] சர்வதேச சிட்டை வைத்த முதல் இந்திய வடிவமைப்பாளர் இவர்தான். இவர் "அனா மிக்கா" எனும் சிட்டையினைப் பயன்படுத்தினார் . [2] அவரது படைப்புகள் இந்தியாவிலும் வெளிநாட்டிலும் எழிவரி மற்றும் அணைவரி கடைகளில் விற்கப்படுகின்றன. [3] அலங்காரத் துறையில் நுழைவதற்கு முன்பு, அனாமிகா ஒரு பாரம்பரிய நடனக் கலைஞராகவும் ஓவியராகவும் இருந்தார். [4]
தொழில்
தொகுகண்ணாவின் தொழில் வாழ்க்கை 1998 இல் தொடங்கியது. 2003 ஆம் ஆண்டில், ஆசியாவின் ஒரு பகுதியாக தனது திருமண சேகரிப்புகளைக் காட்ட அவர் பாகிஸ்தானுக்கு அழைக்கப்பட்டார். [5] 2004 ஆம் ஆண்டில், அவர் தனது சர்வதேச சிட்டையினை அறிமுகப்படுத்தினார் (அனா மிக்கா) [6] மற்றும் லக்மே ஃபேஷன் வீக் இறுதிச் சுற்றில் அவரது தொகுப்புகளை காட்சிப்படுத்தினார். [7]
2009 ஆம் ஆண்டில், லாக்மே அலங்கார வார (LFW) குளிர்கால பதிப்பில் இறுதி வடிவமைப்பாளரானார். [8] 2010 இல், அவர் இந்தியா பிரீமியர் லண்டன் அலங்கார வார இலையுதிர்/குளிர்கால சேகரிப்பில் பங்கேற்றார். 2011 ஆம் ஆண்டில், அவர் தனது படைப்புகளை லக்மே கோடை விடுதியில் காட்சிப்படுத்தினார். [9] 2012 ஆம் ஆண்டில், டெல்லி கோச்சர் வாரத்தில் அவர் தனது வழக்கமான தோதி-காற்சட்டை புடவை திரைச்சீலைகள் மற்றும் தரை நீள மேல்சட்டையினை காட்சிப்படுத்தினார். [10] 2013 ஆம் ஆண்டில், பிசிஜே டெல்லி கோச்சர் வாரத்தில், அவரது சேகரிப்பில் கருப்பு, வெள்ளை மற்றும் தங்கம் ஆகிய வண்ணங்களின் கலவையுடன் ஆடைகள் இருந்தன. அனாமிகாவின் சகோதரி சுகானி பிட்டி வடிவமைத்த பழங்குடி நகைகளும் சேகரிப்பில் ஒரு பகுதியாக இருந்தது. [11]
விருதுகள் & சாதனைகள்
தொகு2007 இல் நடைபெற்ற பரிசு அலங்கார வார நிகழ்வில் தனது தொகுப்புகளைக் காட்சிப்படுத்திய முதல் பெண் இந்திய ஆடை வடிவமைப்பாளர் எனும் பெருமை பெற்றார்.[12] இலண்டன் அலங்கார வார நிகழ்வில், 2010 இல் பங்கேற்ற பிறகு பிரித்தானிய ஒப்பந்தத்தினைப் பெற்றார்.[13]
டாடா புற்றுநோய் மருத்துவமனைகள் குழந்தைகள் பிரிவிற்கும், அக்சய் பத்ரா அறக்கட்டளைக்கும் லண்டனில் ஒரு நிகழ்ச்சியுடன் பெரிய தொகையை கொடுப்பதற்கு உதவினார். [14]
இந்திய அலங்கார வடிவமைப்பு குழு (FDCI) குஜராத் மாநில காதி மற்றும் கிராமத் தொழில்களுடன் இணைந்து நரேந்திர மோடியின் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட அலங்கார நிகழ்வில் தங்கள் சேகரிப்புகளை வழங்கிய மூன்று வடிவமைப்பாளர்களில் அனாமிகா கண்ணாவும் ஒருவர். [15] மணமகள் ஆசியா நிகழ்வின் ஒரு பகுதியாக பாகிஸ்தானில் தங்கள் சேகரிப்புகளை வழங்கிய முதல் இந்திய ஆடை வடிவமைப்பாளர்களில் அவரும் ஒருவர் ஆவார்.
அவர் பிவிலாகரி நிறுவனத்துடன் இணைந்து புதுதில்லியில் ஒரு நிகழ்வினையும் ,சிங்கப்பூரில் ஒரு தனிப்பட்ட நிகழ்ச்சியினையும் நடத்தினார். [16]
பிசினஸ் ஆஃப் ஃபேஷனில் தொடர்ச்சியாக ஐந்து வருடங்கள் இவர் இடம் பெற்றார், ஹிந்துஸ்தான் டைம்ஸால் சிறந்த ஆடை பாணி கொண்ட வடிவமைப்பாளருக்கான ஸ்டைலிஷ்ட் டிசைனர் விருது அவருக்கு வழங்கப்பட்டது மற்றும் தி ஹிந்துஸ்தான் டைம்ஸ் இந்தியாவின் ஸ்டைலிஷ்ட் விருதினை 2019 ஆம் ஆண்டில் பெற்றார். [17]
சான்றுகள்
தொகு- ↑ 1.0 1.1 "Anamika Khanna is part of the BoF 500". The Business of Fashion. பார்க்கப்பட்ட நாள் 11 October 2019.
- ↑ "Designer Anamika Khanna ready with international label – Telugu Movie News". Indiaglitz.com. 28 December 2004. Archived from the original on 25 மே 2007. பார்க்கப்பட்ட நாள் 4 September 2016.
- ↑ "Anamika Khanna | Designer Sarees, Lehengas, Kurta Sets | Aza Fashions". Azafashions.com. பார்க்கப்பட்ட நாள் 6 September 2019.
- ↑ "Anamika Khanna is part of the BoF 500". The Business of Fashion. பார்க்கப்பட்ட நாள் 14 May 2020.
- ↑ "Archived copy". Archived from the original on 21 July 2015. பார்க்கப்பட்ட நாள் 17 July 2015.
{{cite web}}
: CS1 maint: archived copy as title (link) - ↑ "Anamika Khanna Fashion Designer | Anamika Khanna Fashion Shows". Boldsky. பார்க்கப்பட்ட நாள் 4 September 2016.
- ↑ "Grand Finish". http://indianexpress.com/article/cities/mumbai/grand-finish/.
- ↑ "Anamika Khanna's finale at Lakme Fashion Week". Daily News and Analysis. 5 January 2009. பார்க்கப்பட்ட நாள் 4 September 2016.
- ↑ "Lakme Summer Resort 2011 Anamika Khanna Show – Indian Makeup Beauty". Makeupandbeauty.com. 11 March 2011. பார்க்கப்பட்ட நாள் 4 September 2016.
- ↑ "Runway Review: Anamika Khanna at Couture Week". Vogue. 10 August 2012. பார்க்கப்பட்ட நாள் 4 September 2016.
- ↑ "Anamika Khanna | Fashion Shows". Vogue. 2 August 2013. பார்க்கப்பட்ட நாள் 4 September 2016.
- ↑ "Anamika's Paris jaunt & Updates at Daily News & Analysis". Daily News and Analysis. 4 April 2007.
- ↑ "Indian Fashion goes International with Anamika Khanna | Designer Indian Outfits – Traditional Indian Clothing". Sareez.wordpress.com. 1 September 2010. பார்க்கப்பட்ட நாள் 4 September 2016.
- ↑ "Anamika Khanna Woos London For A Cause | Grazia India". Grazia.co.in. 9 March 2015. பார்க்கப்பட்ட நாள் 4 September 2016.
- ↑ "Khadi on the ramp – Rediff.com Get Ahead". Rediff.com. 3 February 2015. பார்க்கப்பட்ட நாள் 4 September 2016.
- ↑ "Bulgari returns to India after four years | Parties". Vogue. India. 21 November 2014. Archived from the original on 21 July 2015. பார்க்கப்பட்ட நாள் 4 September 2016.
- ↑ "HT India's Most Stylish 2019 highlights: Kareena Kapoor, Katrina Kaif, Ranveer Singh win big". Hindustan Times. 29 March 2019.