அனிடா ஆக்ஸ்பர்க்

ஜெர்மனியைச் சேர்ந்த சட்ட நிபுணர்

அனிடா தியோடோரா ஜோஹன்னா சோஃபி ஆக்ஸ்பர்க் ( Anita Theodora Johanna Sophie Augspurg) (22 செப்டம்பர் 1857 - 20 டிசம்பர் 1943) ஜெர்மனியைச் சேர்ந்த சட்ட நிபுணரும்,[1] நடிகையும், எழுத்தாளரும், பெண்ணிய இயக்கத்தின் தீவிர ஆர்வலரும் ஒரு அமைதிவாதியும் ஆவார்.[2]

அனிடா ஆக்ஸ்பர்க்
அனிடா ஆக்ஸ்பர்க்
அனிடா ஆக்ஸ்பர்க்
பிறப்புஅனிடா தியோடோரா ஜோஹன்னா சோஃபி ஆக்ஸ்பர்க்
22 செப்டம்பர் 1857
ஜெர்மனி
இறப்பு20 திசம்பர் 1943(1943-12-20) (அகவை 86)
சூரிக்கு, சுவிட்சர்லாந்து
தொழில்நடிகை, வழக்கறிஞர், எழுத்தாளர்
தேசியம்ஜெர்மானியர்
கருப்பொருள்பெண்ணியம்
குறிப்பிடத்தக்க படைப்புகள்"திறந்த கடிதம்", 1905
துணைவர்லிடா ஹேமன்

சுயசரிதை தொகு

அனிடா ஆக்ஸ்பர்க் வழக்கறிஞர் வில்ஹெல்ம் ஆக்ஸ்பர்க்கின் இளைய மகளாகப் பிறந்தார்.[3]

1864 மற்றும் 1873 க்கு இடையில் ஒரு தனியார் பெண்கள் பள்ளியில் பயின்றார். பின்னர் தனது தந்தையின் வெர்டன் சட்ட அலுவலத்தில் சிலகாலம் பணியாற்றத் தொடங்கினார். 1879 இல் ஹோஹேர் மெட்சென்ஸ்சூலில் ஆசிரியர்களுக்கான பிரஷ்ய மாநில தேர்வில் தேர்ச்சி பெற்றார். விரைவில் உடற்பயிற்சி ஆசிரியராக பணியாற்ற நடத்தப்படும் தேர்வை முடித்தார். அதே நேரத்தில், மினோனா பிரீப்-புளூமூரில் நடிப்புக் கலையிலும் பயிற்சி பெற்றார.  

1881-82 வரை மெய்னிங்கன் குழுமத்தில் பயிற்சி பெற்ற இவர் ஜெர்மனி, நெதர்லாந்து மற்றும் லிதுவேனியா முழுவதும் நாடகச் சுற்றுப்பயணங்களில் பங்கேற்றார். 1884 ஆம் ஆண்டு தொடங்கி, லேண்டஸ்தியேட்டர் ஆல்டன்பர்க்கில் (இன்று ஜெர்மனியின் துரிங்கியா) குறிப்பாக துகல் கோர்ட் நாடக அரங்கில் நிரந்தர உறுப்பினராக பணியாற்றினார்.

ஒரு நடிகையாக ஐந்தாண்டு வாழ்க்கைக்குப் பிறகு, இவர் தனது தோழியான சோபியா கௌட்ஸ்டிக்கருடன் மியூனிக் சென்றார். அங்கு 1887 ஆம் ஆண்டில் இவர்கள் கூட்டாக ஹோஃபாடெலியர் எல்விரா என்ற புகைப்படக் கலையரங்கத்தைத் திறந்தனர். இரண்டு பெண்களும் குட்டையான முடியுடனும், வழக்கத்திற்கு மாறான ஆடைகளையும் அணிந்திருந்தனர். மேலும் பெண்களின் விடுதலைக்கான போராட்டத்திற்கும், சுதந்திரமான வாழ்க்கை முறைக்கும் தங்கள் ஆதரவை அடிக்கடி பகிரங்கப்படுத்தினர். அந்த அசாதாரண வாழ்க்கை முறையின் காரணமாக, பெண்கள் இயக்கத்தின் மற்ற ஆளுமைகளை விட ஆக்ஸ்பர்க் பெண்ணிய எதிர்ப்புவாதிகளின் தனிப்பட்ட தாக்குதல்களுக்கு ஆளானார். ஆயினும்கூட, மேடை மற்றும் அரங்கத்தின் மூலம் இவரது தொடர்புகள் இவரை விரைவில் நன்கு அறியச் செய்தன. இறுதியில் பவேரிய அரச குடும்பத்தை வாடிக்கையாளராகப் பெற்றார்.

1890 வாக்கில் ஆக்ஸ்பர்க் ஜெர்மன் பெண்கள் இயக்கத்தில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டிருந்தார். மேலும், பொதுப் பேச்சாளராகப் பயிற்சி பெற்றார். பெண்களின் உரிமைகள் மீதான இவரது அர்ப்பணிப்பு, பல வருட வெற்றிகரமான வேலைக்குப் பிறகு, சட்டப் பட்டப்படிப்பைப் படிக்க முடிவெடுக்க வழிவகுத்தது. ஜெர்மனியில் பெண்களுக்கு சமவாய்ப்பு இல்லாததால், சுவிட்சர்லாந்தின் சூரிக் பல்கலைக்கழகத்திற்குச் சென்றார். ரோசா லக்சம்பேர்க் உடன், இவர் ஒரு கொந்தளிப்பான உறவைக் கொண்டிருந்தார், அவர் சர்வதேச பெண் மாணவர் சங்கத்தின் நிறுவனர்களில் ஒருவராக இருந்தார்.

சான்றுகள் தொகு

  1. Röwekamp, Marion (2011). Die ersten deutschen Juristinnen, Eine Geschichte ihrer Professionalisierung und Emanzipation (1900–1945). Köln: Böhlau Verlag. பக். 880. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-3-412-20532-4. 
  2. "ÖNB-ANNO - Blatt der Hausfrau". anno.onb.ac.at. பார்க்கப்பட்ட நாள் 2022-10-24.
  3. Scharnhop, Christopher (2008). Das Lüneburger Notariat im 19. Jahrhundert : eine Untersuchung zum öffentlichen Notariat unter besonderer Berücksichtigung der Notariatsinstrumente. Berlin: BWV, Berliner Wissenschafts-Verlag. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-3-8305-2660-5. இணையக் கணினி நூலக மையம்:815474314. https://www.worldcat.org/oclc/815474314. 

வெளியீடுகள் தொகு

  • Lida Gustava Heymann, Anita Augspurg, Erlebtes, Erschautes. Deutsche Frauen kämpfen für Freiheit, Recht und Frieden, Hellmann, Frankfurt/M. 1992 ISBN 3-927164-43-7
  • Ueber die Entstehung und Praxis der Volksvertretung in England. Knorr & Hirth, München 1898, zugleich: Dissertation, Zürich 1898

உசாத்துணை தொகு

  • Ute Gerhard, "Anita Augspurg (1857–1943): Juristin, Feministin, Pazifistin", in «Streitbaren Juristen», ed. Thomas Blancke, Baden Baden, Nomos Verlagsgeselschaft 1990
  • Christiane Berneike: Die Frauenfrage ist Rechtsfrage. Die Juristinnen der deutschen Frauenbewegung und das Bürgerliche Gesetzbuch, Nomos VG, Baden-Baden 1995, pp. 44–66 ISBN 3-7890-3808-3
  • Arne Duncker: Gleichheit und Ungleichheit in der Ehe. Persönliche Stellung von Frau und Mann im Recht der ehelichen Lebensgemeinschaft 1700–1914, Böhlau, Köln 2003 ISBN 3-412-17302-9
  • Christiane Henke: Anita Augspurg, Rowohlt, Reinbek 2000 ISBN 3-499-50423-5
  • Susanne Kinnebrock: Anita Augspurg (1857–1943). Feministin und Pazifistin zwischen Journalismus und Politik. Eine kommunikationshistorische Biographie, Centaurus, Herbolzheim 2005
  • Rezension zu obiger Dissertation: Neiseke, Eric: "Über die 'Öffentlichkeitsarbeiterin' Anita Augspurg". In: Querelles-Net. Nummer 18 / März 2006
  • Sonja Mosick: Anita Augspurg – Idealistin oder Realistin? Eine Analyse ihrer publizistischen Tätigkeit unter besonderer Berücksichtigung ihrer Sicht auf die Frauenfrage Universität Diplomarbeit, Hildesheim 1999
  • Hiltrud Schroeder: "Übermächtig war das Gefühl, daß wir vereint sein müssen". Anita Ausgspurg (1857–1943) und Lida Gustava Heymann (1868–1943)". In: Luise F. Pusch und Joey Horsley (eds.): Berühmte Frauenpaare. Suhrkamp, Frankfurt/Main 2005, pp. 96–136.

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=அனிடா_ஆக்ஸ்பர்க்&oldid=3664868" இலிருந்து மீள்விக்கப்பட்டது