அனிதா தேசாய்
அனிதா தேசாய் (Anita Desai) 1937 ஆம் ஆண்டு சூன் 24 ஆம் நாள் பிறந்த இந்தியாவைச் சேர்ந்த ஓர் ஆங்கில நாவல் எழுத்தாளர் ஆவார்.
அனிதா தேசாய் | |
---|---|
பிறப்பு | 24 சூன் 1937 (அகவை 87) முசோரி |
படித்த இடங்கள் |
|
பணி | எழுத்தாளர், புதின எழுத்தாளர், பல்கலைக்கழகப் பேராசிரியர், சிறுகதை எழுத்தாளர் |
குழந்தைகள் | கிரண் தேசாய் |
விருதுகள் | இலக்கியம் மற்றும் கல்விக்கான பத்ம பூசன், இலக்கியம் மற்றும் கல்விக்கான பத்மசிறீ, சாகித்திய அகாதமி விருது, Winifred Holtby Memorial Prize, Guardian Children's Fiction Prize |
கையெழுத்து | |
மாசாசூசட்சு தொழில் நுட்பநிறுவனத்தில் மாந்தவியல் பேராசிரியராகப் பணியாற்றினார். ஒர் எழுத்தாளராக இவர் பெயர் புக்கர் பரிசுக்காக மூன்று முறை முன்மொழியப்பட்டது. சிறந்த இந்திய இலக்கிய படைப்பாளிகளுக்கு இந்திய அரசால் ஒவ்வோர் ஆண்டும் தேசிய அளவிலும் மாநில அளவிலும் வழங்கப்படும் மதிப்பிற்குரிய விருதான சாகித்ய அகாதெமி விருது 1978 ஆம் ஆண்டு இவர் எழுதிய பயர் ஆன் தி மவுண்டெய்ன் என்ற புதினத்துக்காக வழங்கப்பட்டது[1]. தி வில்லேச்சு பைதி சீ என்ற நூலுக்காக கார்டியன் விருது இவருக்குவழங்கப்பட்டது[2].
தொடக்கக்கால வாழ்க்கை
தொகுஇந்தியாவின் முசோரியில் டோனி நிமே என்ற ஒரு செருமானிய தாய்க்கும் மசூம்தார் என்ற ஒரு வங்காள வணிகருக்கும் அனிதா மசூம்தார் பிறந்தார் [3]. வீட்டிற்குள் செருமானிய மொழியைப் பேசிய இவர் வீட்டிற்கு வெளியே உள்ள சமுதாயத்தில் வங்காள மொழி, உருது மொழி, இந்தி மொழி மற்றும் ஆங்கில மொழிகளில் பேசி வளர்ந்தார். இருப்பினும், அவர் வயது முதிர்ந்த தன்னுடைய பிற்கால வாழ்நாள் வரை செருமனிக்கு வரவில்லை. பள்ளியில் ஆங்கிலத்தில் படிக்கவும் எழுதவும் கற்றுக்கொண்டார். இதன் விளைவாக ஆங்கிலம் அவருடைய இலக்கிய மொழ ஆனது. அவர் ஏழு வயதில் ஆங்கிலத்தில் எழுதத் தொடங்கினார். ஒன்பதாவது வயதில் தனது முதல் கதையை வெளியிட்டார்[3].
தில்லி இராணி மேரி மேல்நிலைப்பள்ளியில் அனிதா தேசாய் ஒரு மாணவராக கல்வி கற்றார். ஆங்கில இலக்கியம் பாடத்தைப் படித்து 1957 ஆம் ஆண்டு தில்லி பல்கலைக்கழகத்தின் மிராண்டா அவுசில் தன்னுடைய பி.ஏ. பட்டத்தைப் பெற்றார். இதற்கு அடுத்த ஆண்டு இவர் அவ்வின் தேசாய் என்ற கணினி மென்பொருள் நிறுவனத்தின் இயக்குனராகவும், பிட்வின் எட்டர்னிட்டீசு ஐடியாசு ஆன் லைப் அண்டு தி காசுமாசு என்ற புத்தகத்தின் ஆசிரியருமான அசுவின் தேசாய் என்பவரை மணந்துகொண்டார் [4].
புக்கர் பரிசு பெற்ற நாவலாசிரியர் கிரண் தேசாய் உட்பட நான்கு குழந்தைகள் இவர்களுக்குப் பிறந்தனர். வார இறுதி நாட்களில் அலிபாக் என்ற கடற்கரை நகருக்கு அருகிலுள்ள துல் மாகாணத்திற்கு தன்னுடைய குழந்தைகளை தேசாய் அழைத்துச் சென்றார் [3][4]. இங்குதான் தி வில்லேச்சு பை தி சீ என்ற படைப்பை அனிதா தொகுத்து உருவாக்கினார். இந்நூலுக்காகவே அனிதா தேசாய்க்கு 1983 ஆம் ஆண்டு கார்டியன் குழந்தைகள் கற்பனை பரிசு வழங்கப்பட்டது. அனிதா தேசாயின் வாழ்நாளில் கிடைத்த இப்பெரிய பரிசை பிரித்தானிய குழந்தை இலக்கிய எழுத்தாளர்களின் குழு நடுவராகச் செயல்பட்டு இப்புத்தகத்தை பரிசுக்காகத் தேர்ந்தெடுத்தனர்.
வாழ்க்கை
தொகுதேசாய் 1963 ஆம் ஆண்டில் தனது முதல் நாவலான கிரை தி பீகாக் என்ற புத்தகத்தை வெளியிட்டார். 1980 ஆம் ஆண்டில் எழுதி வெளியிட்ட கிளியர் லைட் ஆப் டே என்ற சுயசரிதை நூலை தன்னுடைய முக்கியமான நூலாக இவர் கருதுகிறார். பிறந்து வளர்ந்த இடத்திற்கு அருகில் வாழ்ந்த மற்றும் முதிர்ந்த வயதின் தொடக்கக் காலத்திலும் இந்நூலை தேசாய் எழுதினார் [5].
ஓர் உருது கவிஞர் பற்றி 1984 ஆம் ஆண்டு கசுடடி என்ற பெயரில் ஒரு நூலை எழுதி வெளியிட்டார். இந்நூல் புக்கர் பரிசுக்காக பரிந்துரைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது ஆகும். 1993 இல், மாசசூசெட்சு தொழில்நுட்ப நிறுவனத்தின் படைப்பிலக்கிய ஆசிரியராகப் பொறுப்பேற்றார்.
1999 ஆம் ஆண்டின் புக்கர் பரிசு இறுதிப் போட்டிக்குத் தேர்வு பெற்ற பாசுட்டிங் பீசுட்டிங் என்ற நாவல் பிரபலமாகப் பேசப்பட்டு இவரது புகழை மேலும் அதிகரிக்கச் செய்தது. மெக்சிகோவின் 20 ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட அவரது புதினமான ஜிக்சாக் வே 2004 ஆம் ஆண்டில் அவரது சமீபத்திய சிறுகதை தொகுப்பில் வெளிவந்தது. அவரது சமீபத்திய சிறுகதை தொகுப்பில் தி ஆர்ட்டிஸ்ட் ஆஃப் அகற்றுதல் 2011 இல் வெளியிடப்பட்டது. தி ஆர்ட்டிசுட் ஆப் டிசப்பியரன்சு 2011 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது [6].
மவுண்ட் ஓலியோக் கல்லூரி, பரூச் மற்றும் சிமித் கல்லூரி கல்லூரிகளில் தேசாய் பயிற்றுவித்தார். அவர் ராயல் இலக்கிய சங்கம், அமெரிக்க அகாடமி ஆஃப் ஆர்ட்சு அண்ட் லெட்டர்சு, மற்றும் கேம்பிரிட்சிலுள்ள கிர்ட்டன் கல்லூரி ஆகியவற்றில் பணிபுரிந்தார். பாம்கார்ட்டினரின் பாம்பே என்ற நாவலை இவற்றுக்காக தேசாய் அர்ப்பணித்தார் [7].
திரைப்படம்
தொகுஅனிதா தேசாயின் இன் கசுடடி என்ற புதினம் திரைப்படமாக 1993 இல் உருவாக்கப்பட்டது. அந்தப் படத்தில் சசி கபூர், சபனா ஆசுமி, ஓம் பூரி நடித்து இருந்தனர். சிறந்த திரைப்படத்துக்காக இந்திய அரசாங்கம் வழங்கும் தங்கப் பதக்கத்தை 1994 ஆம் ஆண்டு இத்திரைப்படம் வென்றது. இசுமாயில் மெர்சண்ட் இப்படத்தை இயக்கினார். பெர்சண்ட் அய்வரி நிறுவனம் தயரிப்பில் இசுமாயில் மெர்சண்ட் இப்படத்தை இயக்கினார். சாருக் உசைன் திரைக்கதையை எழுதினார் [8].
விருதுகள்
தொகு- 1978 இல் இவர் எழுதிய பயர் ஆன் தி மவுண்டென் புதினத்துக்காக சாகித்ய விருது வழங்கப்பட்டது.
- 1990 இல் பத்மசிறீ விருது *2000 இல் 2000 – இத்தாலி இலக்கிய விருதான ஆல்பர்ட்டோ மொராவியா பரிசு
- 2014 இல் பத்ம பூசண் விருது
- பிரிட்டிசு கார்டியன் பரிசு
- 2007 இல் சாகித்ய அகாதமியின் மதிப்புறு பேராசிரியராக அமர்த்தப்பட்டார்[9].
அனிதா தேசாயின் பெயர் புக்கர் பரிசுக்கு மூன்று முறை பரிந்துரைக்கப்பட்டது. இருப்பினும் இவருக்கு அப்பரிசு கிடைக்கவில்லை
சான்றாவணம்
தொகு- ↑ "SahityaAkademi Award – English (Official listings)". சாகித்திய அகாதமி. Archived from the original on 31 March 2009.
- ↑ "Guardian children's fiction prize relaunched: Entry details and list of past winners", guardian.co.uk, 12 March 2001; retrieved 5 August 2012.
- ↑ 3.0 3.1 3.2 Liukkonen, Petri. "Anita Desai". Books and Writers. Finland: Kuusankoski Public Library. Archived from the original on 14 October 2004.
- ↑ 4.0 4.1 Dr. Kajal Thakur. Man-Woman Bonding In Socio-Cultural Indian Concept. Lulu.com. pp. 9–. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-329-13103-3.
- ↑ Elizabeth Ostberg. "Notes on the Biography of Anita Desai" பரணிடப்பட்டது 20 சனவரி 2007 at the வந்தவழி இயந்திரம்
- ↑ "A Page in the Life: Anita Desai". பார்க்கப்பட்ட நாள் 24 March 2018.
- ↑ Baumgartner's Bombay, Penguin, 1989.
- ↑ ஐ.எம்.டி.பி இணையத்தளத்தில் Anita Desai
- ↑ "Conferment of Sahitya Akademi Fellowship". Official listings, சாகித்திய அகாதமி website.