அனிந்திதா கோசு

அனிந்திதா கோசு (Anindita Ghose) மும்பையில் உள்ள ஓர் இந்திய எழுத்தாளர், பத்திரிகையாளர் மற்றும் ஆசிரியர் ஆவார். இவரது முதல் புதினம், தி இல்லுமினேட்டடு, 2021 இல் இந்தியாவிலும் சர்வதேச அளவிலும் 2023 இல் வெளியிடப்பட்டது.

அனிந்திதா கோசு
தொழில்எழுத்தாளர், பத்திரிகையாளர்
மொழிஆங்கிலம்
தேசியம்இந்தியன்
குறிப்பிடத்தக்க படைப்புகள்"தி இல்லுமினேட்டடு"
இணையதளம்
aninditaghose.com

வாழ்க்கை

தொகு

கோசு மும்பைப் பல்கலைக்கழகத்தில் மொழியியலில் முதுகலைப் பட்டம் பெற்றார். கொலம்பியா பல்கலைக்கழகத்தின் கிராஜுவேட் ஸ்கூல் ஆஃப் ஜர்னலிசத்தில் கலை மற்றும் கலாச்சார இதழியலில் முதுகலைப் பட்டம் பெற்றார்.[1] இவர் டைம்ஸ் ஆஃப் இந்தியாவில் பத்திரிகையாளராக தனது தொழில் வாழ்க்கையைத் தொடங்கினார். பின்னர் மிண்டு மற்றும் வோக் இந்தியா நிறுவனத்தில் சேர்ந்தார்.மும்பை கடற்கரையோரத்தில் உள்ள மீனவ கிராமமான மத் தீவில் வசிக்கிறார்.[2][3]

இவரது முதல் புதினமான தி இல்லுமினேட்டடு முதன்முதலில் இந்திய துணைக்கண்டத்தில் ஆர்பர்காலின்சு பதிப்பகத்தால், 2023ல் சர்வதேச அளவில் ஜீயசு (ப்ளூம்ஸ்பரி) தலைவராலும் வெளியிடப்பட்டது [4][5] இது கால் மீ பை யுவர் நேமின் படைப்பாளியான ஆண்ட்ரே அசிமானால் 'அசாதாரணமான படைப்பு' என்று குறிப்பிடப்பட்டது.[6]

இவரது படைப்புகள் தி கார்டியன்,[7] தி கேரவன்,[8] தி இந்து , [9] வோக்,[10] மற்றும் கின்ஃபோக் [11] ஆகியவற்றில் வெளியிடப்பட்டது.

சான்றுகள்

தொகு
  1. Kirpal, Neha. "Anindita Ghose: ‘I was interested in exploring how much of women’s identities are defined by the men in their lives’". https://thepunchmagazine.com/the-byword/interviews/anindita-ghose-amp-lsquo-i-was-interested-in-exploring-how-much-of-women-amp-rsquo-s-identities-are-defined-by-the-men-in-their-lives-amp-rsquo. 
  2. Biswal, Nikita. "Anindita Ghose". பார்க்கப்பட்ட நாள் 11 January 2023.
  3. Modi, Chintan Girish. "Anindita Ghose on her debut novel The Illuminated: 'It is essentially a novel about shifts in perspective'". பார்க்கப்பட்ட நாள் 19 March 2023.
  4. Lim, Charmaine. "Book review: The Illuminated is a nuanced exploration of grief and identity". பார்க்கப்பட்ட நாள் 19 March 2023.
  5. Cunningham, Anne. "The Illuminated is an elegant take on the universality of feminism". பார்க்கப்பட்ட நாள் 19 March 2023.
  6. Mulji, Priya. "Shining new light on old practices". பார்க்கப்பட்ட நாள் 19 March 2023.
  7. Ghose, Anindita. "My grandmother’s indulgent recipes show how Indian women express their love" (in en-GB). https://www.theguardian.com/lifeandstyle/2023/feb/19/my-grandmothers-indulgent-recipes-show-how-indian-women-express-their-love. 
  8. Ghose, Anindita. "Why India must participate in the Venice Biennale" (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-01-11.
  9. Ghose, Anindita. "'A friendship stops being intense, but it doesn't stop being strong': Kamila Shamsie" (in en-IN). https://www.thehindu.com/books/interview-kamila-shamsie-eighth-novel-best-of-friends-british-pakistani-writer-anindita-ghose/article65922255.ece. 
  10. Ghose, Anindita. "Jhumpa Lahiri on her new book, a new language and a new land". பார்க்கப்பட்ட நாள் 11 January 2023.
  11. Jegsen, Cecilie. "At Work With: Bijoy Jain" (in பிரிட்டிஷ் ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-01-11.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=அனிந்திதா_கோசு&oldid=3925813" இலிருந்து மீள்விக்கப்பட்டது