அனில் பாபர்
அனில் கலாஜெராவ் பாபர் (Anil Kalajerao Baba 7 சனவரி 1950 - 31 சனவரி 2024) ஓர் இந்திய அரசியல்வாதி ஆவார், சிவசேனாவின் உறுப்பினராக கானாபூர் விதான் சபா தொகுதியில் இருந்து மகாராட்டிர சட்டமன்ற உறுப்பினராகப் பணியாற்றினார். [1]
அனில் கலாஜெராவ் பாபர் | |
---|---|
மகாராட்டிர சட்டமன்றத்தின் சட்டமன்ற உறுப்பினர் (இந்தியா)[1] | |
பதவியில் அக்டோபர்2019 – சனவரி 2024 | |
தொகுதி | கானாபூர் சட்டமன்றத் தொகுதி |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | கராத், பம்பாய் மாகாணம், இந்திய மேலாட்சி அரசு | 7 சனவரி 1950
இறப்பு | 31 சனவரி 2024 சாங்கிலி, மகாராட்டிரம், இந்தியா | (அகவை 74)
தேசியம் | இந்தியா |
அரசியல் கட்சி | சிவ சேனா |
துணைவர் | சோபா |
பிள்ளைகள் | 2 |
வாழிடம்(s) | கார்தி, மகாராட்டிரா |
இணையத்தளம் | anilbabar.com |
வாழ்க்கை
தொகுஅனில் பாபர் ( அனில்ராவ் பாபர் என்று பரவலாக அறியப்படுகிறார்) கானாபூர் தாலுகாவில் உள்ள கார்டி கிராமத்தில் ஒரு விவசாயக் குடும்பத்தில் பிறந்தார். சிறு வயதிலேயே அரசியலில் ஈடுபட்ட இவர், 19 ஆம் வயதில் கார்டி கிராமத்தின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1990, 1999, 2014, 2019 ஆகிய நான்கு முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்துள்ளார் [2] சரத் பவாருடன் 15 ஆண்டுகள் தேசியவாத காங்கிரசு கட்சிக்காகப் பணியாற்றினார். பின்னர் 2014 இல் அனில் பாபர் சிவசேனாவில் சேர முடிவு செய்தார். 2019 மகாவிகாஸ் அகாடி அரசாங்கத்தின் போது அமைச்சர் பதவிக்கு அனில் பாபரின் பெயர் விவாதிக்கப்பட்டது, ஆனால் அந்த நேரத்தில் அமைச்சகத்தால் நிராகரிக்கப்பட்டார். 2022 மகாராஷ்டிரா அரசியல் நெருக்கடியின் போது சிண்டேவை ஆதரித்த பின்னர் முதல்வர் ஏக்நாத் சிண்டேவின் நெருங்கிய மற்றும் நம்பகமான கூட்டாளியாக அறியப்பட்டார். [2]
இறப்பு
தொகுபாபர் 31 சனவரி 2024 இல் தனது 74வது வயதில் நிமோனியா நோயினால் சாங்லியில் இறந்தார் [3]
அரசியல் வாழ்க்கை
தொகுஆண்டு | அலுவலகம் |
---|---|
1972 | சாங்கிலி ஜில்லா பரிசத் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார் |
1981 | சங்கலி ஜில்லா பரிசத்தின் கட்டிடத் துறையின் பேச்சாளராக நியமிக்கப்பட்டார் |
1982–1990 | கானாபூர் பஞ்சாயத்து சமிதியின் சபாநாயகர் |
1990 | மகாராட்டிர சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார் [4] |
1991 | தலைவர் (யஷ்வந்த் சககாரி சகர் கர்கானா லிமிடெட் கானாபூர்) |
1999 | மகாராட்டிர சட்டமன்றத்திற்கு மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார் [5] |
2001 | சாங்லி ஜில்லா மாதவர்த்தி சககாரி வங்கி லிமிடெட் இயக்குனர், சாங்லி |
1999–2008 | தலைவர் (நேஷனல் ஹெவி இன்ஜினியரிங் கோ-ஆப் லிமிடெட். புனே) |
2014 | மகாராஷ்டிரா சட்டமன்றத்திற்கு மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார் [6] |
2019 | மகாராஷ்டிரா சட்டமன்றத்திற்கு மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார் [1] |
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 "Khanapur Vidhan Sabha constituency result 2019".
- ↑ 2.0 2.1 "Shinde faction Shiv Sena MLA Anil Babar passes away at 74". இந்துஸ்தான் டைம்ஸ் (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 1 February 2024.
- ↑ Shiv Sena MLA Anil Babar passes away, Maharashtra CM Eknath Shinde offers condolences
- ↑ "Election Commission of India, Statistical Records 1990, Maharashtra Elections" (PDF).
- ↑ "Election Commission of India Statical Report 1999, Maharashtra Elections" (PDF).
- ↑ "Sitting and previous MLAs from Khanapur Assembly Constituency". http://www.elections.in/maharashtra/assembly-constituencies/khanapur.html.