மஹா விகாஸ் அகாடி
மகா விகாசு அகாடி அல்லது மகாராட்டிரா விகாசு அகாடி (தமிழ்: மகாராட்டிரா முன்னேற்ற அணி, English: Maharashtra Devolopment Front), எம். வி. ஏ. என சுருக்கமாக அழைக்கப்படுகிறது. இது 2019 மகாராட்டிர சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு சிவசேனா (உத்தவ் பிரிவு) ஷரத் தலைமையில் உத்தவ் தாக்கரே தலைமையில் உருவாக்கப்பட்ட மாநில அளவிலான அரசியல் கூட்டணியாகும். தேசியவாத காங்கிரசு கட்சி தேவகா சரத் பவார் மற்றும் இதேகாவின் சோனியா காந்தி, சமாஜ்வாதி கட்சி, பி. டபுள்யூ. பி. ஐ. இபொக (மா) மற்றும் சுயேச்சை சட்டமன்ற உறுப்பினர்கள் உட்பட பல அரசியல் கட்சிகளின் ஆதரவுடன் உருவானது.[1] [2] மவிஅ தற்போது மகாராட்டிரா சட்ட மேலவையில் மிகப்பெரிய கூட்டணியாக உள்ளது.[3] [4] மேலும் மகாராட்டிரா சட்டமன்றத்தில் அதிகாரப்பூர்வ எதிர்க்கட்சியாகவும் உள்ளது.[5]
மஹா விகாஸ் அகாடி | |
---|---|
சுருக்கக்குறி | எம்.வி.ஏ |
தலைவர் | உத்தவ் தாக்கரே (சிவசேனா (உத்தவ் பிரிவு)) |
தலைவர் | சரத் பவார்
(தேகக) |
தொடக்கம் | 26 நவம்பர் 2019 |
பிரிவு | ஜனநாயக முன்னணி |
மக்களவை உறுப்பினர்கள் எண்., | 10 / 48 |
மாநிலங்களவை உறுப்பினர்கள் எண்., | 9 / 19 |
சட்டமன்ற உறுப்பினர்கள் எண்., (மகாராஷ்டிர சட்டமன்றம்) | 78 / 288 |
சட்டமன்ற உறுப்பினர்கள் எண்., (மகாராஷ்டிரா சட்டமன்ற மேலவை) | 21 / 78 |
இந்தியா அரசியல் |
26 நவம்பர் 2019 அன்று நடந்த கூட்டத்திற்குப் பிறகு உத்தவ் தாக்கரே மவிஅவின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் 28 நவம்பர் 2019 அன்று மகாராஷ்டிர மாநிலத்தின் 19வது முதலமைச்சராக பதவிப் பிரமாணம் செய்து கொண்டார்.[6] [7]
உருவாக்கம்
தொகு2019 மகாராட்டிரா அரசியல் நெருக்கடியின் விளைவாக மகாராட்டிராவில் பாஜக அல்லாத அரசியல் கட்சிகளால் இந்த கூட்டணி உருவாக்கப்பட்டது. இங்கு 2019க்குப் பிறகு முதல்வர் மற்றும் பிற முக்கிய துறைகளுக்கான பதவிகளுக்கான பாஜகவுடனான கருத்து வேறுபாடு காரணமாக சிவசேனா கூட்டணியை விட்டு வெளியேறியது. சரத் பவார், சஞ்சய் ராவுத், அகமது படேல் மற்றும் தேகக, இதேகா மற்றும் சிவசேனா முழுவதும் உள்ள பிற தலைவர்கள் சிவசேனா மற்றும் பாஜக பிரிந்த பின்னர் புதிய கூட்டணியை உருவாக்க உழைத்தனர். மோடியின் அமைச்சரவையில் சிவசேனாவின் ஒரே மத்திய அமைச்சரான அரவிந்த் சாவந்த் தனது பதவி விலகலை சமர்ப்பித்தார்.[8]
2022ஆம் ஆண்டில், ஒரு கட்சிக் கூட்டத்தின் போது, உத்தவ் தாக்கரே தேமுகூட்டணியிலிருந்து வெளியேறுவதற்கான தனது நடவடிக்கையை விளக்கினார். அவர் கூறுகையில், “தேசிய லட்சியங்களை நிறைவேற்ற பாஜகவை முழு மனதுடன் ஆதரித்தோம். மகாராட்டிராவில் நாங்கள் தலைமை தாங்கும் போது அவர்கள் தேசிய அளவில் செல்வார்கள் என்பது புரிந்துணர்வு. ஆனால் நாங்கள் காட்டிக் கொடுக்கப்பட்டோம். எங்கள் வீட்டில் எங்களை அழிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அதனால் நாங்கள் திருப்பி அடிக்க வேண்டியதாயிற்று". பா.ஜ.க தனது அரசியல் வசதிக்கு ஏற்ப தன் கூட்டணி கட்சிகளை தூக்கி எறிவதாக தாக்கரே குற்றம் சாட்டினார். இவர், “பாஜக என்பது இந்துத்துவாவைக் குறிக்காது. பாஜகவுடன் கூட்டணி வைத்து 25 ஆண்டுகளை சிவசேனா வீணடித்துவிட்டது என்ற எனது கருத்துக்கு நான் உறுதியாக உள்ளேன்".[9]
பணி
தொகுகூட்டணிக்கட்சிகளிடையே உள்ள மாறுபட்ட சித்தாந்தங்களைக் கருத்தில் கொண்டு, கூட்டணியின் வழிகாட்டுதலுக்காக இரண்டு குழுக்களை அமைக்கும் திட்டம் இருந்தது. பொதுவான குறைந்தபட்ச திட்டத்தை செயல்படுத்துவதற்கான ஒருங்கிணைப்புக் குழு மற்றும் கட்சித்தலைவர்களை உள்ளடக்கிய பிற உயர் முடிவெடுக்கும் குழு.[10]
2022 மகாராஷ்டிரா அரசியல் நெருக்கடி
தொகுசிவசேனாவின் மூத்த தலைவரான ஏக்நாத் சிண்டே, மகா விகாசு அகாடியை உடைத்து மீண்டும் பாஜக-சிவ சேனா கூட்டணியை அமைக்க விரும்பினார். இதையடுத்து தனது கட்சியின் 2/3 உறுப்பினர்களின் ஆதரவை திரட்டினார்.[11] [12]
சூன் 29 அன்று, உத்தவ் தாக்கரே, நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு முன்னதாக இரவில் முதல்வர் மற்றும் சட்ட மேலவை உறுப்பினர் பதவியிலிருந்து விலகினார். சூன் 30 அன்று ஏக்நாத் சிண்டே புதிய முதலமைச்சராகவும் தேவேந்திர பத்னாவிசு துணை முதல்வராகவும் பதவியேற்றனர்.[13]
தற்போதைய கூட்டணி உறுப்பினர்கள்
தொகு- குறிப்பு: ராஜ்யசபா மற்றும் லோக்சபாவில் உள்ள எம்.பி.க்களில், மகாராஷ்டிரா தொகுதிகளில் உள்ளவர்கள் மட்டுமே குறிப்பிடப்பட்டு உள்ளனர்.
கட்சி | சின்னம் | கொடி | மராட்டிய சட்டமன்றத்தில் உள்ள உறுப்பினர்கள் | மாராட்டிய மேலவையில் உள்ள உறுப்பினர்கள் | மக்களவை உறுப்பினர்கள் | மாநிலங்களவை உறுப்பினர்கள் | |
---|---|---|---|---|---|---|---|
இந்திய தேசிய காங்கிரசு | 45 | 8 | 1 | 3 | |||
தேசியவாத காங்கிரஸ் கட்சி (சரத்சந்திர பவார்) | 19 | 8 | 4 | 3 | |||
சிவ சேனா (உத்தவ் பாலசாகேப் தாக்கரே) | 17 | 6 | 6 | 3 | |||
சமாஜ்வாதி கட்சி | 2 | ||||||
இந்தியப் பொதுவுடமைக் கட்சி | |||||||
இந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) | 1 | ||||||
இந்திய உழைப்பாளர் மற்றும் தொழிலாளர் கட்சி | 1 | 1 | |||||
ஆம் ஆத்மி கட்சி | |||||||
சமாஜ்வாதி கன்ராஜ்ஜிய கட்சி | |||||||
Total | 85/288 | 24/78 | 11/48 | 9/19 |
கடந்த உறுப்பினர்கள்
தொகுகட்சி | மாநிலம்(கள்) | கூட்டணியை விட்டு விலகிய ஆண்டு | |
---|---|---|---|
ப்ரகார் ஜன்சக்தி கட்சி | மராட்டியம் | 2022 | |
பகுஜன் விகாசு அகாதி | மராட்டியம் | 2022 | |
சிவ சேனா | மராட்டியம் | 2022 | |
தேசியவாத காங்கிரஸ் கட்சி | மராட்டியம் | 2023 | |
ஐக்கிய ஜனதா தளம் | மராட்டியம் , பிகார் | 2024 | |
இராஷ்ட்ரிய சமாஜ் பக்ஷா | மராட்டியம் | 2024 | |
வஞ்சித் பகுஜன் அகாதி | மராட்டியம் | 2024 |
மாநகராட்சிகளில் நிலை
தொகுமாநகராட்சி | இருக்கைகள் | ஆளும் கட்சி | கடந்த தேர்தல் |
---|---|---|---|
பிரஹன்மும்பை மாநகராட்சி | 137 / 227
|
சிவசேனா | |
புனே முனிசிபல் மாநகராட்சி | 64 / 162
|
பாரதிய ஜனதா கட்சி | |
நாக்பூர் மாநகராட்சி | 32 / 151
|
||
தானே மாநகராட்சி | 37 / 131
|
சிவசேனா | |
பிம்பிரி-சிஞ்ச்வடு மாநகராட்சி, புனே | 45 / 128
|
பாரதிய ஜனதா கட்சி | |
நாசிக் மாநகராட்சி | 47 / 122
|
||
சோலாப்பூர் மாநகராட்சி | 39 / 102
|
||
அமராவதி மாநகராட்சி | 22 / 87
|
||
உல்ஹாஸ்நகர் மாநகராட்சி | 54 / 78
|
||
அகோலா மாநகராட்சி | 26 / 80
|
பாரதிய ஜனதா கட்சி | |
ஜல்கான் மாநகராட்சி | 60 / 75
|
சிவசேனா | |
அகமதுநகர் மாநகராட்சி | 42 / 68
|
||
கல்யாண்-மாநகராட்சி | 36 / 122
|
||
நவி மும்பை மாநகராட்சி | 51 / 111
|
பாரதிய ஜனதா கட்சி | |
சங்கலி-மிராஜ்-குப்வாட் மாநகராட்சி | 40 / 78
|
தேசியவாத காங்கிரஸ் கட்சி | |
பன்வெல் மாநகராட்சி | 27 / 78
|
பாரதிய ஜனதா கட்சி | |
பர்பானி மாநகராட்சி | 54 / 65
|
இந்திய தேசிய காங்கிரஸ் | |
நான்டெட்-வகாலா மாநகராட்சி | 74 / 81
|
||
மாலேகான் மாநகராட்சி | 60 / 84
|
தேசியவாத காங்கிரஸ் கட்சி | |
துலே மாநகராட்சி | 15 / 74
|
பாரதிய ஜனதா கட்சி | |
லத்தூர் மாநகராட்சி | 37 / 70
|
இந்திய தேசிய காங்கிரசு | |
மீரா-பயந்தர் மாநகராட்சி | 33 / 95
|
பாரதிய ஜனதா கட்சி | |
வசாய்-விரார் நகர மாநகராட்சி | 6 / 115
|
பகுஜன் விகாஸ் ஆகாடி | |
பிவாண்டி-நிசாம்பூர் மாநகராட்சி]] | 65 / 90
|
இந்திய தேசிய காங்கிரசு | |
கோலாப்பூர் மாநகராட்சி | 63 / 81
|
||
சந்திரபூர் மாநகராட்சி | 36 / 66
|
பாரதிய ஜனதா கட்சி |
- ↑ "Peasants and Workers Party MLA Shyamsundar Shinde, CPI(M) member Vinod Nikole and Swabhimani Paksha MLA Devendra Bhuyar are the MLAs from smaller parties who were present for the MVA meeting".
- ↑ "Sena NCP Congress alliance could be named Maha Vasooli Aghadi". Clipper28.com. பார்க்கப்பட்ட நாள் 26 November 2019.[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ "Maharashtra Legislative Council polls: MVA bags 3 seats, defeats BJP on Gadkari's home turf".
- ↑ Maharashtra Legislative Council
- ↑ Maharashtra Legislative Assembly
- ↑ "Udhav Thackeray named as CM candidate of Maha Vikas Aghadi". First Post. 26 November 2019. பார்க்கப்பட்ட நாள் 26 November 2019.
- ↑ "Udhav Thackeray swearing in as CM". Times of India. பார்க்கப்பட்ட நாள் 28 November 2019.
- ↑ "Shiv Sena's MP Arvind Sawant resigns from Modi cabinet". Scroll.in. பார்க்கப்பட்ட நாள் 26 November 2019.
- ↑ ""Wasted 25 Years In Alliance With BJP...," Says Uddhav Thackeray". https://www.ndtv.com/india-news/uddhav-thackeray-says-wasted-25-years-in-alliance-with-bjp-2725461.""Wasted 25 Years In Alliance With BJP.
- ↑ "Two panels to guide maha Vikas Aghadi". Deccan Herald. 22 November 2019. பார்க்கப்பட்ட நாள் 26 November 2019.
- ↑ "Maharashtra: The political crisis brewing in India's richest state".
- ↑ "Maharashtra crisis: Uddhav Thackeray-led faction in hopeless ."
- ↑ "Eknath Shinde Takes Oath As Chief Minister, Devendra Fadnavis His Deputy".