சஞ்சய் ராவுத்
இந்திய அரசியல்வாதி
சஞ்சய் இராஜாராம் ராவுத் (Sanjay Rajaram Raut) (பிறப்பு: 15 நவம்பர் 1961) இந்தியாவின் சிவ சேனா கட்சியின் அரசியல்வாதியும், இந்திய நாடாளுமன்றத்தின் மாநிலங்களவை உறுப்பினரும் ஆவார். மேலும் இவர் சிவ சேனா கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர்களின் தலைவராக செயல்படுகிறார். இவர் சிவ சேனா கட்சியின் அதிகாராபூர்வ பத்திரிக்கையான சாம்னாவின் ஆசிரியராக 28 நவம்பர் 2019 முதல் 1 மார்ச் 2020 முடிய பணியாற்றினார்.[3][4]
சஞ்சய் இராஜாராம் ராவுத் | |
---|---|
இந்திய நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 5 சூலை 2022 | |
தொகுதி | மகாராட்டிரா |
பதவியில் 5 சூலை 2004 – 4 சூலை 2022 | |
தொகுதி | மாநிலங்களவை உறுப்பினர் |
சிவ சேனா கட்சியின் மாநிலங்களவைத் தலைவர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 2005 | |
சாம்னா பத்திரிக்கை ஆசிரியர் | |
பதவியில் 28 நவம்பர் 2019 – 1 மார்ச் 2020 | |
முன்னையவர் | உத்தவ் தாக்கரே |
பின்னவர் | ராஷ்மி தாக்கரே |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 15 நவம்பர் 1961[1] அலிபாக் நகரம், ராய்கட் மாவட்டம், மகாராட்டிரா, இந்தியா |
தேசியம் | இந்தியர் |
அரசியல் கட்சி | சிவ சேனா |
துணைவர் | வர்ஷா ராவுத் (தி. 1993) [1] |
உறவுகள் | சுனில் ராவுத் (சகோதரன்) |
பிள்ளைகள் | 2 |
முன்னாள் கல்லூரி | மும்பை பல்கலைக்கழகம் |
வேலை | அரசியல்வாதி, பத்திரிக்கையாளர், திரைப்பட தயாரிப்பாளர்[2] |
பண மோசடி வழக்கு
தொகுபண மோசடி வழக்கில் சஞ்சய் ராவுத், அமலாக்கத் துறையால் விசாரிக்கப்பட்டு, தற்போது சிறப்பு நீதிமன்றத்தால் 22 ஆகஸ்டு 2022 முடிய நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.[5]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 "Detailed Profile: Shri Sanjay Raut". Archive.india.gov.in. பார்க்கப்பட்ட நாள் December 31, 2019.[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ "Thackeray: It is not easy to make film on Balasaheb, says Shiv Sena chief Uddhav- Firstpost" (in en-US). Firstpost. https://www.firstpost.com/entertainment/thackeray-it-is-not-easy-to-make-film-on-balasaheb-says-shiv-sena-chief-uddhav-4270727.html.
- ↑ "सामना वृत्तपत्र". Archived from the original on 2009-05-24. பார்க்கப்பட்ட நாள் 2022-08-13.
- ↑ "Clerk-turned-editor charts Sena's success Raut". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 23 November 2019. பார்க்கப்பட்ட நாள் 12 May 2020.
- ↑ Court sends Sanjay Raut to judicial custody till Aug 22