2024 மகாராட்டிர சட்டப் பேரவைத் தேர்தல்


2024 மகாராட்டிர சட்டப் பேரவைத் தேர்தல் (2024 Maharashtra Legislative Assembly election) என்பது மகாராட்டிர சட்டப் பேரவையின் 288 உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்காக 2024ஆம் ஆண்டில் மகாராட்டிரத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடத்தப்படும் என்று ஊகிக்கப்படுகிறது.

2024 மகாராட்டிர சட்டப் பேரவைத் தேர்தல்

← 2019 அக்டோபர் 2024 2029 →

மகாராட்டிர சட்டப் பேரவையின் அனைத்து 288 உறுப்பினர்களும்
அதிகபட்சமாக 145 தொகுதிகள் தேவைப்படுகிறது
  Majority party Minority party Third party
 

தலைவர் தேவேந்திர பத்னாவிசு பிரித்திவிராசு சவான் அஜித் பவார்
கட்சி பா.ஜ.க காங்கிரசு தேகாக
கூட்டணி ம.யு. ம.வி.அ. ம.யு.
தலைவரான
ஆண்டு
2014 2024 2024
தலைவர்
போட்டியிட்ட
தொகுதி
நாக்பூர் தென்மேற்கு சகோலி பாராமதி
முந்தைய
தேர்தல்
25.75%, 105 இருக்கைகள் 15.87%, 44 இருக்கைகள் கடந்த தேர்தலுக்கு பிறகு கட்சி பிளவுபட்டது
முன்பிருந்த தொகுதிகள் 104 45 40

  Fourth party Fifth party Sixth party
 

தலைவர் ஏக்நாத் சிண்டே உத்தவ் தாக்கரே ஜெயந்த் பட்டீல்
கட்சி சிவ சேனா சிசே (உதா) தேகாக (சப)
கூட்டணி ம.யு. ம.வி.அ. ம.வி.அ.
தலைவரான
ஆண்டு
2022 2022 2024
தலைவர்
போட்டியிட்ட
தொகுதி
கோப்ரி-பச்பகடி ச.மே.உ. இஸ்லாம்பூர்
முந்தைய
தேர்தல்
கடந்த தேர்தலுக்கு பிறகு கட்சி பிளவுபட்டது கடந்த தேர்தலுக்கு பிறகு கட்சி பிளவுபட்டது கடந்த தேர்தலுக்கு பிறகு கட்சி பிளவுபட்டது
முன்பிருந்த தொகுதிகள் 40 17 13

மகாராஷ்டிரா சட்டப் பேரவைத் தொகுதிகள்

முந்தைய முதலமைச்சர்

ஏக்நாத் சிண்டே
சிவ சேனா

தேர்தலுக்கு பின் முதலமைச்சர்

TBD

பின்னணி

தொகு

மகாராட்டிரத்தில்முந்தைய சட்டப் பேரவைத் தேர்தல் 2019 அக்டோபரில் நடைபெற்றது. பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான தே.ஜ.கூ. கூட்டணி[1] ஆட்சி அமைக்க தெளிவான பெரும்பான்மையைப் பெற்றது, ஆனால் உள் மோதல் காரணமாக, சிவ சேனா, தேசியவாத காங்கிரசு கட்சியுடனும் இந்திய தேசிய காங்கிரசுடன் புதிய கூட்டணியை உருவாக்க தே.ஜ.கூ.கூட்டணியில் வெளியேறியது. இந்த கூட்டணிக்கு மஹா விகாஸ் அகாடி (ம.வி.அ.) என்று பெயரிடப்பட்டது[2] மற்றும் அது சிவ சேனா தலைவர் உத்தவ் தாக்கரே முதல்வராக பதவியேற்று மாநில அரசாங்கத்தை அமைத்தது.

2022 மகாராட்டிர அரசியல் நெருக்கடியைத் தொடர்ந்து, சிவ சேனா அரசியல்வாதி ஏக்நாத் சிண்டே, தனது கட்சியைச் சேர்ந்த 40 எம்எல்ஏக்களுடன் சேர்ந்து, சிண்டே புதிய முதலமைச்சராகி பாஜகவுடன் இணைந்து ஆட்சி அமைத்தார். 2023 மகாராட்டிர அரசியல் நெருக்கடிக்குப் பிறகு, தேசியவாத காங்கிரசு கட்சியின் அஜித் பவார் பிரிவும் அரசாங்கத்தில் இணைந்தது.

2024 இந்தியப் பொதுத் தேர்தலில் இந்தியக் கூட்டணி பெரிய அளவில் முன்னேறியது. பொதுத்தேர்தலின் உந்துதல் எப்படி இருக்குமா என்பதை இந்தத் தேர்தல் காட்டும்.

அட்டவணை

தொகு
வாக்கெடுப்பு நிகழ்வு அட்டவணை
அறிவிப்பு தேதி 22 அக்டோபர் 2024
வேட்புமனு தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி 29 அக்டோபர் 2024
வேட்புமனு பரிசீலனை 30 அக்டோபர் 2024
வேட்பு மனு திரும்பப் பெறும் இறுதி தேதி 04 நவம்பர் 2024
வாக்குப்பதிவு தேதி 20 நவம்பர் 2024
வாக்கு எண்ணிக்கை தேதி 23 நவம்பர் 2024

கட்சிகளும் கூட்டணிகளும்

தொகு
கட்சி/கூட்டணி கொடி சின்னம் தலைவர் போட்டியிடும் தொகுதிகள்
மஹா யுதி பாரதிய ஜனதா கட்சி     தேவேந்திர பத்னாவிசு 148
இந்தியக் குடியரசுக் கட்சி (அதாவலே)   ராம்தாஸ் அதவாலே 1
சிவ சேனா     ஏக்நாத் சிண்டே 85
தேசியவாத காங்கிரசு கட்சி     அஜித் பவார் 55
ஜன் சுராஜ்ய சக்தி   வினய் கோரே 2
இராஷ்டிரிய யுவ சுவாபிமன் கட்சி     ரவி ராணா 1
இராஜர்ஷி ஷாகு விகாஸ் அகாதி     இராஜேந்திர பட்டேல் யத்ரவ்கர் 1
மஹா விகாஸ் அகாடி இந்திய தேசிய காங்கிரசு     நானா பட்டோலே 102

Q

சிவ சேனா (உபாதா)     உத்தவ் தாக்கரே 93
தே.கா.க.(ச.ப.)     ஜெயந்த் பட்டீல் 88
இந்திய விவசாயிகள் மற்றும் தொழிலாளர் கட்சி     ஜெயந்த் பிரபாகர் பாட்டீல் 5
இந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்)     அசோக் தவாலே 4
சமாஜ்வாதி கட்சி     அபு ஆஸ்மி 2
இந்தியப் பொதுவுடமைக் கட்சி     - 1
மகாராட்டிரா நவநிர்மாண் சேனா     ராஜ் தாக்ரே 137
அனைத்திந்திய மஜ்லிசே இத்திகாதுல் முசுலிமீன்     இம்தியாஸ் ஜலீல் 16
தேசியச் சமூக கட்சி     மகாதேவ் ஜங்கர் 151
வஞ்சித் பகுஜன் ஆகாடி     பிரகாசு அம்பேத்கர் 110
பகுஜன் சமாஜ் கட்சி     சுனில் டாங்கரே 288
ஆசாத் சமாஜ் கட்சி (கன்சிராம்)     சந்திரசேகர் ஆசாத் இராவணன் 40

குறிப்புகள்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "NDA: What is left of NDA after Akali Dal, Shiv Sena exit: Saamana - The Economic Times". The Economic Times. பார்க்கப்பட்ட நாள் 2021-04-29.
  2. "Ahmed Patel played a significant role in formation of MVA govt: Uddhav Thackeray". Hindustan Times (in ஆங்கிலம்). 25 November 2020. பார்க்கப்பட்ட நாள் 2021-04-29.