ரவி ராணா

இந்திய அரசியல்வாதி

ரவி கங்காதர் ராணா[1] (Ravi Gangadhar Rana) மூன்று முறை சுயேச்சையாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட இந்திய அரசியல்வாதியாவார். தற்போது மகாராஷ்டிர சட்டமன்றம்|மகாராஷ்டிர சட்டமன்றத்தின்]] 13 வது சட்டமன்றத்தில் விதர்பா பிராந்தியத்தின் அமராவதி மாவட்டத்தில் உள்ள பத்னேரா (விதான் சபா தொகுதி) யை தற்போது பிரதிநிதித்துவப்படுத்துகிறார்.[2]

ரவி ராணா
மகாராஷ்டிர சட்டமன்ற உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியில்
2009
முன்னையவர்சுல்பா சஞ்சய் கோட்கே
தொகுதிபத்னேரா
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு
ரவி கங்காதர் ராணா

28 ஏப்ரல் 1980
தேசியம் இந்தியா
அரசியல் கட்சிசுயேச்சை
துணைவர்நவ்நீத் கௌர்
முன்னாள் கல்லூரிஅமராவடி கல்லூரி (இளங்கலை வணிகவியல்), மகாராட்டிரம்

வாழ்க்கை

தொகு

அமராவதியின் சங்கர்நகரைச் சேர்ந்த கங்காதர் நாராயண் ராணாவுக்குப் மகனாகப் பிறந்தார். அமராவதி வாரியப் பள்ளியில் 1996 இல் தனது 10 மற்றும் 1998 இல் மேல் நிலையைக் கல்வியை முடித்தார். அமராவதி கல்லூரியில் 2000 ஆம் ஆண்டு இளங்கலை வணிகவியல் பட்டம் பெற்றார். [3][4]

முன்னாள் தெலுங்கு நடிகை நவ்நீத் கௌர் என்பவரை மணந்தார். நவநீத் பின்னர் தேர்தலில் வெற்றி பெற்று நாடாளுமன்ற உறுப்பினரானார்.

அரசியல்

தொகு

2019 ஆம் ஆண்டு மகாராஷ்டிர சட்டமன்றத் தேர்தலில் சிவசேனா வேட்பாளர் பிரிதி சஞ்சய் பந்தை 15541 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து தொடர்ந்து மூன்றாவது முறையாக உறுப்பினர் ஆனார். அதன்பிறகு, பாரதிய ஜனதா கட்சிக்கு நிபந்தனையற்ற ஆதரவளித்தார். [5]

மேற்கோள்கள்

தொகு
  1. "Member's Profile = Navneet Rana". Lok Sabha. பார்க்கப்பட்ட நாள் 19 February 2022.
  2. "Results of Maharashtra Assembly polls 2014". India Today. https://www.indiatoday.in/assembly-elections-2015/story/maharashtra-assembly-poll-results-bjp-shiv-sena-ncp-congress-223847-2014-10-19. பார்த்த நாள்: 3 November 2014. 
  3. "Ravi Rana(Independent(IND)):Constituency- BADNERA(AMARAVATI) - Affidavit Information of Candidate". myneta.info. பார்க்கப்பட்ட நாள் 23 March 2021.
  4. "Ravi Rana(Independent(IND)):Constituency- BADNERA(AMARAVATI) - Affidavit Information of Candidate". myneta.info. பார்க்கப்பட்ட நாள் 23 March 2021.
  5. ANI (24 November 2019). "Fadnavis govt has support of 175 MLAs, it will increase: MLA Ravi Rana". Business Standard India. https://www.business-standard.com/article/news-ani/fadnavis-govt-has-support-of-175-mlas-it-will-increase-mla-ravi-rana-119112400698_1.html. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=ரவி_ராணா&oldid=3731195" இலிருந்து மீள்விக்கப்பட்டது