தேசியவாத காங்கிரசு கட்சி (சரத்சந்திர பவார்)

தேசியவாத காங்கிரசு கட்சி (சரத்சந்திர பவார்)(Nationalist Congress Party – Sharadchandra Pawar) அல்லது என்சிபி-எஸ்பி என்பது இந்தியாவில் மகாராட்டிராவில் சரத் பவார் தலைமையில் உருவாக்கப்பட்ட ஓர் அரசியல் கட்சியாகும். அஜித் பவார் தலைமையிலான குழுவைத் தேசியவாத காங்கிரசு கட்சியாக இந்தியத் தேர்தல் ஆணையம் அங்கீகரித்த பின்னர் இக்கட்சி உருவாக்கப்பட்டது.[7]

Nationalist Congress Party – Sharadchandra Pawar
சுருக்கக்குறிNCP (SP)
தலைவர்சரத் பவார்
நிறுவனர்சரத் பவார்
பொதுச் செயலாளர்ஜெயந்த் பாட்டில்
மக்களவைத் தலைவர்சுப்ரியா சுலே
மாநிலங்களவைத் தலைவர்சரத் பவார்
தொடக்கம்8 பெப்ரவரி 2024 (6 மாதங்கள் முன்னர்) (2024-02-08)[1]
பிரிவுதேசியவாத காங்கிரஸ் கட்சி
தலைமையகம்81, லோடி எஸ்டேட், புது தில்லி[2]
கொள்கை
நிறங்கள்     Blue
இ.தே.ஆ நிலைState Party
கூட்டணி
மக்களவை உறுப்பினர்கள் எண்.,
8 / 543
மாநிலங்களவை உறுப்பினர்கள் எண்.,
2 / 245
சட்டமன்ற உறுப்பினர்கள் எண்.,
(State Legislative Assemblies)
Indian states
12 / 288
(Maharashtra)[6]
2 / 140
(Kerala)
சட்டமன்ற உறுப்பினர்கள் எண்.,
(Maharashtra Legislative Council)
3 / 78
தேர்தல் சின்னம்
இணையதளம்
ncp.org.in
இந்தியா அரசியல்

வரலாறு

தொகு

சூலை 2023இல், அஜித் பவார், 40 சட்டமன்ற உறுப்பினர்களுடன், சரத் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரசு கட்சி விட்டு வெளியேறி, ஆளும் சிவசேனா-பாஜக அரசாங்கத்தில் மகாராட்டிராவின் துணை முதல்வராகச் சேர்ந்தார்.[8] இதனால் தேசியவாத காங்கிரசு கட்சியில் பிளவு ஏற்பட்டது.[9] 7 பிப்ரவரி 2024 அன்று, இந்தியத் தேர்தல் ஆணையம் அஜித் பவார் தலைமையிலான பிரிவுக்குக் கட்சியின் பெயர் மற்றும் சின்னத்தை வழங்கியது.[7] சரத் பவார் தலைமையிலான பிரிவினர் "தேசியவாத காங்கிரசு கட்சி (சரத்சந்திர பவார்)" என்ற புதிய பெயரைப் பெற்றனர்.[10]

கட்சி சின்னம்

தொகு

இந்தியத் தேர்தல் ஆணையம் இக்கட்சிக்கு "ஒரு மனிதன் குழல் ஊதும் (trumpet) " (மராத்தியில் துட்டாரி வஜ்வனாரா மனூஸ்) சின்னத்தை ஒதுக்கியுள்ளது.[11]

கட்சிக் கொடி

தொகு

தேசியவாத காங்கிரசு கட்சியின் கொடி (சரத்சந்திர பவார்) இதன் சின்னம் மற்றும் இந்தியக் கொடியைக் கொண்டுள்ளது.[12]

மாநிலங்களவை உறுப்பினர்களின் பட்டியல்

தொகு
தற்போதைய மாநிலங்களவை உறுப்பினர்கள்
பெயர் மாநிலம் நியமன நாள் பதவி முடியும் நாள்
சரத் பவார் மகாராட்டிரம் 3 ஏப்ரல் 2020 2 ஏப்ரல் 2026
பௌசியா கான் மகாராட்டிரம் 3 ஏப்ரல் 2020 2 ஏப்ரல் 2026
  • தடித்த எழுத்துக்கள் மாநிலங்களவையில் தலைவரைக் குறிக்கிறது

மக்களவை உறுப்பினர்களின் பட்டியல்

தொகு
17ஆவது மக்களவை உறுப்பினர்கள்
பெயர் தொகுதி மாநிலம்
சுப்ரியா சுலே பாராமதி மகாராட்டிரம்
அமோல் கொல்ஹெ சிரூர் மகாராட்டிரம்
தைர்யஷீல் ராஜ்ஸிங் மோஹிதே பதி] மாடா மகாராட்டிரம்
பாஸ்கர் பகரே திண்டோரி மகாராட்டிரம்
சுரேஷ் கோபிநாத் மாத்ரே அலியாசு பால்யா மாமா பிவண்டி மகாராட்டிரம்
அமர் கலே வர்தா மகாராட்டிரம்
  • தடித்த எழுத்துக்கள் மக்களவையில் தேசியவாத காங்கிரசு (சப) தலைவரை குறிக்கிறது.

மேலும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "Election Commission allots 'NCP Sharadchandra Pawar' name to Sharad group". Economic Times. 8 Feb 2024. பார்க்கப்பட்ட நாள் 25 Mar 2024.
  2. "NCP factions get separate offices in Delhi". The Times of India. 19 October 2023. https://timesofindia.indiatimes.com/india/ncp-factions-get-separate-offices-in-delhi/articleshow/104539127.cms. 
  3. Rajeshwari Deshpande. (2006). Politics of Frustrations, Anxieties and Outrage. Economic and Political Weekly, 41(14), 1304–1307. வார்ப்புரு:JSTOR
  4. PALSHIKAR, SUHAS. “In the Midst of Sub-Democratic Politics.” Economic and Political Weekly 45, no. 7 (2010): 12–16. வார்ப்புரு:JSTOR.
  5. Deshpande, Alok (9 January 2020). "Gandhi's non-violence is the only way forward, says Sharad Pawar". The Hindu. https://www.thehindu.com/news/national/gandhis-non-violence-is-the-only-way-forward-says-pawar/article30526611.ece. 
  6. "Maharashtra Assembly Elections 2014: Maharashtra State Election Dates, Results, News, Governors and Cabinet Ministers 2014". dna.
  7. 7.0 7.1 "ECI rules Ajit Pawar faction is the real NCP". The Hindu. 6 Feb 2024. பார்க்கப்பட்ட நாள் 25 Mar 2024.
  8. "Ajit Pawar joins NDA govt, takes oath as deputy CM of Maharashtra". Economic Times. 2 Jul 2023. பார்க்கப்பட்ட நாள் 25 Mar 2024.
  9. "Election Commission admits split in NCP, calls both factions for hearing on Oct 6". The Indian Express. 15 Sep 2023. பார்க்கப்பட்ட நாள் 25 Mar 2024.
  10. "Sharad's party gets new name: It is Nationalist Congress Party — Sharadchandra Pawar". The Indian Express. 13 Feb 2024. பார்க்கப்பட்ட நாள் 25 Mar 2024.
  11. "Sharad Pawar inaugurates new party symbol at Raigad fort". The Hindu. 24 Feb 2024. பார்க்கப்பட்ட நாள் 25 Mar 2024.
  12. "Sharad Pawar-led NCP new flag, symbol released". India TV. 1 March 2024. பார்க்கப்பட்ட நாள் 1 Mar 2024.