பௌசியா கான்
பௌசியா கான் (Fouzia Khan) என்பவர் பௌசியா தாசீன் கான் என்றும் அழைக்கப்படுகிறார். இவர் தேசியவாத காங்கிரசு கட்சியினைச் சேர்ந்த இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் மகாராட்டிராவிலிருந்து இந்திய நாடாளுமன்றத்தின் மேலவையான மாநிலங்களவையின் உறுப்பினராக உள்ளார்.[1] இவர் தேசியவாத காங்கிரசின் மகளிர் பிரிவுத் தலைவர்.[2] பெளசியா கான் மகாராட்டிரா அரசாங்கத்தின் முன்னாள் அமைச்சர் ஆவார். இவர் இரண்டு முறை சட்டமன்ற மேலவையின் உறுப்பினராக இருந்ததுள்ளார்.[3][4] மகாராட்டிர அரசில் அமைச்சராகப் பணியாற்றிய முதல் முஸ்லீம் பெண் பெளசியா கான் ஆவார்.[5]
பௌசியா கான் Fauzia Tahseen Khan | |
---|---|
மாநிலங்களவை | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 03 ஏப்ரல் 2020 | |
முன்னையவர் | மஜீத் மேமாம் |
தொகுதி | மகாராட்டிரம் |
தேசியவாத காங்கிரசு கட்சி | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 20 ஏப்ரல் 2018 | |
தேசியத் தலைவர் தேசியவாத காங்கிரசு கட்சி | சரத் பவார் |
மகாராட்டிர மாநில வக்பு வாரிய தலைவர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 2009 | |
மாநில அமைச்சர் மகாராஷ்டிர அரசு | |
பதவியில் 2009–2014 | |
மாநில அமைச்சர், மகாராஷ்டிர அரசு | |
பதவியில் 2008–2009 | |
மகாராட்டிர சட்ட மேலவை | |
பதவியில் 21 பிப்ரவரி 2002 – 20 பிப்ரவரி 2008 | |
தொகுதி | நியமனம் |
பதவியில் 2008–2014 | |
தொகுதி | நியமனம் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 19 பெப்ரவரி 1957 அவுரங்காபாத், மகாராட்டிரம், மகாராட்டிரம், இந்தியா |
அரசியல் கட்சி | தேசியவாத காங்கிரசு கட்சி |
துணைவர் | தாசீன் அகமது கான் |
பிள்ளைகள் | 1 மகன், 1 மகள் |
வாழிடம்(s) | பர்பானி, மகாராட்டிரம், இந்தியா |
கல்வி | முனைவர் பட்டம் |
வேலை | விவசாயி/கல்வியாளர் |
சன்சாத் ரத்னா விருது (2022) | |
அமைச்சரவையில்
தொகுபெளசியா கான் பள்ளிக் கல்வி, பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாடு, கலாச்சார விவகாரங்கள், பொது நிர்வாகம், தகவல் மற்றும் மக்கள் தொடர்புகள், சிறுபான்மையினர் மேம்பாடு மற்றும் நெறிமுறை ஆகியவற்றிற்கான இலாகாக்களுடன் அமைச்சராக இருந்தார்.[6]
அரசியல்
தொகுசரத் பவாரின் தேசியவாத காங்கிரசு கட்சியைச் சேர்ந்தவர் பெளசியா கான். இவர் இரண்டு முறை மகாராட்டிராவின் சட்ட மேலவை உறுப்பினராக பணியாற்றியுள்ளார். இவரது தந்தை வழி இல்லம் மகாராட்டிர மாநிலம் அவுரங்காபாத்தில் உள்ளது. பெளசியா கான் தனது திருமணத்திற்குப் பிறகு பர்பானிக்கு குடிபெயர்ந்தார். இங்கு இவர் பர்பானி நகராட்சி தலைவர் பதவிக்குத் தேர்தலில் போட்டியிட்டு தனது அரசியல் வாழ்க்கையைத் தொடங்கினார்.
பங்களிப்புகள்
தொகுபெளசியா கான் அனைத்து மகாராஷ்டிரா சிறுபான்மை கல்வி அமைப்பின் கூட்டமைப்பிற்குத் தலைவராக உள்ளார். பர்பானியில் பல கல்வி நிறுவனங்களை நடத்தி வருகிறார்.[7] 2008ஆம் ஆண்டில், அவுரங்காபாத்தில் உள்ள மவுலானா ஆசாத் தேசிய உருது பல்கலைக்கழகத்தால் வளாகத்திற்கு வெளியே கல்வி வளாகத்தை உருவாக்க 5 ஏக்கர் நிலத்தை நன்கொடையாக வழங்கினார்.[8] மகாராட்டிராவைச் சேர்ந்த இவர் அவுரங்காபாத் அருகே குல்தாபாத்தில் அலிகர் முஸ்லீம் பல்கலைக்கழக மகாராட்டிர மையத்திற்கான 332 ஏக்கர் இடத்தை அடையாளம் காண்பதில் அமைச்சராக முக்கிய பங்கு வகித்தார்.[9][10]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Sharad Pawar, Ramdas Athawale, Udayanraje Bhosale among seven elected to Rajya Sabha". Pune Mirror. 18 March 2020. Archived from the original on 9 October 2021. பார்க்கப்பட்ட நாள் 19 March 2020.
- ↑ "Implementation of President rule is darkest day in history of state: NCP | the Arunachal Times". Archived from the original on 7 July 2017. பார்க்கப்பட்ட நாள் 13 June 2016.
- ↑ Ministers in Government of Maharashtra
- ↑ List of Members of Maharashtra Legislative Council பரணிடப்பட்டது 26 ஏப்பிரல் 2012 at the வந்தவழி இயந்திரம். (PDF) . Retrieved on 2012-06-26.
- ↑ http://www.ummid.com/news/November/08.11.2009/fauzia_khan_the_minister.htm
- ↑ Portfolio of Ministers in Government of Maharashtra.
- ↑ First Muslim lady in cabinet in Maharashtra. Ummid.com (2009-11-08). Retrieved on 2012-06-26.
- ↑ Land donated by MLC for Urdu University. Hindu.com (2008-10-12). Retrieved on 2012-06-26.
- ↑ AMU team inspects sites for Maharashtra campus. Twocircles.net (2011-10-29). Retrieved on 2012-06-26.
- ↑ AMU Announces Its Choice Of Land For Its Center In Maharashtra State பரணிடப்பட்டது 3 நவம்பர் 2016 at the வந்தவழி இயந்திரம். Myamu.in (2011-11-04). Retrieved on 2012-06-26.