அனுசுயா தேவி

இந்திய ஆன்மீக குரு

மாத்ருசிறீ அனுசுயா தேவி (Matrusri Anasuya Devi) (பிறப்பு 28 மார்ச் 1923 - 1985), அம்மா என்றும் அழைக்கப்படும் இவர், ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த ஒரு இந்திய ஆன்மீக குரு ஆவார்.

அனுசுயா தேவி
பிறப்பு(1923-03-28)28 மார்ச்சு 1923
மன்னவா ஊராட்சி, குண்டூர் மாவட்டம், (தற்போதைய ஆந்திரப் பிரதேசம்), இந்தியா
இறப்பு12 சூன் 1985(1985-06-12) (அகவை 62)
ஜில்லெல்லமுடி, ஆந்திரப் பிரதேசம், இந்தியா
இயற்பெயர்அனுசுயா
சமயம்இந்து சமயம்

ஆரம்ப கால வாழ்க்கை

தொகு

அனுசுயா தேவி ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் உள்ள குண்டூர் மாவட்டத்தில் உள்ள ஜில்லெல்லமுடி என்ற சிறிய கிராமத்தின் கிராம அதிகாரியான சீதாபதி ராவ் மற்றும் அவரது மனைவி ரங்கம்மா தம்பதியினருக்கு மார்ச் 28, 1923 இல் பிறந்தார்.[1] ரங்கம்மா ஐந்து குழந்தைகளை இழந்த பிறகு இவரைப்பெற்றெடுத்தாளர். [2] [3] [4]

5 மே 1936 இல், ஜில்லெல்லாமுடி கிராம அதிகாரியான பிரம்மாண்டம் நாகேசுவர ராவ் என்பவருடன் அனுசுயாவின் திருமணம் பாபட்லாவில் நடந்தது.[5]

தொண்டு தொழில்

தொகு

இவர், ஏழை மற்றும் ஏழைகளுக்கு உதவ தானிய வங்கியை உருவாக்கினார். கிராமத்திற்கு வரும் ஒவ்வொருவருக்கும் இவர் உணவு கொடுப்பார். 1958 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் தேதி அன்னபூர்ணாலயம் என்ற பொது உணவகத்தை நிறுவினார். இங்கு வந்த அனைவருக்கும் எளிய சைவ உணவு இரவும் பகலும் வழங்கப்படுகிறது. 1960 ஆம் ஆண்டில், பார்வையாளர்களுக்கு தங்குவதற்காக ஒரு குடியிருப்புப் பகுதி உருவாக்கப்பட்டது.

அனுசுயா அம்மா 1966 இல் ஒரு சமசுகிருதப் பள்ளியை நிறுவினார். இதில் பயின்ற மாணவர்கள் குறுகிய காலத்திற்குள் சரளமாக சமசுகிருதம் பேசவும் கற்றுக் கொண்டனர்.[6]

இவர் மதம் பாராமல் அனைவரையும் ஒரே மாதிரியாக நடத்தினார். [7]

இறப்பு

தொகு

அனுசுயா அம்மா 12 ஜூன் 1985 அன்று இறந்தார் [8] 1987 ஆம் ஆண்டு அனுசுயேசுவராலயம் கட்டப்பட்டு, அதில் அம்மாவின் முழு சிலை நிறுவப்பட்டது.

மேற்கோள்கள்

தொகு
  1. Conway, Timothy (1996). Women of Power & Grace: Nine Astonishing, Inspiring Luminaries of Our Time. New York: Wake Up Pr (April 1996).
  2. "50 Spiritual Appetizers: Principles of Good Governance By Vinod Dhawan", பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4828-3471-0, p.43
  3. Mother of All: A Revelation of the Motherwood of God in the Life and Teachings of the Mother, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 8178221144, Section 20
  4. Bollée, Willem.
  5. "", 17 February 2007, p.108
  6. "Matrusri Oriental College(MOC), Jillellamudi | College | Arts". eduhelp.in. பார்க்கப்பட்ட நாள் 2016-03-03.
  7. "Mathrusri Anasuya Devi - Gurusfeet.com". பார்க்கப்பட்ட நாள் 2 March 2016.
  8. "The Path of the Mother By Savitri L. Bess",

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=அனுசுயா_தேவி&oldid=3819766" இலிருந்து மீள்விக்கப்பட்டது