அனுபமா பகவத்

இந்திய சிதார் இசைக் கலைஞர்

அனுபமா பகவத் (Anupama Bhagwat) ஓர் இந்திய சித்தார் இசைக் கலைஞர் ஆவார்.

அனுபமா பகவத்
பிறப்பிடம்பிலாய், இந்தியா
இசை வடிவங்கள்இந்திய பாரம்பரிய இசை
தொழில்(கள்)இசைக்கலைஞர், சித்தார் கலைஞர்
இசைக்கருவி(கள்)சித்தார்
இணையதளம்www.anupamabhagwat.com

ஆரம்ப கால வாழ்க்கைதொகு

அனுபமா இந்தியாவின் சத்தீசுகர் மாநிலத்திலுள்ள பிலாய் நகரில் பிறந்தார். [1] ஆர். என். வர்மா என்பவர் அனுபமாவுக்கு 9 வயதாக இருக்கும்போது சித்தார் வாசிப்பதற்கு அறிமுகப்படுத்தினார். 13 வயதில் இம்தத்கரானாவில் சித்தார் இசை கலைஞர் பீமாலேந்து முகர்ச்சியிடம் பயிற்சி பெறும் வாய்ப்பைப் பெற்றார். 1994 ஆம் ஆண்டு அகில இந்திய வானொலி நிலையம் நடத்திய ஓர் இசைப் போட்டியில் அனுபமா முதலிடம் பிடித்தார். இவருக்கு இந்திய மனித வள மேம்பாட்டுஅமைச்சகம் தேசிய உதவித்தொகை வழங்கியது. இந்தியாவின் இந்திரா கலா இசை விசுவவித்யாலயாவிலிருந்து இசையில் முதுகலைப் பட்டம் பெற்றுள்ள இவர்[2] அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவின் பல நாடுகளில் இவர் தனது இசை நிகழ்ச்சிகளை நிகழ்த்தியுள்ளார். தற்போது அனுபமா இந்தியாவின் பெங்களூருவில் வசித்து வருகிறார். [3] மேலும் இவர் திருமணமானவர்.

இவருடைய குருதொகு

ருத்ரவீணை, சரசுவதி வீணை, சுர்பகார், சுர்சிங்கர், மந்தராபகார், தில்ருபா, எசுராச்சு, மற்றும் தார் செக்னாவா போன்ற அனைத்து பாரம்பரிய இந்திய கருவிகளிலும் திறமையானவராக இருந்தாலும் இவரது குருவும், இம்தத்கானி கரானாவின் இசை மேதையுமான ஆச்சார்யா பிமலேந்து முகர்ச்சி முதன்மையாக ஒரு சிதார் கலைஞராவார். அவர் வாய்ப்பாட்டிலும் சமமான திறமை பெற்றிருந்தார்.

நிகழ்ச்சிகள்தொகு

தற்போதைய தலைமுறையினருக்கு புத்துணர்ச்சியூட்டும் பல்துறை சித்தார் கலைஞரான அனுபமா இந்தியா, ஐக்கிய அமெரிக்கா கனடா, இங்கிலாந்து, இத்தாலி, பிரான்சு, சுவிட்சர்லாந்து மற்றும் பிரேசில் ஆகிய நாடுகளின் நடனப் பள்ளிகளில் நிகழ்ச்சிகளை நடத்தி விமர்சன ரீதியான பாராட்டுகளைப் பெற்றுள்ளார். கயாகி பாணியி குரலிசையில் நேர்த்தியும் தொழில்நுட்ப நுணுக்கங்களும் பெற்ற இசைக்கலைஞராக அனுபமா அறியப்படுகிறார். இவரது தொழில்நுட்ப திறமை உலகளவில் உள்ள ஒப்பீட்டாளர்களால் பாராட்டப்பட்டு வருகிறது. மேலும், அனுபமாவுக்கு "சுர்மானி" என்ற பட்டம் வழங்கப்பட்டுள்ளது.

உலக இசை நிகழ்ச்சிகளான தாமரை விழா, குளோபல் ரிதம்சு, சின்சினாட்டி ஸ்கொயர் போன்றவற்றிலும் அனுபமா இசை நிகழ்ச்சிகளை நிகழ்த்தியுள்ளார். மேலும் ஜுகல்பந்திகளுக்கு புகழ்பெற்ற பிறவகை இந்திய இசைக்கலைஞர்களுடனும் இணைந்து நிகழ்ச்சிகளை இசைத்துள்ளார். தற்போது இங்கிலாந்து மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இவர், லண்டனில் நடைபெற்ற மதிப்புமிக்க தர்பார் விழாவில் பங்கேற்ற கலைஞர்களில் ஒருவராக இருந்தார். வெளிநாட்டில் இதுபோன்ற மிகப்பெரிய திருவிழாவான தர்பாரர் நிகழ்ச்சியில் ‘சித்ரவீணா’ ரவிகிரண், அருணா சாய்ராம், சுதா ரகுநாதன், உசுதாத் சுயாத் கான், போன்ற மேதைகள் இசை நிகழ்த்தியுள்ளனர்.

விருதுகள் மற்றும் அங்கீகாரங்கள்தொகு

  1. 1994 ஆம் ஆண்டில் அகில இந்திய வானொலி இசை போட்டியில் முதலாவது இடம் பெற்றுள்ளார்.
  2. 1993-1996 வரை இந்திய அரசாங்கத்தின் மனித வள மேம்பாட்டு அமைச்சகத்தின் உதவித்தொகை பெற்றுள்ளார்.
  3. 1995 ஆம் ஆண்டில் சுர் சிருங்கர் சன்சாத் வழங்கிய 'சுர்மானி' என்ற பட்டத்தைப் பெற்றுள்ளார்.
  4. குளோபல் ரிதம் மற்றும் சாந்தி போன்ற உலக இசை நிகழ்ச்சிகளின் ஒரு பகுதியாக அனுபமா இருந்துள்ளார்.
  5. அமெரிக்காவிலுள்ள ஓகையோ கலைச் சங்கத்தின் 2000, 2002, 2004 மற்றும் 2008 ஆம் ஆண்டுகளில் நிதி மானியங்கள் பெற்றுள்ளர்.
  6. 2006 ஆம் ஆண்டில் இத்தாலிய தொழில்முறை வானியலாளர் வின்சென்சோ சில்வானோ காசுல்லி என்பவர் கண்டுபிடித்த ஒரு சிறு கோளுக்கு இவரது நினைவாக "185325 அனுபகவத்" எனப் பெயரிடப்பட்டது.

இசைத்தொகுப்புகள்தொகு

அனுபமா சங்கமம், ஈதர், எபிபானி, கலர்சு ஆஃப் சன்செட், சஞ்ச் போன்ற பல்வேறு இசைத்தொகுப்புகளையும் அனுபமா வெளியிட்டுள்ளார்.

குறிப்புகள்தொகு

  1. "Anupama - Biography". Anupama.org. 2009-03-03 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2009-05-08 அன்று பார்க்கப்பட்டது.
  2. http://anupamabhagwat.com/about-anupama-biography/
  3. "A performance of purity". The Tribune. http://www.tribuneindia.com/2002/20020411/cth2.htm#4. பார்த்த நாள்: 2009-05-08. 

வெளி இணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=அனுபமா_பகவத்&oldid=2919309" இருந்து மீள்விக்கப்பட்டது