அனுப்பிரியா பட்டேல்

இந்திய அரசியல்வாதி

அனுப்பிரியா பட்டேல், இந்தியாவின் உத்தரப் பிரதேச அரசியல்வாதி ஆவார். இவர் அப்னா தளம் (சோனேலால்) என்னும் கட்சியைச் சேர்ந்தவர். இவர் மிர்சாபூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு, பதினாறாவது மக்களவை மற்றும் பதினேழாவது மக்களவை உறுப்பினராக உள்ளார்.[1] இவர் 1981-ஆம் ஆண்டில் ஏப்ரல் 28-ஆம் நாளில், கான்பூரில் பிறந்தவர். சத்ரபதி ஷாகுஜி மகராஜ் பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ பயின்றார்.[1]இவர் நடப்பு வர்த்தகம் மற்றும் தொழில் அமைச்சகத்தின் இணை அமைச்சராக உள்ளார்.[2]

அனுப்பிரியா படேல்
2021இல் அனுப்பிரியா பட்டேல்
மக்களவை உறுப்பினர்
பதவியில்
16 மே 2014 - தற்போது வரை
தொகுதிமிர்சாபூர் மக்களவைத் தொகுதி, உத்திரப்பிரதேசம்
தனிப்பட்ட விவரங்கள்
அரசியல் கட்சிஅப்னா தளம் (சோனேலால்)
தொழில்ஆசிரியை, சமூக நலப்பணியாளர், அரசியல்வாதி

சான்றுகள்

தொகு
  1. 1.0 1.1 "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2015-04-26. பார்க்கப்பட்ட நாள் 2014-10-07.
  2. Ministers and their Ministries of India
"https://ta.wikipedia.org/w/index.php?title=அனுப்பிரியா_பட்டேல்&oldid=4086620" இலிருந்து மீள்விக்கப்பட்டது