அனுரக்தி (திரைப்படம்)

2017 ஆண்டைய திரைப்படம்

அனுராக்தி என்பது இந்தியாவின் கேரளாவில் தயாரிக்கப்பட்ட சமஸ்கிருதத் திரைப்படமாகும். இந்தியக் கலையான கூடியாட்டம் குறித்த திரைப்படமாகும். சம்ஸ்கிருத பாடல் கொண்ட முதல் சமஸ்கிருதத் திரைப்படம் இதுதான். இப்பாடல் முப்பரிமாணத்தில் படமாக்கப்பட்டது. இதுவே முதல் முப்பரிமான சமஸ்கிருதப் படமுமாகும். இப்படம் 2017ல் கோவாவில் நடைபெற்ற 48வது சர்வதேச திரைப்பட விழாவில் [1] IFFI) திரையிடப்பட்டது. 2018 [2] ஆண்டு ஜெய்ப்பூரில் நடைபெற்ற ஐந்தாவது ராஜஸ்தான் சர்வதேச திரைப்பட விழாவில் (RIFF) சிறந்த வட்டார திரைப்படத்திற்கான சிறப்பு நடுவர் விருதையும் இப்படம் வென்றது.

அனுரக்தி
இயக்கம்பி.கே.அசோகன்
தயாரிப்புபி.கே.அசோகன்
விஜித் நம்பியார்
திரைக்கதைசனல் மச்சத் நம்பூதிரி
டாக்டர். எஸ்.என்.மகேஷ் பாபு(வசனம்)
இசைஜாய் செருவத்தூர்
பாடல்-முரளிதரன்.பி
பாடகர்-விஜித் நம்பியார்
நடிப்புகலாமண்டலம் சிவன் நம்பூதிரி,
வாணி வசிஸ்த்,
ஸ்ரீஹரி ஆத்தூர்,
விஜித் நம்பியார்,
சஞ்சு மாதவ்,
பிந்து ஜெயன்
ஒளிப்பதிவுசசி இராமகிருஷ்ணன்
அன்மோல்
படத்தொகுப்புசுனில் கல்யாணி
கலையகம்ஹேப்பி டியூன் மீடியா
வெளியீடு2017
ஓட்டம்83 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிசமஸ்கிருதம்
ஆதரவு - Live Sanskrit team
ஆக்கச்செலவு28 லட்சம்

கதையமைப்பு தொகு

இந்தப் படம் பஞ்சாபி நடனக் கலைஞர் (நடிகை: வாணி வசிஷ்ட்) ஒரு ஆசிரியரிடம் (நடிகர்: கலாமண்டலம் சிவன் நம்பூதிரி) பழங்கால நடன வடிவமான கூடியாட்டத்தைக் கற்றுக் கொள்வதற்காக கேரளாவுக்கு வருகிறார். ஆசிரியரின் மகன் நடன கலைஞரை காதலிக்கிறான். இது மட்டுமின்றி தனது தந்தைக்கும் மாணவிக்கும் இடையிலான உறவையும் தவறாக நினைக்கிறான்.[1][3][4][5][6][7][8]

நடிகர்கள் தொகு

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 "World's First 3D Sanskrit Film Anurakthi Screened at 2017 IFFI Goa". India.com. 25 November 2017.
  2. "RIFF - Rajasthan International Film Festival, RIFF Jaipur, Jaipur RIFF, riff 2015, Jaipur Rajasthan largest Film Festival in JAIPUR, Rajasthan, INDIA". Riffjaipur.org.
  3. Anandan, S. (9 September 2017). "Maiden Sanskrit film in 3D to hit festival circuit". Thehindu.com.
  4. Gupta, Manas Sen (24 November 2017). "India's First 3D Sanskrit Film, 'Anurakthi', Is Receiving Rave Reviews At IFFI 2017". Topyaps.com. Archived from the original on 1 மார்ச் 2021. பார்க்கப்பட்ட நாள் 9 ஏப்ரல் 2022. {{cite web}}: Check date values in: |access-date= and |archive-date= (help)
  5. "World's first 3D Sanskrit film screened at IFFI - DD News". Ddnews.gov.in. பார்க்கப்பட்ட நாள் 21 January 2019.
  6. "World's first 3D Sanskrit film with song sequences wins hearts at IFFI 2017". Financialexpress.com. 22 November 2017.
  7. "'World's first' 3D Sanskrit film showcased at festival - Times of India". The Times of India.
  8. "संस्कृत में बनी दुनिया की पहली 3D फिल्म है लवस्टोरी, बजट सिर्फ 28 लाख रुपये". Aajtak.intoday.in.

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=அனுரக்தி_(திரைப்படம்)&oldid=3927082" இலிருந்து மீள்விக்கப்பட்டது