அனைத்திந்திய இமாம்களின் அமைப்பு
அனைத்திந்திய மசூதிகளின் இமாம்கள் அமைப்பு (All India Organization of Imams of Mosques) புது தில்லியில் 1976-ஆம் ஆண்டில் ஹஸ்ரத் மௌலானா ஜமீல் அஹ்மத் இல்யாசி என்பவரால் நிறுவப்பட்டது. இந்தியாவில் உள்ள 5 இலட்சத்திற்கு மேற்பட்ட பள்ளிவாசல்களில் தொழுகை நடத்தும் இமாம்கள் மற்றும் துணை இமாம்களின் வருவாய் மற்றும் சமூக-பொருளாதார பிரச்சினைகளை அனைத்து மட்டங்களிலும் பார்வையிட்டு தக்க நடவடிக்கை மேற்கொள்ள இந்த அமைப்பு நிறுவப்பட்டது. இந்த அமைப்பில் 10 இலட்சத்திற்கும் மேற்பட்ட இமாம்கள் மற்றும் துணை இமாம்கள் உறுப்பினர்களாக உள்ளனர். இதன் அனைத்திந்திய தலைமைப் புரவலராக இமாம் உமர் அகமது இல்யாசி செயல்படுகிறார்.[1]
உருவாக்கம் | 1976 |
---|---|
நிறுவனர் | ஹஸ்ரத் மௌலானா ஜமீல் அஹ்மத் இல்யாசி |
நிறுவப்பட்ட இடம் | புது தில்லி |
தலைமையகம் | இமாம் இல்லம், மஸ்ஜித் கஸ்தூரிபாய் மார்க், புது தில்லி - 110001 |
தலைமையகம் | |
தலைமை இமாம் | டாக்டர். இமாம் உமர் அகமது இல்யாசி |
வலைத்தளம் | https://www.allindiaimamorganization.org/home.html |
இந்து-இசுலாமிய சமய நல்லிணக்கத்திற்கான ராஷ்டிரிய சுயம்சேவாக் சங்கத்தின் தலைவர் மோகன் பாகவத் 22 செப்டம்பர் 2022 அன்று இமாம்கள் அமைப்பின் தேசியத் தலைவரான உமர் அகமது இலியாசியை புது தில்லியில் சந்தித்துப் பேசினார்.[2][3][4]
சாதனைகள்
தொகுஇந்த அமைப்பின் சாதனைகள் பின்வருமாறு:
- இந்திய உச்ச நீதிமன்றத்தில் மசூதிகளின் இமாம்களுக்கு நியாயமான மதிப்பூதியம் வழங்குவதற்கான வழக்கை நடத்தி வெற்றி பெற்றது.
- இந்தியா முழுவதும் ஒரு இலட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள வக்ஃபு சொத்துக்களை நிர்வகிப்பதற்கான அதிகாரத்தை, மாநில தீர்ப்பாயங்களில் வாதாடிப் பெற்றது.
- மசூதிகளின் இமாம்களின் அகில இந்திய அமைப்பை, இந்திய இமாம்களின் நியாயமான குரலாக இந்திய அரசு மற்றும் நீதித்துறையால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
அமைப்பின் முக்கிய கவலைகள்
தொகுஇந்தியாவில் மதம் மற்றும் இனங்களிடையே ஏற்பட்டும் பிளவுகள், அதனால் ஏற்படும் மோதல்கள், தீவிரவாதம் மற்றும் பயங்கரவாதம் குறித்து இந்த அமைப்பு கவலையுடன் நோக்குவதுடன், சமய நல்லிணக்கதிற்கும் பாடுபடுகிறது.
அமைப்பின் முன்னுரிமைகள்
தொகு- இமாம்களுக்கான பயிற்சித் திட்டங்களை வகுத்தல்
- மாற்றுச் சமயத்தவர்களின் நம்பிக்கை மற்றும் நாகரிகங்களுக்கு இடையிலான உரையாடல்கள் மேற்கொள்தல்
- இந்திய சமூகத்தின் அடித்தளத்தை வலுப்படுத்துதல்
- சமூகங்கள் மற்றும் நாடுகளிடையே நல்லிணக்கம் ஏற்படுத்துதல்
- மனித உரிமைகளுக்கு மரியாதை தருதல்
- சமயக் கருத்து வேறுபாடுகளை பேசி தீர்த்தல்