அனைத்திந்திய மருத்துவ அறிவியல் கழகம், மதுரை

அனைத்திந்திய மருத்துவ அறிவியல் கழகம், மதுரை (All India Institute of Medical Sciences, AIIMS Madurai) தமிழ்நாட்டின் மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் வட்டம், தோப்பூரில் அமைய இருக்கின்றது. அரசு மருத்துவக் கல்லூரியுடன் கூடிய மருத்துவ ஆய்வு பல்கலைக்கழகமும் அமைய இருக்கின்றது. தன்னாட்சி பெற்ற இந்த மருத்துவக் கழகம் இந்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகத்தின் நேரடி மேற்பார்வையில் இயங்குகின்றது.

அமைய இருக்கும் இடம்

தொகு

தோப்பூர் கிராமம், மதுரை - கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலை 7 (இந்தியா) ல் , மதுரையிலிருந்து திருமங்கலம் செல்லும் வழியில் 13 கிலோ மீட்டர் தொலைவில் தோப்பூர் என்னும் கிராமம் இருக்கின்றது. மதுரை வானூர்தி நிலையத்திலிருந்து 10 கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ளது. [1].

அடிக்கல் நாட்டு விழா

தொகு

மதுரை தோப்பூரில் 2019 ஆம் ஆண்டு ஜனவரி 27 ஆம் நாள் இந்திப் பிரதமர் நரேந்திர மோடி இம்மருத்துவமனைக்கான அடிக்கல் நாட்டுகிறார். இம்மருத்துவமனை 264 கோடி ரூபாய் செலவில் அமைய உள்ளது.[2]


வகுப்புகள்

தொகு

மதுரை, அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகத்தில் (எய்ம்ஸ்) முதலாம் ஆண்டு எம்பிபிஎஸ் மாணவர்களுக்கான வகுப்புகள் ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள தற்காலிக வளாகத்தில் ஏப்ரல் 4 2022ல் தற்காலிகமாக தொடங்கியது. புதுச்சேரியில் உள்ள ஜவஹர்லால் முதுகலை மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் (ஜிப்மர்), மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கான வழிகாட்டி நிறுவனமாக நியமிக்கப்பட்டுள்ளது.[3]

மேற்கோள்கள்

தொகு
  1. "மதுரைக்கு எய்ம்ஸ் மருத்துவமனை: கோரிக்கை வென்றது எப்படி?". மதுரைக்கு எய்ம்ஸ் மருத்துவமனை: கோரிக்கை வென்றது எப்படி?. 20 ஜூன் 2018. https://www.bbc.com/tamil/global-44548445. பார்த்த நாள்: 20 ஜூன் 2018. 
  2. "எய்ம்ஸ் அடிக்கல் நாட்டு விழாவிற்காக மதுரை வரும் பிரதமர் மோடி! போக்குவரத்து மாற்றம்! முழு விவரம்". இந்தியன் எக்ஸ்பிரஸ். 26 சனவரி 2019. பார்க்கப்பட்ட நாள் 26 சனவரி 2019.
  3. https://timesofindia.indiatimes.com/city/madurai/classes-for-1st-batch-begin-at-aiims-madurai/articleshow/90652008.cms