அனைத்தும் சாத்தியம் அருங்காட்சியகம்

சென்னையில் அமைந்துள்ள அருங்காட்சியகம்

அனைத்தும் சாத்தியம் அருங்காட்சியகம் என்பது தமிழ்நாட்டின், சென்னை, மெரீனா கடற்கரைக்கு எதிரே காமராசர் சாலையில் மாற்றுத் திறனாளிகளுக்கான மாநில ஆணையர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள ஒரு அருங்காட்சியகம் ஆகும். இது போன்ற அருங்காட்சியகம் தென்னிந்தியாவில் இங்குதான் முதன்முதலில் துவக்கப்பட்டுள்ளது. இந்த அருங்காட்சியகம் 6, சூன், 2022 அன்று துவக்கிவைக்கட்டது.[1] இதை பார்வையற்றவர்களும், சக்கர நாற்காலியில் வருபவர்களும் தனித்து சுற்றிப்பார்க்கும் வகையில் வடிவமைக்கபட்டுள்ளது.

ஒரு கோடி ரூபாய் செலவில் உருவாக்கபட்டுள்ள இந்த அருங்காட்சியகத்தில் மாற்றுத்திறனாளிகளின் வாழ்வாதாரத்திற்கு தேவையான உபகரணங்கள், தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய உதவிப் பொருட்கள் போன்றவை காட்சிப்படுத்தபட்டுள்ளன. அந்தப் பொருட்களை பயன்படுத்த, வாங்க தேவையான வழிகாட்டுதல்கள், செயல்முறை விளக்கங்களும் அளிக்கப்படுகின்றன. இங்கு மாற்றுத் திறனாளிகள் தடையற்ற சூழலில் வசிக்ககூடிய மாதிரி இல்லம் வடிவமைக்கப்பட்டுள்ளது.[2] இந்த அருங்காட்சியகத்தில் மாற்றுத் திறனாளி இளைஞர்கள் பணியாற்றுகின்றனர். இங்கு இயன்முறை மருத்துவர், பேச்சுப் பயிற்சியாளர் போன்றோரும் பணியாற்றுகின்றனர்.

அருங்காட்சியகத்தின் முதல் தளத்தில் உணவகம் செய்பட்டுவருகிறது. அதில் குறைந்த அளவு ஆண்டிச பாதிப்பு உள்ளவர்கள் பணியாற்றுகின்றனர். அவர்களுக்கு அடுமனை நடத்துவதற்கு, உணவு தயாரிப்பதற்கு, பரிமாறுவதற்கு, வாடிக்கையாளர்களுடன் இயல்பாக உரையாடுவதல் போன்றவற்றிற்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. மேலும் அவர்களுக்கான வேலை வாய்ப்புகளும் வழங்கப்படுகின்றன.[3]

மேற்கோள்கள் தொகு

  1. "தென்னிந்தியாவில் முதன்முறை - முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்த மாற்றுத் திறனாளிகள் அருங்காட்சியகத்தின் சிறப்பு அம்சங்கள்". Hindu Tamil Thisai. 2022-06-06. பார்க்கப்பட்ட நாள் 2023-05-23.
  2. குமார், ஸ்வேதா கண்ணன்,சந்தீப் (2023-01-14). ""மாற்றுத்திறனாளிகளும் தனித்து இயங்க முடியும்!"- அனைத்தும் சாத்தியம் அருங்காட்சியகத்துக்கு ஒரு விசிட்". https://www.vikatan.com/. பார்க்கப்பட்ட நாள் 2023-05-23. {{cite web}}: External link in |website= (help)CS1 maint: multiple names: authors list (link)
  3. "தலைநகரின் மியூசியம் கஃபே!". Hindu Tamil Thisai. 2023-04-25. பார்க்கப்பட்ட நாள் 2023-05-23.