அனைத்துலக ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் தமிழ்

அனைத்துலக ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் தமிழ் என்பது ஈழத்து புலம்பெயர்ந்த மக்களுக்கான 24 மணி நேர தொலைக்காட்சி, வானொலி மற்றும் நிகழ்நிலை சேவைகளை வழங்கும் ஒரு வெகுஜன ஊடக நிறுவனமாகும். இது சூன் 9, 1997 ஆம் ஆண்டு முதல் லண்டனைத் தலைமையிடமாகக் கொண்ட இந்த நிறுவனம் ஐரோப்பிய ஊடகச் சட்டத்தின் கீழ் உரிமம் பெற்று செயல்படுகின்றது.

அனைத்துலக ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் தமிழ்
தொடக்கம்9 சூன் 1997
நாடுஐக்கிய இராச்சியம்
ஒலிபரப்பப்படும் பகுதிஐக்கிய இராச்சியம்
இந்தியா
இலங்கை
ஐரோப்பா
தலைமையகம்லண்டன், ஐக்கிய இராச்சியம்
சகோதர ஊடகங்கள்ஐபிசி வானொலி, ஐபிசி பக்தி, ஐபிசி பகிடி, ஐபிசி இசை, ஐபிசி சிலுவை

2015 ஆம் ஆண்டில் இவ் நிறுவனம் அதிநவீன டிஜிட்டல் இசுடுடியோ உபகரணங்களுக்காக £2 மில்லியன் முதலீடு செய்ததாக அறிவித்தது. இந்த அலைவரிசை இப்போது ஐக்கிய இராச்சியம், இந்தியா மற்றும் இலங்கையில் உள்ள அதன் படப்பிடிப்புவளாகத்தின் மூலம் கிட்டத்தட்ட அனைத்து காணொளி உள்ளடக்கத்தையும் உயர் வரையறையில் உருவாக்குகிறது. ஐபிசி தமிழ் செய்மதி, மேலதிக ஊடக சேவை, வலையொளி (யூடியூப்) போன்ற தளத்தின் மூலமாக உலகெங்கிலும் கிடைக்கிறது.[1]

வரலாறு

தொகு

ஐபிசி தமிழ் 1997 இல் லண்டனில் ஒரு வானொலி நிலையமாக தொடங்கப்பட்டது. இவ்வானொலிச்சேவை ஐரோப்பியாவில் தொடங்கப்பெற்ற இரண்டாவது தமிழ் வானொலிச் சேவையாகக் கருதப்படுகிறது. அதன் பின்னர் ஊடக நிறுவனம் பல்வேறு அமைப்புகளின் கீழ் இயங்கி வருகிறது. 2014 ஆம் ஆண்டு முதல், இது லண்டன் தமிழ் மீடியா லிமிடெட் நிறுவனத்திற்குச் சொந்தமானது.

ஏப்ரல் 2015 இல் ஐபிசி தமிழ் என்ற தொலைக்காட்சி அலைவரிசையும் மற்றும் புதுப்பிக்கப்பட்ட செய்தி வலைத்தளத்தையும் உள்ளடக்கியதாக அமைப்பை விரிவுபடுத்தியது.

ஐபிசி தமிழ் வானொலி

தொகு

ஐபிசி தமிழ் வானொலி இலங்கை, இந்தியா, தென்னாபிரிக்கா, கிழக்கு நாடுகள் என்பவற்றிற்கான பிரத்தியேக ஒலிபரப்புகளையும் தினமும் குறிப்பிட்ட நேரங்களில் சிற்றலை மூலம் ஒலிபரப்பி வந்தது. இவ்வானொலிச் சேவை ஆரம்பமான போது ஏ. சி. தாசீசியஸ் இதன் பணிப்பாளராகப் பணி புரிந்தார்.

சஞ்சிகை

தொகு

ஐபிசி தமிழ் வானொலிச்சேவை 1998 இல் இருந்து 2000 ஆம் ஆண்டு வரை வரை புலம் என்றொரு சஞ்சிகையை இரு மாதத்துக்கு ஒன்று என வெளியிட்டது.

ஐபிசி தமிழ் தொலைக்காட்சி

தொகு
ஐபிசி தமிழ்
 
தொடக்கம்ஏப்ரல் 2015
நாடுஐக்கிய இராச்சியம்
ஒலிபரப்பப்படும் பகுதிஐக்கிய இராச்சியம்
இந்தியா
இலங்கை
ஐரோப்பா
தலைமையகம்லண்டன், ஐக்கிய இராச்சியம்
சகோதர ஊடகங்கள்ஐபிசி பக்தி, ஐபிசி பகிடி, ஐபிசி இசை, ஐபிசி சிலுவை

ஐபிசி தமிழ் என்பது ஈழத்து புலம்பெயர்ந்த மக்களுக்கான 24 மணி நேர தொலைக்காட்சி சேவை ஆகும். இது ஏப்ரல் 2015 இல் லண்டனில் ஒரு சம்பிரதாய நிகழ்வில் தொடங்கப்பட்டது. முக்கிய ஊடகவியலாளர்கள், பிரபலங்கள் மற்றும் தமிழ் சமூகத்தின் முன்னணி கலைஞர்கள் உட்பட 1500 க்கும் மேற்பட்டோர் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டனர்.

இந்த தொலைக்காட்சியில் பல நினைவு நிகழ்வுகள், கலந்துரையாடல்கள், இந்திய மற்றும் ஈழத்து புலம்பெயர்ந்த பிரபலங்களின் நேர்காணல்கள், தொடர்கள் மற்றும் திரைப்படங்கள் போன்ற பல வகையான நிகழ்ச்சிகளை தயாரித்து மற்றும் ஒளிபரப்பு செய்து வருகிறது.

ஐபிசி தமிழின் அலைவரிசைகள்
வகை அலைவரிசை
பொழுதுபோக்கு ஐபிசி தமிழ்
ஐபிசி தமிழ் கனடா
இசை ஐபிசி இசை
பக்தி ஐபிசி பக்தி
ஐபிசி சிலுவை
நகைச்சுவை ஐபிசி பகிடி
குழந்தைகள் ஐபிசி மழலை
பெண்கள் ஐபிசி மங்கை (வலையொளி)

ஐபிசி தமிழ் செய்தி இணையதளம்

தொகு

ஐபிசி தமிழ் செய்தி இணையதளம் (Ibctamil.com) என்பது 24 மணிநேரமும் புதுப்பிக்கப்பட்ட செய்தி இணையதளம். இலங்கை மற்றும் தென்னிந்தியாவை மையமாகக் கொண்டு உலக விவகாரங்களில் உள்ள அனைத்து முக்கிய நிகழ்வுகளையும் இந்த இணையதளம் உள்ளடக்கியது. இந்த இணையதளம் இலங்கையின் முதல் 100 இணையதளங்களில் தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளது.[2]

மேற்கோள்கள்

தொகு
  1. IBC Tamil TV, IBC Tamil TV Live Stream, பார்க்கப்பட்ட நாள் 7 February 2019
  2. "ibctamil.com Competitive Analysis, Marketing Mix and Traffic - Alexa". ttt-572a72f9ed.hub.alexa.com. Archived from the original on 2021-06-24. பார்க்கப்பட்ட நாள் 2021-06-22.

வெளி இணைப்புகள்

தொகு