அனைத்து வானத் தன்னியக்க அளக்கை

 

லாஸ் காம்பனாஸ் ஆய்வகத்தில் அவாத அ(ASAS) தொலைநோக்கிகள். ஒஈவிசெ தொலைநோக்கி பின்னணியில் தெரியும்.
அவா தஅ (ASAS)-வடக்கு தொலைநோக்கிகள் கலீகலா, மவுயி, கி

அனைத்து வானத் தன்னியக்க அளக்கை(அவாதஅ) ( ASAS ) என்பது போலந்து நாட்டுத் திட்டம் ஆகும். இது 1997 ஏப்பிரல் 7 அன்று வானத்தில் 14 பருமையை விட பொலிவாக இருக்கும் சுமார் 20 மில்லியன் நட்சத்திரங்களின் ஒளியளக்கைக் கண்காணிப்பு செய்ய செயல்படுத்தப்பட்டது. [1] இந்தத் தானியங்கி தொலைநோக்கிகள் 2004 மற்றும் 2006 இல் இரண்டு புதிய வால்மீன்களைக் கண்டுபிடித்தன. இது சிலியில் அமைந்துள்ள தெற்கு அவாதஅ அவாயில் அமைந்துள்ள தெற்கு அவாதஅ , இணையம் வழியாக வார்சா பல்கலைக்கழக ஆய்வகத்தின் கிரெசெகோர்சு போய்மான்சுகியால் மேலாளப்படுகிறது. 

இந்த எண்ணக்கருவைப் பிரின்சுட்டன் பல்கலைக்கழகத்தின் போலந்து வானியல் பேராசிரியர் போடன் பாசின்ஸ்கி தொடங்கினார். முன்வகைமைக் கருவி, தரவு வழிமுறை குறும்பாடம் போய்மான்சுகி என்பவரால் வடிவமைக்கப்பட்டு கட்டப்பட்டது. அவாதஅ திட்டத்தின் வேலை 1996 இல் வெறும் 1 மில்லியன்டாலர் பாதீட்டில் தொடங்கியது. சிலியின் லாஸ் காம்பனாஸ் ஆய்வகத்தில் அமைந்துள்ள தானியங்கி தொலைநோக்கி, தெற்கு அரைக்கோளத்தில் சுமார் ஒரு மில்லியன் நட்சத்திரங்களின் பொலிவைப் பதிவு செய்ய வடிவமைக்கப்பட்டுள்ளது. இருப்பினும், இது மிகவும் திறமையானதும் பல புதிய மாறி விண்மீன்களைக் கண்டறிய உதவியதுமாகும். திட்டம் பின்னர் விரிவுபடுத்தப்பட்டது. இது இப்போது லாஸ் காம்பனாஸ் ஆய்வகத்தில் அமைந்துள்ள நான்கு தொலைநோக்கிகளை இயக்குகிறது. சிலி கண்காணிப்பு மையம் வாழ்சிங்டனின் கார்னெகி நிறுவனத்தால் இயக்கப்படுகிறது. [2]

இதுவரை, இத்திட்டம் 50,000 மாறிகள் +28° சரிவுக்கு தெற்கே அமைந்துள்ளது. அதாவது இது அனைத்து வானத்தின் 3/4 பகுதியையும் உள்ளடக்கியுள்ளது. போய்மான்சுகி ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே சிலிக்கு வருகிறார். தொலைநோக்கி தானாகவே இயங்குகிறது. தரவு பரிமாற்றம் போன்ற வழக்கமான வேலைகள் ஒளியியல் ஈர்ப்பு வில்லைச் செய்முறை(ஒஈவிசெ) பார்வையாளர்களால் செய்யப்படுகிறது. அத்தகைய தலையீடு வாரத்திற்கு ஒரு முறை தேவைப்படுகிறது. விண்மீன்கள் நிறைந்த ஒவ்வொரு இரவிலும், ஒஈவிசெ பார்வையாளர் குவிமாடத்தைத் திறக்கும் போது அல்லது மூடும்போதுனவாதஅ சாவடி தானாகவே திறக்கப்படும் அல்லது மூடப்படும். [3]

கிரெசெகோர்சுகி போய்மான்சுகி திட்டம் போலந்தின் அறிவியல் ஆராய்ச்சிக்கான மாநிலக் குழுவால் ஆதரிக்கப்படுகிறது. திட்டத்திற்கு ஒஈவிசெ(OGLE) பார்வையாளர்கள் உதவுகிறார்கள். பாசின்சுகியை வில்லியம் கோல்டன் ஆதரித்தார்.

அவாதஅ வெளியீடுகள் தொகு

மேற்கோள்கள் தொகு

வெளி இணைப்புகள் தொகு