அன்செல்மி கேடான் தெசுமாரெசுட்டு
அன்செல்மி கேடான் தெசுமாரெசுட்டு (Anselme Gaëtan Desmarest)(மார்ச் 6, 1784 - ஜூன் 4, 1838) என்பவர்பிரான்சு நாட்டு விலங்கியலாளர் மற்றும் எழுத்தாளர் ஆவார். இவர் நிக்கோலசு தெசுமாரெசுட்டுவின் மகன் மற்றும் யூஜின் அன்செல்மே செபாசுடின் லியோன் தெசுமாரெசுட்டுவின் தந்தை ஆவார்.[1] தெசுமாரெசுட்டு, ஜார்ஜஸ் குவியர் மற்றும் அலெக்ஸாண்டரே பிரோங்னியார்ட் ஆகியோரின் சீடராக இருந்தார். 1815 ஆம் ஆண்டில், இவர் பியர் ஆண்ட்ரே லாட்ரெயிலுக்குப் பின் ஈகோல் நேசனோலே வெட்ரினேயரி டிஆல்பர்ட்டில் (École nationale vétérinaire d'Alfort) விலங்கியல் பேராசிரியராக நியமிக்கப்பட்டார். இவர் 1819-ல் அமெரிக்கத் தத்துவவியல் சங்கத்திற்கும்[2] 1820-ல் தேசிய மருத்துவக் கல்விகழகத்திற்கும் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
தெசுமாரெசுட்டு, ஹிஸ்டோரி நேட்டுரேலே டெசு டாஙாரசு, டெசு மானாகின்சு எட் டெசு டோடியர்சு (Histoire Naturelle des Tangaras, des Manakins et des Todiers) (1805), கன்சிடரேசன் ஜெனரேல்சு சூர் ல கிளாசி டெசு கிரஸ்டேயசு (Considérations générales sur la classe des crustacés)(1825), மேமோலாஜி அவ் டெசுகிரிப்சன் டெசு மாமிஃபெரெயசு (Mammalogie ou description des espèces des Mammifères)(1820) மற்றும் டிக்சோனாரி டெசு சயன்சௌ நேட்சுரேலிசு (Dictionnaire des Sciences Naturelles)(1816-30, ஆண்ட்ரே மேரி கான்ஸ்டன்ட் டுமெரில் உடன்) நூல்களை எழுதியுள்ளார்.
பழுப்பு பாசி டெசுமரெசுடியா டெசுமரெசுடின் இவரது நினைவாகப் பெயரிடப்பட்டதுடன்[3] இதனுடைய, குடும்பமும் (டெசுமரெசுடியேசியே) - வரிசையும் (டெசுமரெசுடியேல்சு) பெயரிடப்பட்டு, மாதிரி இனமாகக் கருதப்படுகிறது.
குறிப்பு
தொகுதெசுமாரெசுட்டின் சில படைப்புகள் 19 மற்றும் 20 ஆம் நூற்றாண்டு குறிப்புகளில் மேற்கோள் காட்டப்பட்டு, ஏ. ஜி. தெசுமாரெசுட்டு படைப்பாகக் கூறப்பட்டுள்ளது, இது பிழையானதாகும்.[4]
மேற்கோள்கள்
தொகு- ↑ Hans G. Hansson. "Anselme Gaëtan Desmarest". Biographical Etymology of Marine Organism Names. Göteborgs Universitet. Archived from the original on 27 October 2010. பார்க்கப்பட்ட நாள் September 21, 2010.
- ↑ "APS Member History". search.amphilsoc.org. பார்க்கப்பட்ட நாள் 2021-04-05.[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ Lamouroux, Jean Vincent Félix (1813). "Essai sur les genres de la famille des thalassiophytes non articulées" (in fr). Annales du Muséum d'Histoire Naturelle, Paris (Paris: G. Dufour et cie) 20: 43–45. இணையக் கணினி நூலக மையம்:2099267. http://img.algaebase.org/pdf/562E29B40301733B85MQrj41D8EE/17071.pdf. பார்த்த நாள்: 11 December 2017.
- ↑ O'Connell, Marjorie (1916). . The Habitat of the Eurypterida. p. 261.