அன்னலட்சுமி இராசதுரை

அன்னலட்சுமி இராசதுரை இலங்கைப் பத்திரிகை வரலாற்றில் ஐம்பது ஆண்டுகளாக ஒரு பெண் பத்திரிகையாளராக தன்னை நிலை நிறுத்திக் கொண்டவர். 'யாழ் நங்கை' என்ற புனைபெயரில் பல சிறுகதைகள் எழுதியவர்.

அன்னலட்சுமி இராசதுரை
பிறப்புயாழ் நங்கை
திருநெல்வேலி (இலங்கை)
தேசியம்இலங்கைத் தமிழர்
அறியப்படுவதுஎழுத்தாளர்

வாழ்க்கைச் சுருக்கம் தொகு

திருமதி அன்னலட்சுமி இராஜதுரை யாழ்ப்பாணம் திருநெல்வேலியைப் பிறப்பிடமாகக் கொண்டவர்.[1] திருநெல்வேலி செங்குந்த இந்துக் கல்லூரி, சுன்னாகம் இராமநாதன் கல்லூரி ஆகியவற்றில் கல்வி கற்றவர். பத்திரிகைத்துறை, ஆங்கிலம் ஆகியவற்றில் டிப்ளோமா தேர்ச்சிச் சான்றிதழ்கள் பெற்றார். ஓவியத்துறையிலும் ஆசிரியர் தராதரப் பத்திரம் பெற்றார்.

பத்திரிகைத் துறையில் தொகு

1962 ஆம் ஆண்டில் வீரகேசரியில் உதவி ஆசிரியராக தன்னை இணைத்துக் கொண்ட இவர், செய்திகளோடு 'மாணவர் கேசரி' என்னும் பக்கத்தையும் பொறுப்பாகக் கவனித்தார். 1966 இல் வீரகேசரி நிறுவனம் வெளியிட்ட 'ஜோதி' என்னும் குடும்ப வார இதழின் பொறுப்பாசிரியாரானார். 1969 ஆம் ஆண்டு முதல் வீரகேசரி நாளிதழின் கட்டுரைப் பகுதிக்கு பொறுப்பாக இருந்தார். 1973 முதல் 1984 மித்திரன் வார மலர் பத்திரிகையின் பொறுப்பாசிரியராகவும் பணியாற்றினார். 1984 முதல் 1999 வரை வீரகேசரி நாளிதழ் செய்தி பகுதியில் பணியாற்றியதுடன், மகளிர் பகுதி, இலக்கியப் பகுதி போன்ற சிறப்புப் பக்கங்களுக்கும் நாளிதழின் சிறப்பு மலர்களுக்கும் பொறுப்பாக இருந்தார். 2000 ஆம் ஆண்டு தொடக்கம் மங்கையர் கேசரி, கலைக்கேசரி ஆகிய வார அனுபந்தங்களின் பொறுப்பாசிரியராகவும் செயற்பட்டார். 2010 ஆம் ஆண்டு தொடக்கம் வெளிவரும் கலைக்கேசரி மாத சஞ்சிகையின் ஆசிரியராகவும் உள்ளார்.

எழுத்துத் துறையில் தொகு

வானொலி நாடகம், உரைச்சித்திரம், வானொலி மகளிர் நிகழ்ச்சி முதலியவற்றையும் எழுதித் தயாரித்தார். தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் கலந்துகொண்டு சிறப்பிப்பவர். சிறுகதை, கட்டுரை, கவிதை, நாவல், விமர்சனம் என பல துறைகளிலும் தடம் பதித்தவர்.

வெளிவந்த நூல்கள் தொகு

  • விழிச்சுடர் (குறுநாவல்)
  • உள்ளத்தின் கதவுகள் (புதினம்)
  • நெருப்பு வெளிச்சம் (சிறுகதைத் தொகுப்பு)
  • இருபக்கங்கள் (கவிதைத் தொகுப்பு)
  • நினைவுப் பெருவெளி

விருதுகள் தொகு

  • இவரது பத்திரிகைப் பணியைப் பாராட்டி இந்துக் கலாசார அமைச்சு 1992 ஆம் ஆண்டு 'தமிழ்மணி' விருது வழங்கிக் கௌரவித்தது.
  • சிறந்த பத்திரிகையாளருக்கான விருதை 1993 ஆம் ஆண்டு எட்மண்ட் விக்கிரமசிங்க அறக்கட்டளை, அன்றைய அரசுத்தலைவர் டி. பி. விஜயதுங்க மூலம் இவருக்கு வழங்கிக் கௌரவித்தது.
  • மல்லிகை அட்டையில் இவரது படத்தைப் பிரசுரித்துச் சிறப்பித்தது.

மேற்கோள்கள் தொகு

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=அன்னலட்சுமி_இராசதுரை&oldid=3615738" இலிருந்து மீள்விக்கப்பட்டது