டிங்கிரி பண்டா விஜயதுங்கா

முன்னாள் இலங்கை அதிபர்
(டி. பி. விஜயதுங்க இலிருந்து வழிமாற்றப்பட்டது)

டிங்கிரி பண்டா விஜயதுங்கா (பெப்ரவரி 15, 1922 - செப்டம்பர் 21, 2008) இலங்கையின் 4 வது சனாதிபதியும் மூன்றாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட சனாதிபதியுமாவார். சனாதிபதியாவதற்கு முன்னர் ரணசிங்க பிரேமதாசா அரசில் பிரதமராகவும் பணியாற்றினார். இவர் கண்டியை பிறப்பிடமாக கொண்டவர்.[1][2][3]

டி.பி. விஜயதுங்கா
இலங்கையின் 4வது சனாதிபதி
பதவியில்
மே 1 1993 – நவம்பர் 12 1994
முன்னையவர்ரணசிங்க பிரேமதாசா
பின்னவர்சந்திரிகா குமாரதுங்க
இலங்கையின் 12வது பிரதமர்
பதவியில்
ஜனவரி 2, 1989 – மே 1, 1993
முன்னையவர்ரணசிங்க பிரேமதாசா
பின்னவர்ரணில் விக்கிரமசிங்க
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1916-02-15)பெப்ரவரி 15, 1916
கண்டி, இலங்கை
இறப்புசெப்டம்பர் 21, 2008(2008-09-21) (அகவை 92)
கண்டி,  இலங்கை
அரசியல் கட்சிஐக்கிய தேசியக் கட்சி

விஜேதுங்க முதியன்சேலாவின் தெல்கஹாபிட்டிய ஆராச்சில்லா மற்றும் அவரது மனைவி மணம்பேரி முதியன்சேலா பலிகுமனிகே மனம்பேரி ஆகியோருக்கு 1916 பெப்ரவரி மாதம் 15 திகதி மூத்த பிள்ளையாக டிங்கிகிரி பண்டா விஜேதுங்க பிறந்தார்கள்.[4]

உடுநுவர, பொல்கஹ அங்க கிராமத்தில் பிறந்த அவர், கம்பளை புனித ஆண்ட்ரூ கல்லூரியில் தனது கல்வியை முடித்து கூட்டுறவு பரிசோதகராக தனது வாழ்க்கையை ஆரம்பித்தார்.

மலையகத்தின் கௌரவ அமைச்சரான திரு. ஏ. ரத்நாயக்கவின் பிரத்தியேக செயலாளராக பணியாற்றும் வாய்ப்பைப் பெற்று D. B. திரு.விஜேதுங்க அவர்கள் அரசியல் அரங்கில் பிரவேசித்தார்.

நாட்டின் மூன்றாவது ஜனாதிபதியாக சுமார் ஒரு வருட காலம் D. B. திரு.விஜேதுங்க மிகவும் எளிமையான வாழ்க்கை வாழ்ந்தார். உண்மையான மக்கள் தலைவராக மக்களின் இதயங்களில் நிலைத்திருந்த திரு.விஜேதுங்க ஜனநாயகப் பண்புகள் நிறைந்தவர்.

1994 ஆம் ஆண்டில் திருமதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க நான்காவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அரசியல் நடவடிக்கைகளில் இருந்து ஓய்வு பெற்று பிலிமதலாவையில் உள்ள தனது இல்லத்தில் தனது கடைசி காலத்தை கழித்தார்,

டி.பி விஜேதுங்க – நிறைவேற்று அதிகாரமிக்க இலங்கையின் 3வது ஜனாதிபதி

அரசு பதவிகள்
முன்னர் இலங்கை சனாதிபதி
1993–1994
பின்னர்
முன்னர் இலங்கை பிரதமர்
1989–1993
பின்னர்


மேற்கோள்கள்

தொகு
  1. "මීලඟ ජනාධිපති උඩරටින්...?". https://len-official.blogspot.com/2024/06/blog-post_13.html. 
  2. Xinhuanet news
  3. "Dingiri Banda Wijetunga - Celebrity Death - Obituaries at Tributes.com".
  4. "SARINIGAR - Journaling The Future, Today". www.sarinigar.com (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2024-08-29.