செங்குந்த இந்துக் கல்லூரி

செங்குந்த இந்துக் கல்லூரி (Senguntha Hindu College) யாழ்ப்பாணம் மாவட்டத்தில் திருநெல்வேலி என்ற ஊரில் அமைந்துள்ள ஒரு பாடசாலை ஆகும். நல்லூர் செங்குந்த சந்தைக்கு முன்புறமாக அமையப் பெற்ற வீதியில் சுமார் 100 யார் தொலைவில் கொன்றையடிவைரவர் ஆலயத்திற்கு சொந்தமான பண்டாரி வளவில் இக்கல்லூரி அமைந்துள்ளது.[2]

யா/செங்குந்த இந்துக் கல்லூரி
J/Senguntha Hindu College
அமைவிடம்
கல்வியங்காடு, திருநெல்வேலி, யாழ்ப்பாணம்
வட மாகாணம்
இலங்கை இலங்கை
தகவல்
பழைய பெயர்செங்குந்த சைவத் தமிழ்க் கலவன் பாடசாலை
வகை1சி[1]
குறிக்கோள்உள்ளுவதெல்லாம் உயர்வு உள்ளல்
சமயச் சார்பு(கள்)சைவ சமயம்
நிறுவனர்ச. இளையதம்பி,
இந்துபோர்ட் இராசரத்தினம்
பள்ளி மாவட்டம்யாழ்ப்பாணம்
கல்வி ஆணையம்யாழ்ப்பாணக் கல்வி வலயம்
ஆசிரியர் குழு26[1]
தரங்கள்6-13[1]
பால்கலவன்[1]
மாணவர்கள்248[1]
மொழிதமிழ்[1]
கீதம்வாழ்த்திடுவோம் எங்கள் கல்லூரித் தாயை

வரலாறு

தொகு

நல்லூர் இராசதானி சூழவுள்ள பகுதிகளில் பெருமளவு வசித்த செங்குந்த மக்களும் சைவர்களும் தமது மக்களுக்கு சைவ சூழலில் கல்வி புகட்ட இப்பாடசாலையை ஆரம்பித்தனர். பிரபல சோதிட நிபுணரும் கொண்டலடி வைரவ கோவில் தர்மகர்த்தாவுமாகிய சண்முகம் இளயதம்பி என்பவரின் பராமரிப்பில் இருந்த கோவிலுக்கு சொந்தமான பண்டாரிவளவு என்றழைக்கப்பட்ட காணியில் 1932 காலப்பகுதியில் கந்தவாச மண்டபம் (சங்கமடம்) அமைக்கப்பட்டது. இதுவே செங்குந்த இந்துக் கல்லூரியின் ஆரம்பம் ஆகும். செங்குந்த மகாசபை நிகழ்ச்சிகள் நடத்தப் பயன்படுத்தப்பட்டது. சைவப் பாடசாலைகள் நிறுவும் சேவை புரிந்த சைவ வித்தியா விருத்தி சபையின் முகாமையாளரும் வழக்கறிஞருமான இந்துபோர்ட் இராசரத்தினம், சண்முகம் இளயதம்பி ஆகியோரின் கூட்டுமுயற்சியில் 1934 அக்டோபர் 1 விஜயதசமி அன்று செங்குந்த சைவத் தமிழ்க் கலவன் பாடசாலை என்ற பெயரில் ஆரம்பிக்கப்பட்டது. இப்பாடசாலையின் முதல் அதிபராக சுன்னாகம் குமாரசுவாமிப் புலவரின் மகன் முத்துக்குமாரசுவாமிப்பிள்ளை (1934-1943) நியமிக்கப்பட்டார்.[2] 1949-இல் செங்குந்த இந்து ஆங்கிலப் பாடசாலையாக பெயர் மாற்றம் கண்டது. 1959-இல் உயர்தர வகுப்புகள் ஆரம்பிக்கப்பட்டன.[2]

பாடசாலை அதிபர்கள்

தொகு
  • முத்துக்குமாரசுவாமி
  • கணபதிப்பிள்ளை (1944-1967)
  • எஸ். பி. நடராசா (1986-1970)
  • இலங்கை நாயகம் (1971-1972)
  • வரணி சிவப்பிரகாசம்
  • நாகராஜா (1973)
  • இ. பொன்னம்பலம் (1974)
  • வி. மகாதேவா (1975-1977)
  • எஸ். சிவப்பிரகாசம் (1978)
  • ப. சுவாமிநாதசர்மா (1979-1985)
  • ம. சண்முகலிங்கம் (1986)
  • வி. அரியநாயகம் (1987)
  • எம். பரமேஸ்வரன் (1988-1995)
  • ஏ. ராஜகோபால் (1995-1999)
  • திருமதி சி. விஸ்வலிங்கம் (1999-2007)
  • இரத்தினம் பாலகுமார் (2008 - 2013)
  • க.தர்மகுலசிங்கம் (2013 - 2017)
  • இ.பாலச்சந்திரன் (2017 முதல்)[3]

கல்லூரிப் பண்

தொகு

வாழ்த்திடுவோம் எங்கள் கல்லூரித் தாயை
வளமுடன் மாணவர் நாமே.
செங்குந்த இந்துக் கல்லூரியை என்றும்
எங்களுக்குக் கல்வி அளித்து
பொங்கும் புகழுடன் வாழ்ந்திட நாமே
திங்கள் முடியோனைத் துதிப்போம்
கன்னல் சுவை தரும் தமிழ்மொழியுடனே
அன்னிய ஆங்கிலம் சேர்த்து
இன்னிசை யோடுயர் இலக்கியம் பலவும்
என்றுமே அளித்திடும் அன்னாய்
இத்தல மீதினில் மாணவர் எல்லாம்
உத்தமாராய் வாழ வேண்டி
சத்தியம் ஒழுக்கம் எனுமுயர் பண்பை
எத்தினமும் ஊட்டும் தாயே
வறுமையாய் வாடினும் வளமுற்று வாழினும்
மறந்திட மாட்டோம் உன் நலனை
குறைகளின்;றி உனைக் குவலயம் போற்றிட
இறைவனை வேண்டுவோம் நாமே
எந்தை போல் வந்தெமக் கறிவுரை கூறும்
இராசரெத்தினம் என்றும் வாழ்க
சிந்தையில் இந்துக்கள் கல்வியை நிறைத்த
'இந்துபோட்' ஸ்தாபனம் வாழ்க
வாழிய வாழிய எங்கள் கல்லூரி வாழிய வாழிய என்றும்
வாழ்க! வாழ்க!! வாழ்க!!!
வளம் பல் பெருக்கி என்றும் வாழிய எங்கள் கல்லூரி!

இயற்றியவர்: சிற்பி. எஸ். சரவணபவன்

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 http://www.edudept.np.gov.lk/nearestsch.php
  2. 2.0 2.1 2.2 "செங்குந்த இந்துக் கல்லூரி". J/SENGUNTHA HINDU COLLEGE. Archived from the original on 21-11-2015. பார்க்கப்பட்ட நாள் 29-02-2020. {{cite web}}: Check date values in: |access-date= and |archive-date= (help)
  3. https://web.archive.org/web/20150922114126/http://www.shcthiru.sch.lk/About-5.htm