கல்வியங்காடு
கல்வியங்காடு அல்லது கல்வியன்காடு அல்லது கள்ளியங்காடு[1] என்பது யாழ்ப்பாணம் நல்லூர் பிரதேச செயலகத்தின் கீழ் உள்ள ஊர் ஆகும்.
17 ஆம் நூற்றாண்டுக்கு முன் இருந்த யாழ்ப்பாண இராச்சியத்தின் தலைநகரமான நல்லூர் நகரின் பெரும் பகுதியாக இந்த ஊர் இருந்தது. இதன் எல்லைகளாக: கிழக்கு எல்லையாக கட்டைப்பிராயும் வடக்கு எல்லையாக இருபாலையும், கோப்பாயும். தென்மேற்கு எல்லையாக நல்லூரும். மேற்கு எல்லையாக திருநெல்வேலியும் கொண்டு அமைவு பெற்றுள்ளது. கல்வியங்காடு நிலப்பரப்பு ஏறக்குறைய 700 ஏக்கர் கொண்டதாகும். இக்கிராமத்தின் பொருளாதாரத்தின் உயிர்நாடியாக விளங்குவது விவசாயமாகும். கால்நடைச் செல்வங்களாக கறவைப் பசுக்களும், ஆடுகளும் வளர்க்கப்படுகின்றன.
கல்வியங்காடும் நல்லூர் இராசதானியும்
தொகுசங்கிலிய மன்னன் ஆட்சிக்காலத்தில் அனைத்து சிறு நகரங்களும் இராசதானியாக பிரிக்கப்பட்டு ஆட்சி செய்யப்பட்டே வந்தது அதன் கீழ் கல்வியங்காடு நல்லூர் இராசதானியின் முதன்மை நகரமாக திகழ்ந்தது சங்கிலியன் நகர்வலம் செல்லும் இராஜபாதை வீதி கல்வியங்காட்டை ஊடறுத்தே செல்கிறது மேலும் சங்கிலியனின் சட்ட அதிபதியாகிய சட்டநாதர் சிவன் ஆலயம் கல்வியங்காட்டின் எல்லையில் அமைந்திருப்பதுவும் இது சங்கிலியன் ஆட்சியில் முதன்மை நகரமாக திகழ்ந்ததிற்கு ஆதாரமாகும்.
கல்வியங்காடும் பரராஜசேகர மாகாரஜாவும்
தொகுயாழ்ப்பாணம் பரராஜசேகர மகாராஜவின் ஆட்சியின் கீழ் இருந்த போது கல்வியங்காடு அம்மன்னனின் அவைப் பிரதிநிதியான சூரியமூர்த்தி தம்பிரானின் ஆட்சிப் பொறுப்பின் கீழ் அமைந்தது எனக் கல்வியங்காட்டுச் செப்பேடு கூறுகின்றது பரராஜசேகரன் மிகுந்த பிள்ளையார் பக்தி வாய்ந்த மன்னன் என்பதை ஆட்சிக்காலத்தில் அமைக்கப்பட்ட கோவில்கள் எடுத்துக்காட்டுகின்றன. இதன் பெயரால் பரராஜசேகர மன்னனின் கட்டளைப்படி ஸ்ரீ சூரியமூர்த்தி தம்பிரானால் கல்வியங்காட்டின் புராதன சின்னமாக பழம்பெரும் கோவிலாக ஸ்ரீ நடராஜமுக்குறுனிப்பிள்ளையார் கோவில் திகழ்கிறது இவ்வாலயத்தினால் பரராஜசேகர மகாராஜவின் கட்டளைகளும் கல்வியங்காட்டு செப்பேடும் பாதுகாக்கப்பட்டு வருகின்றது
இவ்வூரிலுள்ள ஆலயங்கள்
தொகு- கல்வியங்காடு முக்குறுணிப் பிள்ளையார் கோயில்
- இலங்க நாயகி அம்மன் ஆலயம்மும் வீரபத்திர் ஆலயம்
- கலட்டி பிள்ளையார் ஆலயம்
- சந்திரசேகரப் பிள்ளையார் கோவில்
- பேச்சி அம்மன் கோவில்
- சட்டநாதர் சிவன் கோவில்
இவ்வூரிலுள்ள பாடசாலைகள்
தொகுநிறுவனங்கள்
தொகுஇங்குள்ள பொதுநூலகம் ஞான பாஸ்கரோதய சங்கம், கலட்டி பிள்ளையார் நூலகம், சந்திரசேகரப் பிள்ளையார் நூலகம், சங்கிலியன் நூலகம் ஆகும்.
வெளி இணைப்புகள்
தொகு- kalviyankadu.tk பரணிடப்பட்டது 2011-10-30 at the வந்தவழி இயந்திரம்
- ↑ "Aaraip-pattai". TamilNet. September 18, 2011. https://www.tamilnet.com/art.html?artid=34431.