ஆன்ன கூர்னிக்கோவா
ஆன்ன செர்கேயெவ்னா கூர்னிக்கோவா (Anna Sergeyevna Kournikova, உருசியம்: А́нна Серге́евна Ку́рникова; பிறப்பு: 7 சூன் 1981) ஒரு உருசிய முன்னாள் தொழில்முறை டென்னிசு வீரர் மற்றும் அமெரிக்க தொலைக்காட்சி ஆளுமை ஆவார். இவரது தோற்றமும் பரவலாக அறியப்பட்டதும் இவரை உலகளவில் அறியப்பட்ட டென்னிசு நட்சத்திரங்களில் ஒருவராக ஆக்கியது. இவரது புகழின் உச்சத்தில் இருந்த காலகட்டத்தில், கூகிள் தேடலில் மிகவும் அதிகம் தேடப்பட்ட புகைப்படங்களில் ஒன்றாக இருந்தது.[2][3][4]
2009 இல் கூர்னிக்கோவா | |
தாய்மொழிப் பெயர் | Анна Ку́рникова |
---|---|
நாடு | உருசியா |
வாழ்விடம் | மயாமி, புளோரிடா, அமெரிக்கா |
உயரம் | 1.73 மீட்டர் (5 அடி 8 அங்) |
தொழில் ஆரம்பம் | அக்டோபர் 1995 |
இளைப்பாறல் | மே 2007 |
விளையாட்டுகள் | வலக்கை |
பரிசுப் பணம் | US$3,584,662 |
ஒற்றையர் போட்டிகள் | |
சாதனைகள் | 209–129 |
பட்டங்கள் | 0 WTA, 2 ITF[1] |
அதிகூடிய தரவரிசை | தரம். 8 (20 நவம்பர் 2000) |
பெருவெற்றித் தொடர் ஒற்றையர் முடிவுகள் | |
ஆத்திரேலிய ஓப்பன் | காலிறுதி (2001) |
பிரெஞ்சு ஓப்பன் | 4R (1998, 1999) |
விம்பிள்டன் | SF (1997) |
அமெரிக்க ஓப்பன் | 4R (1996, 1998) |
ஏனைய தொடர்கள் | |
Tour Finals | அரையிறுதி (2000) |
ஒலிம்பிக் போட்டிகள் | 1R (1996) |
இரட்டையர் போட்டிகள் | |
சாதனைகள் | 200–71 |
பட்டங்கள் | 16 WTA[1] |
அதியுயர் தரவரிசை | தரம். 1 (22 நவம்பர் 1999) |
பெருவெற்றித் தொடர் இரட்டையர் முடிவுகள் | |
ஆத்திரேலிய ஓப்பன் | வெ (1999, 2002) |
பிரெஞ்சு ஓப்பன் | இறுதி (1999) |
விம்பிள்டன் | அரையிறுதி (2000, 2002) |
அமெரிக்க ஓப்பன் | காலிறுதி (1996, 2002) |
ஏனைய இரட்டையர் தொடர்கள் | |
Tour Finals | வெ (1999, 2000) |
கலப்பு இரட்டையர் | |
சாதனைகள் | 24–14 |
பெருவெற்றித் தொடர் கலப்பு இரட்டையர் முடிவுகள் | |
ஆத்திரேலிய ஓப்பன் | அரையிறுதி (1997, 2000) |
பிரெஞ்சு ஓப்பன் | அரையிறுதி (1997) |
விம்பிள்டன் | இறுதி (1999) |
அமெரிக்க ஓப்பன் | இறுதி (2000) |
இவர் ஒருமுறை கூட ஒற்றையர் பட்டத்தை வென்றதில்லை. இருந்தபோதிலும் 2000 இல் சர்வதேச அளவில் 8 ஆம் இடத்தினைப் பெற்றார். இரட்டையர் போட்டிகளில் மிகச் சிறபாக விளையாடியாடியுள்ளார். இவர் சர்வதேச அளவில் முதல் இடத்தினையும் பிடித்துள்ளார். மார்ட்டினா ஹிங்கிசுடன் இணைந்து, 1999 மற்றும் 2002 ஆம் ஆண்டுகளில் ஆஸ்திரேலியாவில் பெருவெற்றித் தொடர் பட்டங்களையும், 1999 மற்றும் 2000 ஆம் ஆண்டுகளில் WTA வாகையாளர் போட்டிகளையும் வென்றார் . அவர்கள் தங்களை "டென்னிஸின் ஸ்பைஸ் கேர்ள்ஸ் " என்று குறிப்பிட்டனர்.[5][6]
கடுமையான முதுகெலும்பு பிரச்சினைகள், குடலிறக்க வட்டு உள்ளிட்ட காரணங்களால் கூர்னிகோவ தனது 21 வயதில் ஓய்வு பெற்றார்.[7] இவர் புளோரிடாவின் மியாமி கடற்கரையில் வசித்து வருகிறார், மேலும் 2011 ஆம் ஆண்டில் அவ்வப்போது கண்காட்சிகளிலும், உலக டென்னிசு அணி செயின்ட் லூயிஸ் ஏசஸுக்காகவும் விளையாடினார். ஜிலியன் மைக்கேல்ஸுக்குப் பதிலாக தி பிகெஸ்ட் லாஸர் என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியின் 12 ஆம் பருவத்திற்கு அவர் ஒரு புதிய பயிற்சியாளராக இருந்தார். ஆனால், 13 ஆம் பருவத்தில் பங்கேற்கைல்லை. மேலும் இவர் சர்வதேச மக்கள் தொகை சேவைகளின் ஃபைவ் அண்ட் அலைவ் " திட்டத்தின்சர்வதேச தூதராக பணியாற்றுகிறார், இது ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகள் மற்றும் அவர்களது குடும்பங்கள் எதிர்கொள்ளும் சுகாதார நெருக்கடிகளை நிவர்த்தி செய்கிறது.[8]
ஆரம்ப கால வாழ்க்கை
தொகு7 ஜூன் 1981 இல் ரஷ்யாவின் மாஸ்கோவில் கூர்னிகோவ பிறந்தார். அவரது தந்தை, செர்ஜி கோர்னிகோவ் (பிறப்பு 1961),[9] முன்னாள் கிரேக்க-ரோமன் மல்யுத்த வாகையாளர் ஆவார். முனைவர் பட்டம் பெற்று மாஸ்கோவில் உள்ள உடல் கலாச்சாரம் மற்றும் விளையாட்டு பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக இருந்தார். 2001 ஆம் ஆண்டு நிலவரப்படி, அவர் அங்கு ஒரு பகுதிநேர தற்காப்பு கலை பயிற்றுவிப்பாளராக இருந்தார். அவரது தாயார் அல்லா (பிறப்பு 1963) 400 மீட்டர் ஓட்டப்பந்தய வீரராக இருந்தார் .[10] அவரது இளைய சகோதரர் ஆலன் ஒரு இளைஞர் கோல்ப் உலக வாகையாளரான இவர் 2013 ஆம் ஆண்டில் வெளியான தி ஷார்ட் கேம் எனும் ஆவணப்படத்தில் இடம்பெற்றார் .[11]
செர்ஜி கோர்னிகோவ் இவரைப் பற்றி கூறுகையில், "நாங்கள் இளமையாக இருந்தோம், தூய்மையாக இருக்க நாங்கள் விரும்பினோம், எனவே அ ன்னா ஆரம்பத்தில் இருந்தே விளையாட்டுக்கு உகந்த சூழலில் இருந்தார்" என்று கூறியுள்ளார்.[10]
டென்னிசு வாழ்க்கை
தொகு1989-1997: ஆரம்ப ஆண்டுகள் மற்றும் திருப்புமுனை
தொகுஅவர் அமெரிக்காவிற்கு வந்ததைத் தொடர்ந்து, அவர் டென்னிசு விளையாடுவதனை முதனமையாகக் கொண்டார்.[12] தனது 14 வயதில், அவர் ஐரோப்பிய வாகையாளர் மற்றும் இத்தாலிய ஓபன் இளையோர் போட்டிகளில் வென்றார். டிசம்பர் 1995 இல், இளையோர் ஆரஞ்சு பவுல் டென்னிசு போட்டியின் 18 மற்றும் அதற்கு மேற்பட்ட பிரிவை வென்ற இளைய வீரர் என்ற பெருமையை பெற்றார்.[13] அதே ஆண்டின் இறுதியில், கூர்னிகோவ ஐ.டி.எஃப் இளையோர் உலக வாகயாளர் -18 [14] மற்றும் இளையோர் ஐரோப்பிய வாகையாளர் -18 ஆகிய பட்டங்களை வென்றார்.
தனிப்பட்ட வாழ்க்கை
தொகுகூர்னிகோவ என்ஹெச்எல் பனி வளைதடியாட்ட வீரரான சக ரஷ்யரான பாவெல் புரேவுடன் உறவுநிலைப் பொருத்தம் கொண்டிருந்தார். 1999 ஆம் ஆண்டில் இருவரும் சந்தித்தனர்.[15] புளோரிடா உணவகத்தில் ஒரு நிருபர் அவர்கள் ஒன்றாக இருந்ததை புகைப்படம் எடுத்ததை அடுத்து 2000 ஆம் ஆண்டில் ப்யூரும் கோர்னிகோவாவும் நிச்சயதார்த்தம் செய்ததாகக் கூறப்படுகிறது, அங்கு பியூர் கோர்னிகோவாவை திருமணம் செய்து கொள்ளும்படி கேட்டார். இந்த நிகழ்வு உருசியாவில் தலைப்புச் செய்திகளாக ஆனது.[16]
தொழில் புள்ளிவிவரங்கள் மற்றும் விருதுகள்
தொகு- 1996: WTA ஆண்டின் சிறந்த புதிய வீரர்
- 1999: ஆண்டின் சிறந்த WTA இரட்டையர் அணி ( மார்ட்டினா ஹிங்கிஸுடன் )
புத்தகங்கள்
தொகு- சூசன் ஹோல்டன் எழுதிய அன்ன கூர்னிகோவ (2001)
- அன்னா கூர்னிகோவ எழுதிய கோனி பெர்மன் (2001) (பெண்கள் யார் வெற்றி) ( / )
சான்றுகள்
தொகு- ↑ 1.0 1.1 "Players – Info – Anna Kournikova". Sony Ericsson WTA Tour. Archived from the original on 30 ஆகஸ்ட் 2009. பார்க்கப்பட்ட நாள் 10 March 2012.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "2001 Year-End Google Zeitgeist: Search patterns, trends, and surprises". Google. பார்க்கப்பட்ட நாள் 8 July 2009.
- ↑ "2002 Year-End Google Zeitgeist: Search patterns, trends, and surprises". Google. பார்க்கப்பட்ட நாள் 8 July 2009.
- ↑ "2003 Year-End Google Zeitgeist: Search patterns, trends, and surprises". Google. பார்க்கப்பட்ட நாள் 9 July 2009.
- ↑ Harper, Tony (29 January 1999). "Hingis-Kournikova Win Australian Open Doubles". The Washington Post. https://www.washingtonpost.com/wp-srv/sports/tennis/longterm/1999/ausopen/articles/doubles29.htm. பார்த்த நாள்: 10 March 2017.
- ↑ Gallagher, Brendan (29 June 2010). "Wimbledon 2010: Anna Kournikova and Martina Hingis lend some spice to Court Two". The Daily Telegraph. https://www.telegraph.co.uk/sport/tennis/wimbledon/7862258/Wimbledon-2010-Anna-Kournikova-and-Martina-Hingis-lend-some-spice-to-Court-Two.html. பார்த்த நாள்: 5 May 2016.
- ↑ Myles, Stephanie (18 February 2010). "Alla Kournikova – not mother of the year". The Gazette. Archived from the original on 6 September 2014. பார்க்கப்பட்ட நாள் 10 August 2013.
- ↑ "Anna Kournikova in Haiti, Day One: Child Survival". The Daily Traveler. 27 February 2009. Archived from the original on 20 October 2011. பார்க்கப்பட்ட நாள் 25 August 2011.
- ↑ "Anna's official discussion forum". Community.kournikova.com. பார்க்கப்பட்ட நாள் 10 March 2012.
- ↑ 10.0 10.1 "Anna Kournikova: Description". Sportsmates. Archived from the original on 6 December 2008. பார்க்கப்பட்ட நாள் 10 March 2012.
- ↑ Holmes, John. "Anna Kournikova's Little Brother is a Blossoming Golf Champion". PGA.com. Professional Golfers Association. Archived from the original on 19 June 2013. பார்க்கப்பட்ட நாள் 22 June 2014.
- ↑ "About Me: Biography". Kournikova.com - The Official Website of Anna Kournikova. Archived from the original on 23 March 2012. பார்க்கப்பட்ட நாள் 10 March 2012. Original redirects to Facebook.
- ↑ "ITF Tennis – JUNIORS – 49th Rolex Orange Bowl International Championships – 17 December – 24 December 1995". Archived from the original on 20 அக்டோபர் 2018. பார்க்கப்பட்ட நாள் 9 ஏப்ரல் 2020.
{{cite web}}
: Check date values in:|access-date=
(help) - ↑ "ITF Tennis – JUNIORS". Archived from the original on 3 அக்டோபர் 2018. பார்க்கப்பட்ட நாள் 20 October 2018.
- ↑ "People: Courtney Love, Scissor Sisters, Antonio Moral". The New York Times. 11 February 2005. https://www.nytimes.com/2005/02/11/arts/11iht-peepsat.html. பார்த்த நாள்: 12 July 2009.
- ↑ "Kournikova and Bure wedding may be off". The Independent. 6 April 2000 இம் மூலத்தில் இருந்து 26 ஜனவரி 2011 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20110126022400/http://www.independent.co.uk/sport/tennis/kournikova-and-bure-wedding-may-be-off-720494.html. பார்த்த நாள்: 24 June 2009.