அன்னா சரிகினா
அன்னா போரிசிவ்னா சரிகினா (Anna Borysivna Sharyhina) (பிறப்பு c.1978 ) ஒரு உக்ரேனிய பெண்ணியவாதியான இவர் ஓரினச் சேர்க்கை சமூகத்தின் ஆர்வலர் ஆவார். இவர் கார்கீவில் உள்ள ஒரு லெஸ்பியன் பெண்ணிய அமைப்பான ஸ்பியர் மகளிர் சங்கத்தின் இணை நிறுவனராகவும் மற்றும் கீவ்வில் உள்ள பெருமிதப் பேரணியின் ஏற்பாட்டுக் குழுவான கெய்வ் பிரைட் என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் இணை நிறுவனராகவும் உள்ளார் . [1]
பேரணி
தொகுசரிகினாவும் அவரது கூட்டாளியான விரா செமிகினாவும் ஒரு தசாப்தத்திற்கும் மேலாக உக்ரேனிய ஓரினச் சேர்க்கை சமூகம் மற்றும் லெஸ்பியன் அமைப்புகளில் ஈடுபட்டுள்ளனர். கியேவின் சமத்துவத்திற்கான முதல் பேரணியை இவர்கள் ஏற்பாடு செய்தனர். 2015 ஆம் ஆண்டில் நடைபெற்ற கியேவின் சமத்துவத்திற்கான இரண்டாவது பேரணி, காவல்துறையினருடன் சேர்ந்து, பலவிதமான பொது நபர்களின் ஆதரவைக் கொண்டிருந்தது. இருப்பினும், அணிவகுப்புக்கு எதிரான தீவிர வலதுசாரி வன்முறை காரணமாக இந்த அணிவகுப்பு 15 நிமிடங்கள் மட்டுமே நீடித்தது. [1] இந்நிகழ்ச்சியில் காவலில் இருந்த அதிகாரிகள் உட்பட 10 பேர் காயமடைந்தனர். [2]
எதிர்ப்பு
தொகுசரிகினாவின் பெண்ணிய மற்றும் ஓரின சேர்க்கை நடவடிக்கை உக்ரேனில் தொடர்ந்து எதிர்ப்பை எதிர்கொண்டிருந்தது. கார்கிவ் புத்தகக் கடையில் இந்த இயக்கங்கள் குறித்து இவர் ஒரு சொற்பொழிவு நிகழ்த்தியபோது, முதலில் கார்கீவின் நகிப்பெலோ பத்திரிகை மையத்திற்கும் பின்னர் கெய்வின் ஐசோல்யாட்சியா மையத்திற்கும் கூட்டத்தை இரண்டு முறை இடமாற்றம் செய்ய வேண்டியிருந்தது. [3] கார்கிவ் சமூக மையமான பிரைட்ஹப், 2018 சூலையில் முகமூடி அணிந்தவர்களால் புகை குண்டுகள் வீசி தாக்கப்பட்டது. காவல் துறையினரிடம் புகார்கள் வந்தாலும், உள்துறை மந்திரி ஆர்சன் அவகோவுக்கு 1,000 க்கும் மேற்பட்ட புகார்கள் வந்த போதும், இந்த குற்றத்திற்காக யாரும் தண்டிக்கப்படவில்லை. [4] [5]
2019 மார்ச் முதல் வாரத்தில் கார்கிவ் நகரில் பெண்கள் ஒற்றுமை வாரத்தை ஏற்பாடு செய்தவர்களில் சரிகினாவும் இருந்தார். 2020 சனவரியில், ஓரினச் சேர்க்கை சமூகத் தலைவர்களை சந்திக்காமல் உக்ரைனுக்கு வருகை புரிந்ததற்காக மைக் பாம்பியோவை சரிகினா விமர்சித்தார். [4] [5]
குறிப்புகள்
தொகு- ↑ 1.0 1.1 Claire Gaillard, Anna Sharyhina – Ukraine, Hope for the Future, Les Spread the Word, 5 October 2015. Translated by Leanne Ross.
- ↑ Clara Marchaud, Kyiv Pride week events to raise awareness, defend LGBTQ rights, Kyiv Post, June 8, 2018.
- ↑ Ganna Grytsenko, What are the real barriers to freedom of assembly in Ukraine?, openDemocracy, May 16, 2018.
- ↑ 4.0 4.1 Anna Nemtsova, Mike Pompeo Snubs Ukraine’s Embattled LGBTQ Community, The Daily Beast, Jan 31, 2020.
- ↑ 5.0 5.1 Lily Wakefield, US Secretary of State Mike Pompeo refuses to meet with LGBT activists in Ukraine, Pink News, February 1, 2020.
வெளி இணைப்புகள்
தொகு- Story no.11. Anna Sharyhina, Gay Alliance Ukraine, Nov 25, 2015.
- Chanelle Grand, Portrait : Anna Sharyhina, militante et directrice de la marche de la fierté LGBT en Ukraine, STOP Homophobie, 5 October 2015.
- Hanna Sokolova, anna-sharyhina-interview-en/ “When we compromise, it’s as if we admit we’re not equal”: Anna Sharyhina on feminism and LGBT rights in Ukraine, openDemocracy, 22 May 2019.