அன்னா மேரி ராபர்ட்சன் மோசஸ்

அன்னா மேரி ராபர்ட்சன் மோசஸ் (Anna Mary Robertson Moses) (பிறப்பு செப்டம்பர் 7, 1860 - இறப்பு திசம்பர் 13, 1961), "பாட்டி மோசஸ்" என்ற அவரது புனைப்பெயரால் அறியப்படும் இவர் ஒரு அமெரிக்க கிராமிய கலைஞர். இவர் தனது 78 வது அகவையில் ஓவியம் வரையத் தொடங்கினார். மேலும் வயதான காலத்தில் ஓவியக் கலையை வெற்றிகரமாகத் தனது முழு நேரத் தொழிலாக மாற்றியவர் என்பதற்கு உதாரணமாக மோசஸ் அடிக்கடி மேற்கோள் காட்டப்படுகிறார். அவரது படைப்புகள் அமெரிக்காவிலும் வெளிநாடுகளிலும் விற்பனை செய்யப்பட்டுள்ளது. மேலும் வாழ்த்து அட்டைகளிலும் இன்னும் பிற வர்த்தகங்களிலும் இவரது படைப்புகள் சந்தைப்படுத்தப்பட்டுள்ளன. மோசஸின் ஓவியங்கள் பல அருங்காட்சியகங்களின் தொகுப்புகளில் காட்சிப் படுத்தப்பட்டுள்ளது. 2006 ஆண்டில் அமெரிக்காவில் இவரது சுகரிங் ஆஃப் என்ற படைப்பு $1.2 மில்லியன் டாலருக்கு விற்பனை செய்யப்பட்டது.

பாட்டி மோசஸ்
"பாட்டி மோசஸ், 1953
பிறப்புஅன்னா மேரி ராபர்ட்சன் மோசஸ்
(1860-09-07)செப்டம்பர் 7, 1860
கிரீன்விச், நியூயார்க்,
அமெரிக்கா
இறப்புதிசம்பர் 13, 1961(1961-12-13) (அகவை 101)
ஹோசிக் பாஃல்ஸ்,நியூயார்க்,
அமெரிக்கா
தேசியம்அமெரிக்கா
அறியப்படுவதுஓவியம், சித்திரத்தையல்
குறிப்பிடத்தக்க படைப்புகள்The Old Checkered Inn in Summer
வாழ்க்கைத்
துணை
தாமசு சால்மன் மோசசு (1887-1927; அவரது இறப்புவரை)

மோசஸ் பத்திரிக்கைகளின் அட்டைப்படம், தொலைக்காட்சித் தொடர்கள் மற்றும் ஆவணப் படங்கள் ஆகியவற்றில் தோன்றியுள்ளார். தனது வாழ்க்கை வரலாறு பற்றி விளக்கும் புத்தகம் (My Life's History) ஒன்றைத் தானே எழுதி வெளியிட்டார். பல விருதுகளைப் பெற்றார். இரண்டு கெளரவ முனைவர் பட்டமும் பெற்றார்.

நியூயார்க் டைம்ஸ் நாளிதழ் இவரை பற்றி இப்படிச் சொன்னது, "எளிமையான யதார்த்தம், ஏக்கம் மற்றும் மினுமினுக்கும் வண்ணம், பாட்டி மோசஸ் படைப்புகளில் எளிய பண்ணை வாழ்க்கை மற்றும் கிராமப்புறங்களைச் சித்தரிக்கப்படும் விதம் ஆகியவையால் இவருக்கு ஆதரவு பெருகியள்ளது. மேலும் அவர் குளிர்காலத்தின் முதல் பனி விழும் போது ஏற்படும் உற்சாகத்தைத் தனது ஓவியங்களில் அழகாகக் கைப்பற்றியிருப்பார். நன்றி தெரிவிக்கும் நாளுக்கானத் தயாரிப்பு ஏற்பாடுகள் மற்றும் புதிய, இளம் வசந்தகால பச்சை வண்ணம் ... பாட்டி மோசஸ் எங்கு சென்றாலும் அனைவரையும் மயக்கும் ஆற்றல் பெற்றிருந்தார். ஒரு சிறிய, சுறுசுறுப்பான சாம்பல் கண்கள் மற்றும் ஒரு விரைவான அறிவு கொண்ட பெண்ணாகவும், ஆதாயம் தேடுபவரிடத்தில் கூர்மையான பேச்சும் மற்றும் விளையாட்டுத்தனமான பேரப் பிள்ளைகளிடம் கண்டிப்பு காண்பிப்பவராகவும் இருந்தார்".[1]

மோசஸ் 12 வயதில் தொடங்கி, 15 ஆண்டுகளுக்கு ஒரு நேரடி-வீட்டுப் பணியாளராக இருந்தார். குரியர் மற்றும் இவ்ஸ் உருவாக்கிய அச்சுப்படைப்புகளில் இவர் காட்டிய ஆர்வத்தைக் கண்ட மோசஸின் முதலாளி ஒருவர் இவருக்கு ஓவியங்கள் வரைவதற்குத் தேவையான உதவிகளை செய்தார். வர்ஜீனியாவில் மோசஸும் அவருடைய கணவரும் தங்களது திருமண வாழ்க்கையைத் தொடங்கினார்கள், அங்கு அவர்கள் பண்ணைகளில் வேலை செய்தார்கள். 1905 ஆம் ஆண்டு வடகிழக்கு அமெரிக்காவிற்குத் திரும்பி, நியூயார்க் நகரின் ஈகிள் பாலம் என்ற இடத்தில் வாழ்ந்தனர். அவர்களுக்கு பத்து குழந்தைகள் பிறந்தது. அவற்றுள் ஐந்து குழந்தைகள் உயிர் பிழைத்தனர். அவர் வாழ்க்கை முழுவதும் மூட்டு வாதத்தால் பாதிக்கப்படும்வரை சித்திரத்தையல் உட்பட்ட பல கலைகளில் ஆர்வம் கொண்டிருந்தார்.

ஆரம்ப வாழ்க்கை

தொகு

அன்னா மேரி ராபர்ட்சன் செப்டம்பர் 7, 1860 ஆம் ஆண்டு நியூயார்க்கின் கிரீன்விச்சில் பிறந்தார். இவரது பெற்றோர் மார்கரட் சான்னஹன் ராபர்ட்சன் மற்றும் ரசல் கிங் ராபர்ட்சன் ஆகியோருக்கு பிறந்த பத்து குழந்தைகளில் இவர் மூன்றாவது குழந்தையாவார். இவர் நான்கு சகோதரிகள் மற்றிம் ஐந்து சகோதரர்களுடன் வளர்ந்தார். இவரது தந்தை சணல் நார் தயாரிக்கும் ஆலையை நடத்தினார் மற்றும் விவசாயமும் செய்தார்.[2] மோசஸ் குழந்தை பருவத்தில் ஒரு அறை கொண்ட பள்ளியில் சிறிது காலம் பயின்றார். இந்தப் பள்ளி தற்போது வெர்மாண்டில் உள்ள பெனிங்க்டன் அருங்காட்சியமாக உள்ளது. அமெரிக்காவிலேயே இங்குதான் இவரது பல படைப்புகள் காட்சிப் படுத்தப்பட்டுள்ளது.[3] பள்ளிகளில் கலைப் பாடம் நடத்தும் போது ஓவியத்தில் ஈடுபாடு உண்டானது. மோசஸ் முதன்முதலாக குழந்தைப் பருவத்தில், எலுமிச்சை மற்றும் திராட்சை சாற்றைப் பயன்படுத்தி "இயற்கை" வண்ணங்களை உருவாக்கினார். கலைப்படைப்புகளை உருவாக்க அவர் பயன்படுத்திய பிற இயற்கை பொருட்கள் தரைப் புதர், புல், மாவுப் பசை, சுண்ணாம்பு மற்றும் மரத்தூள் ஆகியவையாகும்.[4]

மேற்கோள்கள்

தொகு
  1. "Obituary: Grandma Moses Is Dead at 101; Primitive Artist 'Just Wore Out'". New York Times. December 14, 1961. https://www.nytimes.com/learning/general/onthisday/bday/0907.html. 
  2. "Anna Mary Robertson ("Grandma") Moses Biography". Galerie St. Etienne. பார்க்கப்பட்ட நாள் August 30, 2014.
  3. Christina Tree; Diane E. Foulds (1 June 2009). Explorer's Guide Vermont. Countryman Press. p. 123. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-58157-822-5.
  4. Arnold B. Cheyney (1 January 1998). People of Purpose: 80 People Who Have Made a Difference. Good Year Books. p. 110. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-673-36371-8.