அன்புக்கொடி நல்லதம்பி

எழுத்தாளர்

அன்புக்கொடி நல்லதம்பி என்பவர் ஒரு தமிழக எழுத்தாளர். சென்னையில் வசித்து வரும் இவர் வரலாற்றுப் பேராசிரியையாகப் பணியாற்றியவர். தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறையின் கீழான 12 ஆம் வகுப்புக்கான வரலாற்றுப் பாடநூல் குழுத் தலைவராகப் பணியாற்றியவர். பல்வேறு நூல்களையும், ஆய்வுக் கட்டுரைகளையும் எழுதியிருக்கிறார். நூலகத் தேர்வுக்குழு உறுப்பினராகவும் பணியாற்றி வருகிறார். இவர் எழுதிய “சமூக விஞ்ஞானி கலைவாணர்” எனும் நூல் தமிழ் வளர்ச்சித் துறையின் 2008 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் வாழ்க்கை வரலாறு வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கிறது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=அன்புக்கொடி_நல்லதம்பி&oldid=3293880" இலிருந்து மீள்விக்கப்பட்டது