அன்ரனி ஜெகநாதன்

(அன்ரன் ஜெயநாதன் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

மரியாம்பிள்ளை அந்தனி ஜெகநாதன் (Mariyampillai Antony Jeyanathan, மே 11, 1948 - அக்டோபர் 1, 2016) இலங்கைத் தமிழ் அரசியல்வாதியும், மாகாண சபை உறுப்பினரும் ஆவார்.

அன்ரனி ஜெகநாதன்
1வது வட மாகாண சபையின் பிரதித் தலைவர்
பதவியில்
11 அக்டோபர் 2013 – 1 அக்டோபர் 2016
முல்லைத்தீவு மாவட்டத்துக்கான வட மாகாண சபை உறுப்பினர்
பதவியில்
11 அக்டோபர் 2013 – 1 அக்டோபர் 2016
தனிநபர் தகவல்
பிறப்பு மே 11, 1948(1948-05-11)
இறப்பு அக்டோபர் 1, 2016(2016-10-01) (அகவை 68)
முல்லைத்தீவு, இலங்கை
தேசியம் இலங்கைத் தமிழர்
அரசியல் கட்சி இலங்கைத் தமிழரசுக் கட்சி
பிற அரசியல்
சார்புகள்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு

அன்ரனி ஜெகநாதன் 2013 வட மாகாண சபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளராக முல்லைத்தீவு மாவட்டத்தில் போட்டியிட்டு 9,309 விருப்பு வாக்குகள் பெற்று வட மாகாண சபை உறுப்பினரானார்.[1][2] இவர் 2013 அக்டோபர் 11 ஆம் நாள் மாகாண சபை உறுப்பினராக முதலமைச்சர் க. வி. விக்னேஸ்வரன் முன்னிலையில் பதவியேற்றுக் கொண்டார்.[3][4] அதே நாளில் இவர் 1வது வட மாகாண சபையின் பிரதித் தலைவராக (பிரதித் தவிசாளர்) முதலமைச்சரினால் நியமிக்கப்பட்டு பதவியேற்றுக் கொண்டார்.

மறைவுதொகு

அன்ரனி ஜெகநாதன் 2016 சனிக்கிழமை காலை திடீர் மாரடைப்பு ஏற்பட்டு தனது 68வது அகவையில் காலமானார்.[5]

மேற்கோள்கள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=அன்ரனி_ஜெகநாதன்&oldid=2124929" இருந்து மீள்விக்கப்பட்டது