க. வி. விக்னேஸ்வரன்

கனகசபாபதி விசுவலிங்கம் விக்னேஸ்வரன் (C. V. Wigneswaran, சி. வி. விக்னேஸ்வரன், பிறப்பு: அக்டோபர் 23, 1939) இலங்கைத் தமிழ் உச்சநீதிமன்ற இளைப்பாறிய நீதிபதியும், அரசியல்வாதியும், நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார்.[1] இவர் வடக்கு மாகாண சபையின் முதலாவது முதலமைச்சராக 2013 முதல் 2018 வரை பதவியில் இருந்தார். இவர் மாவட்ட நீதிமன்றம், உயர் நீதிமன்றம், உச்சநீதிமன்றம் ஆகியவற்றின் நீதிபதியாகவும், நீதித் துறை நடுவராகவும் பணியாற்றியவர்.

க. வி. விக்னேஸ்வரன்
நாடாளுமன்ற உறுப்பினர்
2015 இல் விக்னேசுவரன்
வடமாகாணத்தின் 1-வது முதலமைச்சர்
பதவியில்
7 அக்டோபர் 2013 – 23 அக்டோபர் 2018
ஆளுநர்ஜி. ஏ. சந்திரசிறி,
எச். எம். ஜி. எஸ். பலிகக்கார
ரெஜினால்ட் குரே
இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்
பதவியில்
ஆகத்து 2020 – 2024
தொகுதியாழ்ப்பாண மாவட்டம்
வட மாகாண சபை உறுப்பினர்
பதவியில்
2013–2018
தொகுதியாழ்ப்பாண மாவட்டம்
மீயுயர் நீதிமன்ற நீதியரசர்
பதவியில்
மார்ச் 2001 – அக்டோபர் 2004
நியமிப்புசந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க
தலைவர் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி
பதவியில் உள்ளார்
பதவியில்
2018
பொதுச் செயளாலர் தமிழ் மக்கள் கூட்டணி
பதவியில் உள்ளார்
பதவியில்
2018
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு
கனகசபாபதி விசுவலிங்கம் விக்னேஸ்வரன்

23 அக்டோபர் 1939 (1939-10-23) (அகவை 85)
கொழும்பு, இலங்கை
இறப்புappointer
appointer
இளைப்பாறுமிடம்appointer
appointer
குடியுரிமைஇலங்கையர்
தேசியம்இலங்கைத் தமிழர்
அரசியல் கட்சிதமிழ் மக்கள் கூட்டணி
பிற அரசியல்
தொடர்புகள்
தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி
பெற்றோர்
  • appointer
  • appointer
வாழிடம்sநல்லூர், இலங்கை
முன்னாள் கல்லூரி
தொழில்வழக்கறிஞர்

இவர் 2011 செப்டம்பரில் நடைபெற்ற வட மாகாணசபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிட்டு 1,32,255 விருப்பு வாக்குகள் பெற்று வெற்றி பெற்று முதலாவது மாகாண சபையின் முதலமைச்சராகத் தெரிவு செய்யப்பட்டார். 2018 அக்டோபர் 24 இல் முதலாவது வட மாகாணசபையின் காலம் முடியும் வரை இவர் முதலமைச்சராகப் பதவி வகித்தார்.[2] தனது பதவிக்காலம் முடிவடைந்த பின்னர், விக்னேசுவரன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருந்து விலகி தமிழ் மக்கள் கூட்டணி என்ற பெயரில் புதிய கட்சியை 2018 அக்டோபர் 24 இல் ஆரம்பித்தார்.[3] இவர் 2020 நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

விக்னேசுவரன் தமிழ் மக்கள் கூட்டணி, தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி ஆகியவற்றின் தலைவர் ஆவார்.

வாழ்க்கைச் சுருக்கம்

தொகு

கொழும்பு புதுக்கடையில் பிறந்தவர் விக்னேஸ்வரன். இவரது பெற்றோர் கனகசபாபதி விசுவலிங்கம், ஆதிநாயகி யாழ்ப்பாணம், மானிப்பாயில் பிறந்தவர்கள். தந்தை ஒரு அரச ஊழியர், இலங்கையின் பல மாவட்டங்களிலும் பணியாற்றியவர். விக்னேசுவரனுக்கு இரு சகோதரிகள். தனது ஆரம்பக் கல்வியை குருநாகல் கிறைஸ்ட்ச்சேர்ச் கல்லூரியிலும், பின்னர் அனுராதபுரம் திருக்குடும்ப மடப் பள்ளியிலும் பயின்றார்.[4] தனது 11வது அகவையில் விக்னேஸ்வரன் கொழும்பு றோயல் கல்லூரியில் இணைந்து உயர் கல்வி பெற்றார்.[5][6] லண்டன் பல்கலைக்கழக இளங்கலைப் பட்டம் பெற்று, கொழும்பு சட்டக் கல்லூரியில் சட்டம் பயின்று வழக்கறிஞர் ஆனார்.[4] இவரது மகன் இலங்கை அமைச்சரும் அரசியல்வாதியுமான வாசுதேவ நாணயக்காரவின் மகளைத் திருமணம் செய்தவர்.[7][8]

விக்னேசுவரன் சர்ச்சைக்குரிய குரு சுவாமி பிரேமானந்தாவின் ஆதரவாளர் ஆவார். பிரேமானந்தாவை இவர் இயேசுவிற்கு ஒப்பிட்டுள்ளார். அத்துடன், இந்திய சிறைகளில் அடைக்கப்பட்டிருக்கும் பிரேமானந்தாவின் சீடர்கள் மூவரையும் விடுவிக்குமாறு 2017 ஆம் ஆண்டில் விக்னேசுவரன் இந்தியப் பிரதமர் நரேந்திர மோதிக்குக் கடிதம் எழுதியிருந்தார்.[9][10]

நீதித்துறையில் பணி

தொகு

1979 மே 7 இல் இவர் நீதித்துறையில் இணைந்தார்.[6][11] ஆரம்பத்தில் மட்டக்களப்பு, சாவகச்சேரி, மல்லாகம் ஆகிய நீதிமன்றங்களில் நீதித்துறை நடுவராகவும், மாவட்ட நீதிபதியாகவும் பணியாற்றினார்.[6][11] சனவரி 1987ல் கொழும்பு மாவட்ட நீதிபதியாக நியமனம் பெற்றார்.[6][11] 1988 ஆம் ஆண்டில் உயர் நீதிமன்ற நீதியரசராகப் பதவியேற்று, வடக்கு, கிழக்கு, வடமத்திய, ஊவா, மற்றும் மேல் மாகாணங்களில் பணியாற்றினார்.[6] 1995 ஆம் ஆண்டில் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் நீதியரசரானார்.[6] உயர்நீதிமன்ற நீதியரசராக தமிழ்மொழியில் பதவிப்பிரமாண உறுதிமொழி எடுத்துக் கொண்ட விக்னேசுவரன், அந்த விழாவில் தமிழர்கள் இலங்கையில் எதிர்கொள்ளும் சிக்கல்கள் குறித்து ஆற்றிய உரை முக்கியமானதாகும்.

2001 மார்ச்சு மாதத்தில் உச்சநீதிமன்ற நீதியரசராக நியமிக்கப்பட்டார்.[12] 2004 அக்டோபரில் இளைப்பாறினார்.[13]

அரசியல் வாழ்க்கை

தொகு
 
2015 நவம்பரில் விக்னேசுவரன் ஐக்கிய நாடுகளுக்கான அமெரிக்கத் தூதர் சமந்தா பவரைச் சந்தித்தார்.

2013 சூலை 15 இல் விக்னேசுவரன் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் சார்பில் 1வது வட மாகாண சபைக்கு முதலமைச்சர் வேட்பாளராக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் ஏகமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[14][15][16] 2013 செப்டம்பர் 21 இல் இடம்பெற்ற வட மாகாணசபைத் தேர்தலில் இவர் அதிகூடிய விருப்பு வாக்குகள் (132,255) பெற்று முதலாவதாக வந்தார்.[17] இது இலங்கையில் நாடாளுமன்ற, மாகாணசபைத் தேர்தல்களில் தமிழர் ஒருவர் பெற்ற அதிகளவு விருப்பு வாக்குகளாகும். 2013 அக்டோபர் 7 இல் இவர் அரசுத்தலைவர் மகிந்த ராசபக்ச முன்னிலையில் கொழும்பில் அலரி மாளிகையில் 1வது வட மாகாண சபையின் முதலமைச்சராகப் பதவியேற்றார்.[18][19]

2015 இல் இலங்கைத் தமிழரசுக் கட்சித் தலைவர்களான சம்பந்தன், சுமந்திரன், மாவை சேனாதிராஜா ஆகியோருடன் கொள்கையளவில் முரண்பட்டார்.[20][21] 2015 நாடாளுமன்றத் தேர்தல்களில் உண்மையான தமிழ் தேசியவாதிகளுக்கு வாக்களிக்குமாறு தமிழ் வாக்காளர்களைக் கேட்டுக் கொண்டார்.[22] வட மாகாணசபையில் விக்னேசுவரனின் நிருவாகத் திறமைகளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்கள் கேள்விக்குள்ளாக்கினர்.[23] 2015 திசம்பரில் தமிழ் மக்கள் பேரவை என்ற அமைப்பை உருவாக்கி அதன் இணைத்தலைவரானார்.[24][25] தமிழ் சமூகக் குழுக்கள், சமயத் தலைவர்கள், கல்விமான்கள், சில சிறிய அரசியல் கட்சிகள் அடங்கிய இவ்வமைப்பு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு எந்த விதத்திலும் போட்டியாக இராது என உறுதியளிக்கப்பட்டது.[26][27] ஆனாலும், 2018 அக்டோபர் 24 இல் 1-வது வட மாகாணசபையின் ஆயுட்காலம் முடிவடைந்த அடுத்த நாள்,[2] விக்னேசுவரன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருந்து விலகி தமிழ் மக்கள் கூட்டணி என்ற பெயரில் புதிய கட்சியை ஆரம்பித்தார்.[3][28][29][30]

2020 பெப்ரவரியில், விக்னேசுவரனின் தமிழ் மக்கள் கூட்டணி 2020 நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்காக ஏனைய மூன்று சிறிய அரசியல் கட்சிகளுடன் இணைந்து தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி என்ற அரசியக் கூட்டணியை ஆரம்பித்தது.[31][32] விக்னேசுவரன் இக்கூட்டணியின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[33][34] விக்னேசுவரன் இத்தேர்தலில் யாழ்ப்பாண மாவட்டத்தில் போட்டியிட்டு நாடாளுமன்றம் சென்றார். இக்கூட்டணியில் இருந்து வேறு எவரும் வெற்றி பெறவில்லை.[35][36][37]

தேர்தல் வரலாறு

தொகு
சி. வி. விக்னேசுவரனின் தேர்தல் வரலாறு
தேர்தல் தொகுதி கட்சி கூட்டணி வாக்குகள் முடிவு
2013 வடமாகாணம்[17] யாழ்ப்பாண மாவட்டம் இலங்கைத் தமிழரசுக் கட்சி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 1,32,255 தெரிவு
2020 நாடாளுமன்றம்[38] யாழ்ப்பாண மாவட்டம் தமிழ் மக்கள் கூட்டணி தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி 21,554 தெரிவு

மேற்கோள்கள்

தொகு
  1. "Directory of Members: C.V.Wigneswaran". Sri Jayawardenepura Kotte, Sri Lanka: இலங்கை நாடாளுமன்றம். பார்க்கப்பட்ட நாள் 24 September 2020.
  2. 2.0 2.1 "இலங்கை முதலாவது வடக்கு மாகாண சபையின் ஆயுள் நாளை முடிகிறது". பிபிசி தமிழ். 23-10-2018. பார்க்கப்பட்ட நாள் 27-10-2018. {{cite web}}: Check date values in: |accessdate= and |date= (help)
  3. 3.0 3.1 "தமிழ் மக்கள் கூட்டணி: இலங்கை வட மாகாண முதல்வர் விக்னேஸ்வரன் புதுக்கட்சி தொடங்கினார்". பிபிசி தமிழ். 24-10-2018. பார்க்கப்பட்ட நாள் 27-10-2018. {{cite web}}: Check date values in: |accessdate= and |date= (help)
  4. 4.0 4.1 I’m not a politician, I only wish to serve my suffering people’, சண்டே டைம்ஸ், சூலை 22, 2013
  5. Bastians, Dharisha (31 அக்டோபர் 2004). "Justice on a razor's edge". த சண்டே லீடர். http://www.thesundayleader.lk/archive/20041031/interviews.htm. 
  6. 6.0 6.1 6.2 6.3 6.4 6.5 Fernando, Susitha R. (20 அக்டோபர் 2004). "Top Judge Hits Out at Judicial Process". டெய்லி மிரர் (Asian Human Rights Commission) இம் மூலத்தில் இருந்து 2010-03-19 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20100319220632/http://newsletters.ahrchk.net/js/mainfile.php/0343/644/. 
  7. ரத்னஜீவன் ஹூல் (23 April 2013). "Mischief By Asian Tribune: The Northern Province Chief Minister Candidature". Colombo Telegraph. http://www.colombotelegraph.com/index.php/mischief-by-asian-tribune-the-northern-province-chief-minister-candidature/. 
  8. Rajasingham, K. T. (28 ஏப்ரல் 2013). "Simmering discontent within TNA threatens to explode". சண்டே ஒப்சேர்வர் இம் மூலத்தில் இருந்து 2013-05-13 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20130513215157/http://www.sundayobserver.lk/2013/04/28/pol03.asp. 
  9. D. B. S. Jeyaraj (22 April 2017). "C.V.Wigneswaran hurts Christian sentiments". Daily Mirror (Colombo, Sri Lanka). http://www.dailymirror.lk/article/C-V-Wigneswaran-hurts-Christian-sentiments-127591.html. பார்த்த நாள்: 27 October 2018. 
  10. Karthick, S. (24 April 2015). "Lanka province CM seeks release of 3 convicts in Premananda". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. Times News Network (Mumbai, India). https://timesofindia.indiatimes.com/city/chennai/Lanka-province-CM-seeks-release-of-3-convicts-in-Premananda-case/articleshow/47033589.cms. பார்த்த நாள்: 27 October 2018. 
  11. 11.0 11.1 11.2 Maniccavasagar, Chelvatamby (2 நவம்பர் 2004). "Justice Wigneswaran - a multi-faceted personality". டெய்லி நியூஸ் இம் மூலத்தில் இருந்து 2005-09-12 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20050912225648/http://www.dailynews.lk/2004/11/02/fea07.html. 
  12. "S.C Judge says Tamil rights were snatched away". தமிழ்நெட். 8 மார்ச் 2001. http://www.tamilnet.com/art.html?catid=13&artid=5839. 
  13. "Veteran Supreme Court Judge retires". தமிழ்நெட். 20 October 2004. http://www.tamilnet.com/art.html?catid=13&artid=13186. 
  14. Justice Wigneswaran TNA CM candidate, டெய்லிமிரர், சூலை 15, 2013
  15. Rajasingham, K. T. (19 April 2013). "Retd. Justice C.V. Wigneswaran: Chief Minister Candidate of Tamil National Alliance?". ஏசியன் டிரிபியூன் இம் மூலத்தில் இருந்து 23 மே 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20130523045006/http://asiantribune.com/node/62317. 
  16. Peiris, Harim (1 மே 2013). "TNA vs LTTE – The Northern Provincial Council stakes". தி ஐலண்டு இம் மூலத்தில் இருந்து 2013-05-18 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20130518102140/http://www.island.lk/index.php?page_cat=article-details&page=article-details&code_title=78048. 
  17. 17.0 17.1 "Provincial Council Elections 2013 – Results and preferential votes: Northern Province". Daily Mirror (Colombo, Sri Lanka). 26 September 2013. http://www.dailymirror.lk/infographics/provincial-council-elections-2013-results-and-preferential-votes-northern-province/193-36078. பார்த்த நாள்: 24 September 2020. 
  18. ஜனாதிபதி முன்னிலையில் விக்னேஸ்வரன் சத்தியப் பிரமாணம் செய்து கொண்டார் பரணிடப்பட்டது 2013-10-09 at the வந்தவழி இயந்திரம், தமிழ்வின், அக்டோபர் 7, 2013
  19. "Northern PC Chief Minister Vigneswaran sworn in". Asiantribune. பார்க்கப்பட்ட நாள் 7 அக்டோபர் 2013.
  20. Chandraprema, C. A. (26 October 2018). "Wigneswaran’s new party: Debut at PC polls or Presidential election?". The Island (Colombo, Sri Lanka) இம் மூலத்தில் இருந்து 25 அக்டோபர் 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20181025222555/http://www.island.lk/index.php?page_cat=article-details&page=article-details&code_title=193324. பார்த்த நாள்: 27 October 2018. 
  21. Balachandran, P. K. (26 June 2018). "Both Sampanthan and Wigneswaran seeking unity, but terms clash". The Island (Colombo, Sri Lanka) இம் மூலத்தில் இருந்து 28 அக்டோபர் 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20181028225808/http://www.island.lk/index.php?page_cat=article-details&page=article-details&code_title=186889. பார்த்த நாள்: 27 October 2018. 
  22. "Wigneswaran Lashes Out at Concentration of Power in his Party". http://www.newindianexpress.com/world/Wigneswaran-Lashes-Out-at-Concentration-of-Power-in-his-Party/2015/09/27/article3050372.ece. 
  23. "TNA And Wigneswaran May Be Heading For A Split". http://www.newindianexpress.com/business/news/TNA-And-Wigneswaran-May-Be-Heading-For-A-Split/2015/08/03/article2955549.ece. 
  24. "Tamil People’s Council inaugurated in Jaffna". Tamil Guardian. 19 December 2015. https://www.tamilguardian.com/content/tamil-people%E2%80%99s-council-inaugurated-jaffna?articleid=16817. பார்த்த நாள்: 27 October 2018. 
  25. "TPC success depends on geopolitically addressing national question". தமிழ்நெட். 25 December 2015. https://www.tamilnet.com/art.html?catid=79&artid=38061. பார்த்த நாள்: 26 October 2018. 
  26. "New Tamil Group Not Alternative To TNA". த சண்டே லீடர் (Colombo, Sri Lanka). 27 December 2015. http://www.thesundayleader.lk/2015/12/27/new-tamil-group-not-alternative-to-tna/. பார்த்த நாள்: 27 October 2018. 
  27. Ramakrishnan, T. (28 December 2015). "Another Tamil group joins Tamil People’s Council". தி இந்து (Chennai, India). https://www.thehindu.com/news/international/another-tamil-group-joins-tamil-peoples-council/article8037656.ece. பார்த்த நாள்: 27 October 2018. 
  28. "Wiggy parts ways with TNA, forms TPA". டெய்லிமிரர். 24-10-2018. பார்க்கப்பட்ட நாள் 27-10-2018. {{cite web}}: Check date values in: |accessdate= and |date= (help)
  29. Srinivasan, Meera (25 October 2018). "Wigneswaran floats new political party". தி இந்து (Chennai, India). https://www.thehindu.com/news/international/wigneswaran-floats-new-political-party/article25313312.ece. பார்த்த நாள்: 27 October 2018. 
  30. Madushanka, Romesh (24 October 2018). "Wiggy parts ways with TNA, forms TPA". Daily Mirror (Colombo, Sri Lanka). http://www.dailymirror.lk/article/Wiggy-parts-ways-with-TNA-forms-TPA-157303.html. பார்த்த நாள்: 27 October 2018. 
  31. "New alliance for North". Daily FT (Colombo, Sri Lanka). 10 February 2020. http://www.ft.lk/news/New-alliance-for-North/56-695397. பார்த்த நாள்: 2 August 2020. 
  32. Rajasingham, K. T, (10 February 2020). "Disgruntled Tamil elements form a new alliance to divides Tamils further". ஏசியன் டிரிபியூன் (Colombo, Sri Lanka) இம் மூலத்தில் இருந்து 21 பிப்ரவரி 2020 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20200221021933/http://www.asiantribune.com/node/93393. பார்த்த நாள்: 2 August 2020. 
  33. டி. பி. எஸ். ஜெயராஜ் (24 March 2020). "How Will the TNA fare at Parliamentary Election?". Daily Mirror (Colombo, Sri Lanka). http://www.dailymirror.lk/opinion/How-Will-the-TNAfare-at-Parliamentary-Election/172-185559. பார்த்த நாள்: 2 August 2020. 
  34. "Polls at last; lacklustre election campaign ends tonight". Sunday Times (Colombo, Sri Lanka). 2 August 2020. http://www.sundaytimes.lk/200802/columns/polls-at-last-lacklustre-election-campaign-ends-tonight-411316.html. பார்த்த நாள்: 2 August 2020. 
  35. "Part I : Section (I) — General - Government Notifications - Parliamentary Elections Act, No. 1 of 1981" (PDF). இலங்கை அரச வர்த்தமானி Extraordinary. No. 2187/26. Colombo, Sri Lanka. 8 August 2020. p. 5A. பார்க்கப்பட்ட நாள் 9 August 2020.
  36. "General Election 2020: Preferential votes of Jaffna District". Ceylon Today (Colombo, Sri Lanka). 7 August 2020 இம் மூலத்தில் இருந்து 27 அக்டோபர் 2020 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20201027094033/https://ceylontoday.lk/news/general-election-2020-preferential-votes-of-jaffna-district. பார்த்த நாள்: 24 September 2020. 
  37. D. B. S. Jeyaraj (8 August 2020). "TNA suffers electoral setback in North and East polls". Daily Mirror (Colombo, Sri Lanka). http://www.dailymirror.lk/opinion/TNA-suffers-electoral-setback-in-North-and-East-polls/172-193440. பார்த்த நாள்: 24 September 2020. 
  38. "General Election Preferential Votes". Daily News (Colombo Sri Lanka, Sri Lanka): p. 2. 8 August 2020. http://www.dailynews.lk/2020/08/08/political/225317/general-election-preferential-votes. பார்த்த நாள்: 20 September 2020. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=க._வி._விக்னேஸ்வரன்&oldid=4143207" இலிருந்து மீள்விக்கப்பட்டது