ஜி. ஏ. சந்திரசிறி

ஜி. ஏ. சந்திரசிறி (Major General G. A. Chandrasiri, பிறப்பு: 1954) இலங்கையின் படைத்துறைத் தளபதியும் யாழ்ப்பாணம் பாதுகாப்புப் படைத் தலைமையக முன்னாள் பொறுப்பதிகாரியும், இலங்கை இராணுவத்தின் 52வது படைப்பிரிவின் முன்னாள் தலைவரும், ஆவார். இவர் தற்போது வட மாகாண ஆளுனராகப் பணியாற்றுகிறார்.[1]

ஜி. ஏ. சந்திரசிறி
G. A. Chandrasiri
பிறப்பு 1954
பிரிவு இலங்கை படைத்துறை
சேவை ஆண்டு(கள்) 1974-2009
தரம் படைத்துறைப் பணித்தலைவர்
Major General
அலகு இலங்கை கவச வாகன அணி
ஆணை தளபதி, பாதுகாப்புப் படைகளின் தலைமை அலுவலகம், யாழ்ப்பாணம்,
52வது பிரிவு
சமர்/போர்கள் 1987-89 ஜேவிபி புரட்சி,
ஈழப் போர்
விருதுகள் ரண விக்கிரம பதக்கம், உத்தம சேவைப் பதக்கம்
வேறு பணி வட மாகாண ஆளுனர்

சந்திரசிறி 1974 ஆம் ஆண்டில் இலங்கை இராணுவத்தில் இணைந்தார். 1976 இல் இவர் இலங்கை கவச வாகன அணியில் இரண்டாம் லெப்டினண்டாகச் சேர்ந்தார். பிரிகேடியராகத் தரம் உயர்த்தப்பட்டார். மன்னாரில் பணியாற்றிய பின்னர் ஈழப்போரின் இறுதிக் கட்டத்தில் (2008-2009) யாழ்ப்பாணத் தலைமையகப் பொறுப்பதிகாரியாக இருந்தார். 2009 இல் இராணுவத்தில் இருந்து இளைப்பாறிய பின்னர் வட மாகாணத்தின் ஆளுனராக நியமிக்கப்பட்டார்.

மேற்கோள்கள்தொகு

வெளி இணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜி._ஏ._சந்திரசிறி&oldid=2146264" இருந்து மீள்விக்கப்பட்டது