அன்ரன் ரெய்ச்செனோவ்
அன்ரன் ரெய்ச்செனோவ் (Anton Reichenow)(1 ஆகத்து 1847 சார்லட்டன்பர்க்கில் - 6 சூலை 1941 ஆம்பர்கு) என்பவர் ஜெர்மன் பறவையியல் மற்றும் ஹெர்பெட்டாலஜிஸ்ட் ஆவார் .
பணி
தொகுரெய்ச்செனோவ் ஜீன் கபானிசின் மருமகன் மற்றும் பெர்லின் இயற்கை வரலாற்று அருங்காட்சியகத்தில் 1874 முதல் 1921 வரை பணியாற்றியவர் ஆவார். இவர் ஆப்பிரிக்கப் பறவைகளின் நிபுணராக இருந்தார். 1872 மற்றும் 1873-ல் மேற்கு ஆப்பிரிக்காவிற்குப் பறவைச் சேகரிப்பு பயணத்தை மேற்கொண்டார். மேலும் டை வோகல் ஆப்ரிகாசு (1900-05) என்ற நூலினை எழுதியுள்ளார். இவர் கிளிகள் பற்றிய நிபுணராகவும் இருந்துள்ளார்.
புத்தகங்கள்
தொகுரெய்ச்செனோவால் அறியப்பட்ட அனைத்து உயிரினங்களையும் இவரது புத்தகமான வோஜெல்பில்டெர் ஆசு பெர்னென் சோனென்:அபிடுன்ஜென் அண்டு பெச்ச்ஹ்ரெபஙென் டெர் பபாஜெயின் (Vogelbilder aus Fernen Zonen: Abbildungen und Beschreibungen der Papageien) (குஸ்டாவ் முட்ஸெல், 1839-1893 விளக்கினார்) விவரித்துள்ளார். இவர் டை வோஜெல் டெர் பிசுமர்சின்செலின் (Die Vögel der Bismarckinseln)(1899) என்ற நூலையும் எழுதியுள்ளார். இவர் 1894 முதல் 1921 வரை ஆர்னிதாலஜி ஆய்விதழின் ஆசிரியராக இருந்தார்.
நினைவாக
தொகுரெய்ச்செனோவ் மரங்கொத்தி மற்றும் ரைச்செனோவ் தீச்சில்லை உட்ப்பட பல பறவைகளுக்கு இவரது பெயரிடப்பட்டுள்ளது. இவரது மகன் எட்வர்ட் ரெய்ச்செனோ ஒரு பிரபலமான புரோட்டோ விலங்கியலாளர் ஆவார் .
ரெய்ச்செனோவ் ஹெர்பெட்டாலஜி அறிவியல் துறையில் பணியாற்றினார். ஒரு புதிய பேரினம் மற்றும் இரண்டு புதிய சிற்றின தவளைகள்,[1] மற்றும் இரண்டு புதிய வகை பல்லிகளை விவரித்த பெருமை இவருக்கு உண்டு.[2] லாசெர்டாசுபிசு ரெய்ச்செனோவி என்ற அரணை வகையின் அறிவியல் பெயரால் இவர் நினைவுகூரப்படுகிறார்.[3]
வகைப்பாட்டியலில்
தொகுரெய்ச்செனோ பறவைகளை ஆறு குழுக்களாக வகைப்படுத்தியதற்காக அறியப்படுகிறார். ரெய்ச்செனோ வகைப்படுத்திய ஆறு குழுக்கள்: "குறுகிய இறக்கையின, நீந்துபவை, நெடுங்காலிகள், தோல் அலகுகள், நுகமுடையன மற்றும் மரவாழ் பறவைகள்" என்பன. இதனை மற்ற பறவையியலாளர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனால் தூவி தசம வகைப்படுத்துவதில் பயன்படுத்தப்படுகிறது.
மேற்கோள்கள்
தொகு- ↑ Amphibian Species of the World 5.6, an Online Reference. research.amnh.org/vz/herpetology/amphibia.
- ↑ The Reptile Database. www.reptile-database.org.
- ↑ Beolens, Bo; Watkins, Michael; Grayson, Michael (2011). The Eponym Dictionary of Reptiles. Baltimore: Johns Hopkins University Press. xiii + 296 pp. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4214-0135-5. ("Reichenow", pp. 218-219).