அபானி ராய்

இந்திய அரசியல்வாதி

அபானி ராய் (Abani Roy)(10 மார்ச் 1939 - 25 நவம்பர் 2021) என்பவர் மேற்கு வங்காளத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் இந்திய நாடாளுமன்றத்தின் மேலவையான மாநிலங்களவையின் உறுப்பினராக இருந்தவர் ஆவார். இவர் புரட்சிகர சோசலிசக் கட்சியின் தலைவராக இருந்தார். ஐக்கிய தொழிற்சங்க காங்கிரஸின் பொதுச் செயலாளராகவும் இருந்துள்ளார். [1] 1959ஆம் ஆண்டு இவருக்கு 20 வயதாகும் போது புரட்சிகர சோசலிசக் கட்சியில் இணைந்தார், ராய் இக்கட்சியின் மத்திய செயலகத்தில் உறுப்பினராகவும், சிறிது காலம் கட்சியின் பொதுச் செயலாளராகவும் இருந்தார். 1978ஆம் ஆண்டு கொல்கத்தா மாநகராட்சிக்கு உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டபோது தேர்தல் அரசியலில் முதன்முதலாக நுழைந்தார். இவர் 1998-ல்[2] மாநிலங்களவை உறுப்பினராகப் பதவியேற்று ஆகத்து 2011-ல் ஓய்வு பெற்றார்.

அபானி ராய்
இறப்பு25 நவம்பர் 2021 Edit on Wikidata

ராய் 25 நவம்பர் 2021 அன்று தனது 84 வயதில் தில்லியில் உள்ள ராம் மனோகர் லோஹியா மருத்துவமனையில் இறந்தார்.[3]

மேற்கோள்கள் தொகு

  1. "RSP warns Abani Roy MP". https://www.newindianexpress.com/cities/thiruvananthapuram/2009/oct/07/rsp-warns-abani-roy-mp-94567.html. 
  2. "Abani Roy, key Left Front face in UPA-1, dies". 26 November 2021.
  3. "Senior RSP leader Abani Roy passes away at 84" (in en). Deccan Herald. 2021-11-25. https://www.deccanherald.com/national/north-and-central/senior-rsp-leader-abani-roy-passes-away-at-84-1054326.html. 

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=அபானி_ராய்&oldid=3610859" இலிருந்து மீள்விக்கப்பட்டது