அபா மகதோ

இந்திய அரசியல்வாதி

அபா மகதோ (Abha Mahato; பிறப்பு அக்டோபர் 27,1964) சார்க்கண்டின் ஜம்சேத்பூரைச் சேர்ந்த இந்திய நாடாளுமன்ற மேனாள் உறுப்பினர் ஆவார்.[1]

அபா மகாதோ
நாடாளுமன்ற உறுப்பினர்
முன்னையவர்நிதிஷ் பரத்வாஜ்
பின்னவர்சுமன் மகதோ
தொகுதிஜம்ஷேத்பூர்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு27 அக்டோபர் 1964 (1964-10-27) (அகவை 60)
தேவ்கர் மாவட்டம், சார்க்கண்டு, இந்தியா
அரசியல் கட்சிபாரதிய ஜனதா கட்சி (26 பிப்ரவரி 2019 வரை) இந்திய தேசிய காங்கிரசு (27 பிப்ரவரி 2019 முதல்)
துணைவர்சைலேந்திர மகதோ (தி. 1988)
பிள்ளைகள்2
வாழிடம்புது தில்லி
மூலம்: [1]

தனிப்பட்ட வாழ்க்கை

தொகு

மகதோ 1964ஆம் ஆண்டில் தியோகரில் (அப்போது பீகார் மாநிலத்தில்) பிறந்தார். இவர் தியோகர் கல்லூரியில் (பாகல்பூர் பல்கலைக்கழகம்) கல்வி பயின்றார். இங்கு இவர் அரசியல் அறிவியலில் இளங்கலைப் பட்டம் பெற்றார்.

முன்னாள் மக்களவை உறுப்பினரான சைலேந்திர மகதோவை மணந்தார். இந்த இணையருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.

அரசியல்

தொகு

பாரதிய ஜனதா கட்சி உறுப்பினராக ஜம்ஷெத்பூர் மக்களவைத் தொகுதியிலிருந்து 12 மற்றும் 13வது மக்களவைக்கு மகதோ தேர்ந்தெடுக்கப்பட்டார். வர்த்தகம், நிலக்கரி, ஜவுளி, பெண்கள் அதிகாரமளித்தல் மற்றும் பெண்கள் தொடர்பான சட்டங்கள் தொடர்பான பல்வேறு நாடாளுமன்றக் குழுக்களில் உறுப்பினராக இருந்துள்ளார். இவர் பாரதிய ஜனதா கட்சி விட்டு வெளியேறி 27 பிப்ரவரி 2019 அன்று இந்திய தேசிய காங்கிரசில் சேர்ந்தார்.[2]

மேற்கோள்கள்

தொகு
  1. "Biography at Parliament of India". Archived from the original on 8 October 2012. பார்க்கப்பட்ட நாள் 11 March 2013.
  2. "Former MP couple from Jamshedpur ditch BJP, join Congress - Times of India". The Times of India. பார்க்கப்பட்ட நாள் 2019-03-02.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அபா_மகதோ&oldid=4116372" இலிருந்து மீள்விக்கப்பட்டது