அபித் அலி

பாக்கித்தான் துடுப்பாட்டக்காரர்

அபித் அலி ( Abid Ali (cricketer) பிறப்பு 16 அக்டோபர் 1987) ஒரு பாக்கித்தான் துடுப்பாட்ட வீரர் ஆவார். இவர் பாக்கித்தான் துடுப்பாட்ட அணிக்காக ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் சர்வதேச அளவில் விளையாடி வருகிறார். மேலும் இவர் முதல் தரத் துடுப்பாட்டம் , பட்டியல் அ துடுப்பாட்டம் மற்றும் இருபது20 ஆகிய போட்டிகளிலும் விளையாடி வருகிறார். இவர் 2005 ஆம் ஆண்டில் தனது பட்டியல் அ துடுப்பாட்டப் போட்டிகளிலும் 2007 ஆம் ஆண்டில் முதல் தரத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் அறிமுகமானார்.[1] 2019 ஆம் ஆண்டில் இவர் சர்வதேச அளவில் பாக்கித்தான் அணியின் சார்பாக விளையாடினார். இவர் முதல் தரத் துடுப்பாட்டப் போட்டிகளில் 6,700 ஓட்டங்களையும் , பட்டியல் அ போட்டிகளில் 3,000 ஓட்டங்களையும் எடுத்தார்.[2] மேலும் இவர் 19 வயதிற்கு உட்பட்ட பாக்கித்தான் அணி , பாக்கித்தான் அ அணி சார்பாகவும் இவர் துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டார்.

உள்நாட்டு தொழில்தொகு

முதல் தரத் துடுப்பாட்டம்தொகு

2007 ஆம் ஆண்டில் இவர் முதல் தரத் துடுப்பாட்டப் போட்டிகளில் அறிமுகமானார். 2007 இல் நடைபெற்ற குவைத் -இ- அசாம் துடுப்பாட்டக் கோப்பைத் தொடரில் இவர் விளையாடினார். டிசம்பர் 26, பைசாலதாபாத் துடுப்பாட்ட அரங்கத்தில் நடைபெற்ற பைசாலாபாத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான போட்டியில் இவர் அறிமுகமானார். இந்தப் போட்டியின் முதல் ஆட்டப் பகுதியில் இவர் 115 பந்துகளில் 28 ஓட்டங்கள் எடுத்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்தப் போட்டி சமனில் முடிந்தது.[3]

பட்டியல் அதொகு

2005 ஆம் ஆண்டில் இவர் பட்டியல் அ துடுப்பாட்டப் போட்டிகளில் அறிமுகமானார். 2005 இல் நடைபெற்ற ஏபி என் - அம்ரோ துடுப்பாட்டக் கோப்பைத் தொடரில் இவர் விளையாடினார். சனவரி 9, கராச்சி துடுப்பாட்ட அரங்கத்தில் நடைபெற்ற முல்தான் டைகர்ஸ் துடுப்பாட்ட அணிக்கு எதிரான போட்டியில் இவர் அறிமுகமானார். இந்தப் போட்டியில் இவர் 15 பந்துகளில் 7 ஓட்டங்கள் எடுத்து அப்துர் ராஃப் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இந்தப் போட்டியில் லாகூர் ஈகிள்ஸ் துடுப்பாட்ட அணி இரண்டு இலக்குகளால் வெற்றி பெற்றது.[4]

இருபது 20தொகு

2005 ஆம் ஆண்டில் இவர் இருபது20 போட்டிகளில் அறிமுகமானார். 2005 இல் நடைபெற்ற ஏபி என் - அம்ரோ இருபது20 துடுப்பாட்டக் கோப்பைத் தொடரில் இவர் விளையாடினார். ஏப்ரல் 26, லாகூர் துடுப்பாட்ட அரங்கத்தில் நடைபெற்ற சியல்கோட் இசுட்டாலியன்ஸ் துடுப்பாட்ட அணிக்கு எதிரான போட்டியில் இவர் அறிமுகமானார். இந்தப் போட்டியில் இவர் 3 பந்துகளில் 1 ஓட்டங்கள் எடுத்து நவீத் உல் அசன் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இந்தப் போட்டியில் லாகூர் ஈகிள்ஸ் துடுப்பாட்ட அணி மூன்று இலக்குகளால் வெற்றி பெற்றது.[5]

சர்வதேசப் போட்டிகள்தொகு

ஒருநாள் போட்டிகள்தொகு

2019 ஆம் ஆண்டில் இவர் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் அறிமுகமானார். 2019 இல் ஆத்திரேலியத் துடுப்பாட்ட அணி பாக்கித்தானில் சுற்றுப் பயணம் செய்து விளையாடியது. மார்ச் 29, துபாய் துடுப்பாட்ட அரங்கத்தில் நடைபெற்ற ஆத்திரேலியத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான போட்டியில் இவர் அறிமுகமானார். இந்தப் போட்டியில் இவர் 119 பந்துகளில் 112 ஓட்டங்கள் எடுத்து சம்பா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இந்தப் போட்டியில் ஆத்திரேலியத் துடுப்பாட்ட அணி ஆறு ஓட்டங்களால் வெற்றி பெற்றது.[6]

குறிப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=அபித்_அலி&oldid=2868232" இருந்து மீள்விக்கப்பட்டது