அபிமன்யூ (யானை)
அபிமன்யூ என்பது இந்தியாவைச்சேர்ந்த ஆசிய யானையாகும். இது கர்நாடகாவின் அடர்ந்த காட்டுப்பகுதியில் (born அண். 1964) பிறந்திருக்கலாம். 2020 ம் ஆண்டில் இருந்து விஜயதசமி நாளில் கர்நாடக மாநிலத்தின் மைசூரு நகரில் நடைபெறும் மைசூரு தசரா விழாவின் சிறப்பான தங்க அம்பாரியின் முதன்மை யானையாக இருந்து வருகிறது.[3] இந்து இதிகாசமான மகாபாரதத்தின் முக்கிய கதாபாத்திரமான அர்ஜூனனின் மகனாகிய அபிமன்யூவின் பெயராலே இந்த யானையும் அபிமன்யூ என்று பெயரிடப்பட்டுள்ளது.[4]
அபிமன்யூ | |
---|---|
அபிமன்யூ - மைசூர் தசராவில் தங்க அம்பாரியை தாங்கிச் சென்ற முன்னணி யானை! | |
இனம் | ஆசிய யானை |
பால் | ஆண் |
பிறப்பு | சுமார் அண். 1964 (அகவை 59–60)[1] |
நாடு | இந்தியா |
Occupation | தங்க அம்பாரியை சுமந்து செல்வது |
செயற்பட்ட ஆண்டுகள் | 2020 |
Predecessor | அர்ச்சுனா |
நிறை | 5,000 kg (11,000 lb)[2] |
உயரம் | 2.72 m (8 அடி 11 அங்) |
Named after | அருச்சுனன் மகனான அபிமன்யு |
பிறப்பும் வாழ்வும்
தொகு1977 ஆம் ஆண்டு ஹெப்பல்லா காட்டில் இருந்து பிடித்துக்கொண்டு வரப்பட்டு குடகு மாவட்டத்தின் தித்திமதியில் அமைந்துள்ள மத்திகோடு யானைகள் முகாமிற்கு கொண்டு வரப்பட்டது. 2007 ஆம் ஆண்டிலிருந்தே அபிமன்யூ யானையும் அதன் கூட்டாளிகளான யானைகளோடு மைசூரின் தசரா கொண்டாட்டத்தில் ஈடுபடுத்தப்பட்டு வந்தது. அம்பாரியை சுமந்து செல்லும் யானைகளுக்கு பல வருடங்களுக்கு முன்பாகவே பாகன்களால் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. பலராமன் என்ற யானை 1999 மற்றும் 2011க்குமிடையில் பதின்மூன்று முறை அம்பாரியை எடுத்துச் சென்றதோடு மொத்தமாக 19க்கும் மேற்பட்ட முறை ஊர்வலத்தில் முதன்மை யானையாக பங்கேற்ற பெருமையைக் கொண்டுள்ளது. 2012 இல் அதனிடமிருந்து அர்ச்சுனன் என்ற யானை பொறுப்பேற்றது.[5] அம்பாரி சுமக்கும் யானையாக அதன் தேர்வு அக்டோபர் 2012இல் அமைப்பாளர்களால் உறுதிப்படுத்தப்பட்டது. [6] அதன் தொடர்ச்சியாக இந்த அபிமன்யூ (யானை) 2020ம் ஆண்டு முதல் சாமுண்டி தேவியின் சிலையை தங்க அம்பாரியில் சுமந்து செல்லும் முதன்மை யானையாக இருந்து வருகிறது.
மேற்கோள்கள்
தொகு- ↑ "Abhimanyu Asian elephant". elephant.se.
- ↑ "Mysuru: Dasara jumbo Bheema gains nearly 400kg in one month" (in en). The Times of India. 11 September 2022. https://timesofindia.indiatimes.com/city/mysuru/mysuru-dasara-jumbo-bheema-gains-nearly-400kg-in-one-month/articleshow/94125159.cms.
- ↑ "A jumbo 'log book' that records the origins of Mysuru Dasara tuskers". The Hindu (in Indian English). 7 August 2022.
- ↑ "54-year-old Abhimanyu to carry golden howdah this Dasara". The Hindu (in Indian English). 11 September 2020.
- ↑ "Arjuna inches closer to be howdah elephant". The Times of India. 17 October 2012. http://timesofindia.indiatimes.com/city/mysuru/Arjuna-inches-closer-to-be-howdah-elephant/articleshow/16854188.cms. பார்த்த நாள்: 22 October 2015.
- ↑ "Know your Dasara elephants". The Hindu. 15 August 2014. http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-karnataka/know-your-dasara-elephants/article6320447.ece. பார்த்த நாள்: 22 October 2015.