தங்க அம்பாரி
தங்க அம்பாரி (Golden Howdah) என்பது மைசூர் தசராவின் போது முன்னணி யானை மீது ஏற்றப்படும் ஒரு இருக்கையாகும். புகழ்பெற்ற தசரா பண்டிகையின் போது 2012 முதல், இது அர்ச்சுனன் என்ற யானையால் சுமந்துச் செல்லப்பட்டது. [1]
அம்பாரி
தொகுஇது தயாரிக்கப்பட்ட சரியான தேதி தெரியவில்லை. மைசூர் அரசர்கள் இதன் மீது அமர்ந்து புகழ்பெற்ற தசரா ஊர்வலத்தில் கலந்துகொண்டனர். இந்த ஊர்வலம் ஒவ்வொரு ஆண்டும் திருவிழாவின் போது நகரத்தில் நடந்தது. ஆனால் மன்னாரட்சி முறை ஒழிக்கப்பட்டதிலிருந்து மன்னருக்கு பதில் சாமுண்டியின் சிலை மட்டும் அம்பாரியில் கொண்டு செல்லப்படுகிறது. 750-கிலோ எடை கொண்ட மரத்தால் செய்யப்பட்ட இதன் இந்த அம்பாரியின் மேற்புறம் தூயத் தங்கத்தாள்களால் வேயப்பட்டது.
நான்கு பக்கங்களிலும் மூன்று செதுக்கப்பட்ட தூண்கள் உள்ளன. இது கிரீடத்தை ஒத்த ஒரு விதானத்தால் மூடப்பட்டுள்ளது. அதன் மேல் ஐந்து புனிதமான "கலசங்கள்" உள்ளன. இருக்கை வெள்ளியால் ஆனது. அழகிய வடிவமைப்புகள் அதை அழகுபடுத்துகின்றன. மேலும் இது தசரா நேரங்களில் மட்டுமே வெளிக் கொணரப்படும்.
ஊர்வலம்
தொகுமுன்னணி யானையின் மீது தங்க அம்பாரியில் சாமுண்டியின் சிலை வைக்கப்பட்டு 5.5 கிலோமீட்டருக்கும் அதிகமான ஊர்வலம் மைசூர் நகரத்தை கடந்து, மைசூர் அரண்மனையில் தொடங்கி பன்னிமண்டப்பத்தில் முடிவடைகிறது. அம்பாரியை சுமந்து செல்லும் யானைகளுக்கு பல வருடங்களுக்கு முன்பே பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. பலராமன் என்ற யானை 19 முறை ஊர்வலத்தில் பங்கேற்ற பெருமையைக் கொண்டுள்ளது. மேலும், 1999 மற்றும் 2011க்குமிடையில் பதின்மூன்று முறை அம்பாரியை எடுத்துச் சென்றது. 2012 இல் அதனிடமிருந்து அர்ச்சுனன் பொறுப்பேற்றது.[2] அம்பாரி சுமக்கும் யானையாக இதன் தேர்வு அக்டோபர் 2012இல் அமைப்பாளர்களால் உறுதிப்படுத்தப்பட்டது. [3]
மேற்கோள்கள்
தொகு- ↑ . 22 October 2015.
- ↑ "Arjuna inches closer to be howdah elephant". The Times of India. 17 October 2012. http://timesofindia.indiatimes.com/city/mysuru/Arjuna-inches-closer-to-be-howdah-elephant/articleshow/16854188.cms. பார்த்த நாள்: 22 October 2015.
- ↑ "Know your Dasara elephants". The Hindu. 15 August 2014. http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-karnataka/know-your-dasara-elephants/article6320447.ece. பார்த்த நாள்: 22 October 2015.