அபுயிட்டு

பாசுப்பேட்டுக் கனிமம்

அபுயிட்டு (Abuite) என்பது CaAl2(PO4)F2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமம் ஆகும். கால்சியம் அலுமினியம் பாசுப்பேட்டு கனிமம் என்று கருதப்படும் இக்கனிமம் நிறமற்று செஞ்சாய்சதுரப் படிகங்களாகக் காணப்படுகிறது. பளபளப்பாகவும் ஒளி புகக்கூடியதாகவும் உள்ளது. அபுயிட்டு ஒரு நீரேற்று என்பதைத் தவிர்த்து வேதியியல் ரீதியாக காலிசுகைட்டைப் போன்றது.[3]

அபுயிட்டு
Abuite
பொதுவானாவை
வகைபாசுப்பேட்டு கனிமம்
வேதி வாய்பாடுCaAl2(PO4)2F2
இனங்காணல்
மோலார் நிறை321.98[1]
நிறம்நிறமற்றது
படிக அமைப்புசெஞ்சாய்சதுரம்
மிளிர்வுபளபளப்பு
கீற்றுவண்ணம்வெண்மை
ஒளிஊடுருவும் தன்மைஒளிபுகும்
அடர்த்தி3.214 கி செ.மீ−1 (கணக்கிடப்பட்டது)
புறவூதா ஒளிர்தல்இல்லை
மேற்கோள்கள்[2][3]

பன்னாட்டு கனிமவியல் சங்கம் அபுயிட்டு கனிமத்தை Abu[4] என்ற குறியீட்டால் அடையாளப்படுத்துகிறது.

மேற்கோள்கள்

தொகு
  1. "Abuite molweight calculation with work".
  2. Enju, Satomi; Uehara, Seiichiro (2017). "Abuite, CaAl2(PO4)2F2, a new mineral from the Hinomaru–Nago mine, Yamaguchi Prefecture, Japan". Journal of Mineralogical and Petrological Sciences 112 (3): 109–115. doi:10.2465/jmps.170131. Bibcode: 2017JMPeS.112..109E. 
  3. 3.0 3.1 Abuite பரணிடப்பட்டது 2019-04-06 at the வந்தவழி இயந்திரம் on mindat.org
  4. Warr, L.N. (2021). "IMA–CNMNC approved mineral symbols". Mineralogical Magazine 85 (3): 291–320. doi:10.1180/mgm.2021.43. Bibcode: 2021MinM...85..291W. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=அபுயிட்டு&oldid=4130453" இலிருந்து மீள்விக்கப்பட்டது