அபுல் பசல் (எழுத்தாளர்)

வங்காளதேச எழுத்தாளர்

அபுல் பசல் (Abul Fazal) (1 ஜூலை 1903-4 மே 1983)[1] வங்காளதேச எழுத்தாளரும் மற்றும் கல்வியாளரும் ஆவார்.[2] இவர் சிட்டகாங் பல்கலைக்கழகத்தின் 4 வது துணைவேந்தராக பணியாற்றினார்.[3] இவருக்கு 1962 இல் பங்களா அகாடமி இலக்கிய விருதும் மற்றும் 2012 இல் சுதந்திர தின விருதும் (மரணத்திற்குப் பின்) வழங்கப்பட்டது.[1][4]

அபுல் பசல்
சிட்டகாங் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர்
பதவியில்
9 ஏப்ரல் 1973 – 27 நவம்பர் 1975
முன்னையவர்இன்னாசு அலி
பின்னவர்அப்துல் கரீம்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1903-07-01)1 சூலை 1903
சத்கானியா உபாசிலா, சிட்டகாங், வங்காள மாகாணம், பிரித்தானிய இந்தியா
இறப்பு4 மே 1983(1983-05-04) (அகவை 79)
சிட்டகாங், வங்காளதேசம்
தேசியம்வங்காளதேசத்தவர்
பிள்ளைகள்அபுல் மொமென்
கல்விவங்காள இலக்கியத்தில் முதுகலைப் பட்டம்
முன்னாள் கல்லூரி
வேலைகல்வியாளர், எழுத்தாளர்

ஆரம்ப வாழ்க்கை மற்றும் கல்வி தொகு

1903 ஆம் ஆண்டு சிட்டகாங் மாவட்டத்தில் உள்ள சத்கானியா உபாசிலாவில் சிட்டகாங் ஜேம் மஸ்ஜித் இமாமாக இருந்த மௌல்வி பஸ்லுர் ரகுமானுக்கு மகனாகப் பிறந்தார். இவர், டாக்கா பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டம் பெற்றார். [1] இவர் 1940 இல் கொல்கத்தா பல்கலைக்கழகத்தில் வங்காள மொழி மற்றும் இலக்கியத்தில் முதுகலைத் தேர்ச்சி பெற்றார் [1]

தொழில் தொகு

பசல், இமாமாக தனது வாழ்க்கையைத் தொடங்கினார். ஆசிரியராகப் பல பள்ளிகளில் கற்பித்தார். 1941 இல், இவர் கிருஷ்ணாநகர் கல்லூரி மற்றும் பின்னர் சிட்டகாங் கல்லூரியின் பேராசிரியரானார். 1973 முதல் 1975 வரை சிட்டகாங் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகப் பணியாற்றினார் [3]

பசல் 1975-23 ஜூன் 1977 இல் வங்காளதேச அரசாங்கத்தின் ஆலோசனைக் குழுவின் கல்வி மற்றும் கலாச்சாரத்திற்கு பொறுப்பான உறுப்பினராக பணியாற்றினார்

பணிகள் தொகு

பசல், புதினங்கள், சிறுகதைகள், நாடகங்கள், நினைவுக் குறிப்புகள், பயணங்கள் போன்ற பல்வேறு தலைப்புகளில் எழுதினார். இவர் மதத்தைப் பற்றியும் எழுதியுள்ளார். மாதிர் பிருதிபி (1940), பிசித்ரா கதா (1940), ரேகாசித்ரா (1966) மற்றும் டர்டினர் டின்லிபி (1972) ஆகியவை அவரது எழுத்துக்களில் சில.

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 1.2 1.3 Banu, Sayeda (2012). "Fazal, Abul". in Sirajul Islam. Banglapedia: National Encyclopedia of Bangladesh (Second ). Asiatic Society of Bangladesh. http://en.banglapedia.org/index.php?title=Fazal,_Abul. 
  2. "Abul Fazal's 30th death anniversary observed". The Daily Star. 2013-05-07. http://www.thedailystar.net/beta2/news/abul-fazals-30th-death-anniversary-observed/. 
  3. 3.0 3.1 "Vice-Chancellors". University of Chittagong. Archived from the original on 4 March 2016. பார்க்கப்பட்ட நாள் 7 July 2016.
  4. "PM distributes Independence Award 2012" (in en). The Daily Star. 2012-03-26. https://www.thedailystar.net/news-detail-227731. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=அபுல்_பசல்_(எழுத்தாளர்)&oldid=3837318" இலிருந்து மீள்விக்கப்பட்டது