அப்சல் கான் (படைத்தலைவர்)
அஃப்சல் கான் (Afzal Khan) (இறப்பு:20 நவம்பர் 1659) இந்தியாவின் தக்காணப் பீடபூமியில் உள்ள பிஜப்பூர் சுல்தான் அடில் ஷாவின் 20,000 படைவீரர்களுக்கு தலைவராக இருந்தவர்.[1] தக்காண சுல்தான்கள், விஜயநகரப்பேரரசை வெற்றி கொள்வதற்கு அப்சல் கான் முக்கிய காரணமாக விளங்கியவர். பிஜப்பூர் சுல்தானகத்தின் சிற்றரசராக இருந்த சிவாஜி புனே பகுதிகளை தன்னாட்சியுடன் ஆளத்துவகினார். எனவே சிவாஜியை அடக்குவதற்கு, பிஜப்பூர் சுல்தான் அப்சால் கானை அனுப்பினார். சிவாஜியுடன் அமைதி உடன்படிக்கை மேற்கொள்ள வந்த அப்சால் கானை, சிவாஜி பிரதாப்காட் சண்டையில் கொன்றார்.[2]
அஃப்சல் கான் | |
---|---|
அப்சல் கானின் சித்திரம் | |
இறப்பு | 20 November 1659யூலியன் நாட்காட்டி) பிரதாப்காட் கோட்டையின் அடிவாரம் | (10 November in
மற்ற பெயர்கள் | Afzul Khan |
பணி | படைத்தலைவர் |
சிவாஜியுடன் சந்திப்பும், கொல்லப்படலும்
தொகுபேச்சு வார்த்தைக்காக அப்சல் கானை சிவாஜி சந்திக்க, தனது ஆடைக்குள் கூரிய புலி நகத்தாலான ஆயுததத்தை மறைத்து கொண்டு, ஒரு வாளும் மற்றும் இரண்டு வாள் வீரர்களுடன் சென்றார்.[3] அப்சல் கான் தன்து கூடாரத்திலிருது 1,000 வீரர்கள் புடைசூழ சிவாஜியை சந்திக்க வெளிக்கிளம்பினார். சிவாஜியின் படைவீரர் கோபிநாத் என்பவர், அப்சல் கானை நோக்கி, அதிக படைவீரர்களுடன் சிவாஜியை சந்திக்க மறுத்தார். எனவே சிவாஜியைப் போன்றே அப்சல் கான் தனது இரண்டு படைவீரர்களின் துணையுடன் சிவாஜியை சந்திக்கும் கூடாரத்தை நோக்கிச் சென்றார்.
கூடாரத்தில் தனித்து இருந்த அப்சல் கானை சந்திக்கச் சென்ற சிவாஜியை நோக்கி, பிஜப்பூர் சுல்தானுக்கு அடங்கி, கப்பம் செலுத்த ஒப்புக் கொள்ளுமாறு கூறினார். சிவாஜி அப்சல் கானை தழுவிக் கொள்வது போல் நடித்து, ஆடையில் மறைத்து வைத்திருந்த இரும்பால் ஆன புலி நகம் போன்ற ஆயுத்தத்தால் அப்சல் கானை சிவாஜி தாக்கினார். [4] தாக்கப்பட்ட அப்சல் கான் கூடாரத்தை விட்டு வெளியேறிய போது, சிவாஜியை அப்சல் கானின் வீரர் சையத் பண்டா தாக்கினார். ஆனால் சையத் பண்டாவை சிவாஜியி வீரர் ஜீவ மகாலா தாக்கி அழித்தார்.[5] This event is remembered in a Marathi language idiom Hōtā Jivā Mhaṇun Vāchlā Shivā ("Because of Jiva; Shivaji survived the attack").[6]பின்னர் சிவாஜி அப்சல் கானின் தலையை கொய்து கொன்றார். [7]
மரபுரிமை பேறுகள்
தொகுஅப்சல் கானில் தலையை அன்னை பவானிக்கு சிவாஜி பலி கொடுத்தார். பின் அவரது தலையும், உடலும் பிரதாப் கோட்டையில் உள்ள அப்துல்லா மேட்டில் புதைத்தனர்.[4]
இதனையும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ Afẕal Khān
- ↑ James W. Laine 2003, ப. 21.
- ↑ Jadunath Sarkar 1920, ப. 70.
- ↑ 4.0 4.1 James W. Laine 2003, ப. 23.
- ↑ Jadunath Sarkar 1920, ப. 73.
- ↑ Linah Baliga (7 December 2008). "‘We are no strangers to terror’". DNA India (Mumbai). http://www.dnaindia.com/mumbai/report-we-are-no-strangers-to-terror-1211939.
- ↑ Bal Krishna I 1932, ப. 22-23.
ஆதார நூற்பட்டியல்
தொகு- Anees Jahan Syed (1977). Aurangzeb in Muntakhab-al Lubab. Somaiya.
{{cite book}}
: Invalid|ref=harv
(help) - Bal Krishna (1932). Shivaji the Great. Vol. I. Shahji. D. B. Taraporevala Sons.
- Bal Krishna (1932). Shivaji the Great. Vol. II. D. B. Taraporevala Sons.
- Jadunath Sarkar (1920). Shivaji and His Times. Longmans, Green and Company.
{{cite book}}
: Invalid|ref=harv
(help) - James W. Laine (2003). Shivaji: Hindu King in Islamic India. Oxford University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-19-566771-4.
{{cite book}}
: Invalid|ref=harv
(help) - Mohan Apte; Parag Mahajani; M. N. Vahia (2003). "Possible errors in historical dates: Error in correction from Julian to Gregorian calendars". Current Science 84 (1): 21-22.
- Nicholas F. Gier (2014). The Origins of Religious Violence: An Asian Perspective. Lexington Books. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-7391-9223-8.
{{cite book}}
: Invalid|ref=harv
(help) - Shanti Sadiq Ali (1996). "The Bijapur Kingdom". The African Dispersal in the Deccan: From Medieval to Modern Times. Orient Blackswan. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-250-0485-1.
{{cite book}}
: Invalid|ref=harv
(help) - Stewart Gordon (1993). The Marathas 1600-1818. The New Cambridge History of India. Cambridge University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-521-26883-7.
{{cite book}}
: Invalid|ref=harv
(help)
வெளி இணைப்புகள்
தொகு- R. P. Karkaria (1896). Pratapgad Fort and the Episode of Shivaji & Afzal Khan: Told from the Original Mahratta Chronicles. Arya-Bhushana Press.