அப்துர் ரசாக் மாலிகாபாடி
அப்துர் ரசாக் மாலிகாபாடி (Abdur Razzaq Malihabadi) (1895-1959) [1] இவர் மௌலானா அபுல் கலாம் ஆசாத்தின் சுயசரிதை எழுதியவரும், ஒரு பத்திரிகையாளரும் ஆவார்.
சுயசரிதை
தொகுஇவர் உத்தரப் பிரதேசத்தின் தலைநகரான லக்னோ மாவட்டத்தின் புறநகர்ப் பகுதியான மாலிகாபாத்தில் பிறந்தார். இவருக்கு இரண்டு மகன்கள் (மூத்த மகன் ஒரு மாநிலங்களவை உறுப்பினர், பத்திரிகையாளர்) மற்றும் ஒரு மகள் இருந்தனர். இவரது ஆரம்ப பள்ளிப்படிப்பு லக்னோவில் இருந்தது, பின்னர் டாக்டர் பட்டம் பெற எகிப்துக்குச் சென்றார். இவர் தனது வாழ்க்கையின் பல ஆண்டுகளை அங்கேயே கழித்தார். இவர் உருது, பாரசீக, அரபு, பாஷ்டோ போன்ற மொழிகளில் சரளமாக இருந்தார்.
பணிகள்
தொகுபுது தில்லி அகில இந்திய வானொலியில் அரபுத் துறைத் தலைவராக சில ஆண்டுகள் பணியாற்றினார். சுதந்திரப் போராட்டத்தின் போது இவர் சௌதி அரசர்கள், மகாத்மா காந்தி மற்றும் ஜவகர்லால் நேரு ஆகியோருடன் நெருக்கமாக இருந்தார். இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்தில் இவரது பங்கிற்கு உரிய அங்கீகாரம் அளித்து, இவருக்கு சுதந்திரத்திற்குப் பிந்தைய நேரு அமைச்சரவையில் பதவி வழங்கப்பட்டது. இவர் ஆத்மாவால் ஒரு பத்திரிகையாளராக இருந்தார். இவர் தனது பேனாவால் பிரிட்டிசு இராச்சியத்தைப் பற்றி எழுதினார். அவர்களின் அட்டூழியங்களை பொதுவான இந்திய மக்களிடம் எடுத்துச் சென்றார். மற்றொரு சுதந்திரப் போராட்ட வீரரும் கவிஞருமான ஜோசு மாலிகாபாடி இவரது உறவினராவார். இவர் பதான் வம்சாவளியைச் சேர்ந்தவரவார்.[2]
பத்திரிக்கைப் பணி
தொகுஜிகார்-இ-ஆசாத் மற்றும் ஆசாத் கி ககானி குத் ஆசாத் கி ஜுபானி ஆகிய புத்தகங்களை இவர் எழுதினார், இது இவரது மரணத்திற்குப் பின் வெளியிடப்பட்டது. தப்தார் ஆசாத் இந்த் என்ற நிறுவனம் வெளியிட்டது. இவர் கிலாபத் இயக்கத்தில் பங்கேற்றார். அதில் இவர் இசுதான்புல்லிலிருந்து அரபு மற்றும் உருது மொழிகளில் வெளியிடப்பட்ட ஜிகான்-இ-இஸ்லாத் என்ற பத்திரிக்கையின் ஊழியராக இருந்தார். கொல்கத்தாவிலிருந்து வெளியிடப்பட்ட உருது நாளேடான ஆசாத் இன் என்றப் பத்திரிகையின் நிறுவன ஆசிரியராக இருந்தார்.[3] கொல்கத்தாவில் தங்கியிருந்த காலத்தில் ஆசாத்துடன் மிகவும் நெருக்கமாக இருந்தார்.[4] இவர் தற்போதைய மாநிலங்களவை (சுயேட்சை வேட்பாளர்) எம்.பி. சயீத் மாலிகாபாடியின் தந்தை ஆவார். தனது தந்தை இறந்த பிறகு ஆசாத் இந்தின் ஆசிரியராக இருந்தார். தற்போது செய்தித்தாள் சாரதா குழுமத்திற்கு சொந்தமாக இருக்கிறது.[5]
இறப்பு
தொகுபுற்றுநோயால் பாதிக்கப்பட்ட இவர் மும்பையில் இறந்தார்
குறிப்புகள்
தொகு- ↑ Qureshi, M. Naeem (1999). Pan-Islam in British Indian politics: a study of the Khilafat Movement. BRILL. p. 65.
- ↑ ARSH MALSIANI. ABUL KALAM AZAD. Publications Division Ministry of Information & Broadcasting.
- ↑ Ahmed, Firoz Bakht. "Forgotten crusader". The Deccan Herald. பார்க்கப்பட்ட நாள் 30 April 2013.
- ↑ Ahmed, Firoz Bakht. "Memorial for Maulana Azad in Kolkata". The Milli Gazette. New Delhi. பார்க்கப்பட்ட நாள் 4 October 2016.
- ↑ "RICE scraps Channel 10 deal with 'tainted firm'". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. பார்க்கப்பட்ட நாள் 23 April 2013.