அப்துல்கனி துணி சந்தை

அப்துல்கனி துணி சந்தை (Abdul Gani Textile Market) இந்தியாவின் தமிழ்நாடு மாநிலம் ஈரோடு நகரில் அமைந்துள்ள துணி விற்பனைச் சந்தையாகும். மொத்த மற்றும் சில்லறை விற்பனையாக இச்சந்தையில் துணிகள் விற்கப்படுகின்றன [1].

அப்துல்கனி துணி சந்தை
Abdul Gani Textile Market
இருப்பிடம்:பன்னீர்செல்வம் பூங்கா
முகவரிஈரோடு
தமிழ்நாடு, இந்தியா.
அ.கு.எண் – 638 001
திறப்பு நாள்1983
உரிமையாளர்ஈரோடு மாநகராட்சி
கடைகள் எண்ணிக்கை1000

வர்த்தகர்களும் வர்த்தக மையங்களும் தொகு

தமிழகத்திலுள்ள மிகப்பெரிய துணி சந்தைகளில் அப்துல் கனி துணி சந்தையும் ஒன்றாகும். இங்கு 300 நிரந்தரக் கடைகள் உள்ளிட்ட 1000 எண்ணிக்கைக்கும் மேற்பட்ட தனியர்களின் கடைகள் உள்ளன. இக்கடைகளில் மொத்த மற்றும் சில்லறை அடிப்படையில் துணி வியாபாரம் நடைபெறுகிறது. வாராந்திரக் கடைகள் திங்கள் மற்றும் செவ்வாய்க் கிழமைகளிலும் மற்ற கடைகள் யாவும் தினசரியும் திறக்கப்படுகின்றன. இவ் வர்த்தக சந்தையில் ஒரேநாளில் ஏராளமான பணப் பரிமாற்றங்கள் நிகழ்கின்றன. பண்டிகைக் காலங்களில் 10,000 முதல் 30,000 நபர்கள் வரையிலான மக்கள் இங்கு வந்து போகின்றனர்.

அருகிலுள்ள கேரளா போன்ற மாநிலங்களிலிருந்தும் [2][3][4][5][6], மாவட்டங்களிலிருந்தும் துணி வியாபாரிகள் இங்கு வந்து செல்கின்றனர். பவானி நகரில் தயாரிக்கப்படும் பவானி ஜமக்காளம் வகைப் போர்வைகள் இச்சந்தையில் அதிகமாக விற்பனையாகின்றன [7][8].

மேற்கோள்கள் தொகு

  1. "Gani market makes 100 crore turnover"". Textileviews. 20 August 2007. http://textileviews.blogspot.in/2007/08/erode-gani-textile-market-is-witnessing.html. பார்த்த நாள்: 30 November 2016. 
  2. "Erode Eyes 'AMRUT' to Restore Cauvery Glory". Dailyhunt (Erode). 4 May 2016. http://m.dailyhunt.in/news/india/english/the+new+indian+express-epaper-newexpress/erode+eyes+amrut+to+restore+cauvery+glory-newsid-52851639. பார்த்த நாள்: 30 November 2016. 
  3. "Gani Market stores and footfall"". The Hindu (Erode). 30 October 2013. http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/deepavali-business-picks-up-at-gani-textile-market/article5287275.ece. பார்த்த நாள்: 30 November 2016. 
  4. "History of Gani market"". Indiatoday (Erode). 15 July 1991. http://indiatoday.intoday.in/story/erode-becomes-merchants-dream-with-its-cheap-cloth/1/318524.html. பார்த்த நாள்: 30 November 2016. 
  5. "Market history and data"". Times of india (Coimbatore). 14 October 2014. http://timesofindia.indiatimes.com/city/coimbatore/Flooded-with-visitors-Kani-Market-lacks-basic-amenities/articleshow/44808364.cms. பார்த்த நாள்: 30 November 2016. 
  6. "Sales in Market"". TextileBasics (Erode). 28 November 2007 இம் மூலத்தில் இருந்து 1 டிசம்பர் 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20161201014531/http://www.textilebasics.com/news_fullstory.php?id=14158. பார்த்த நாள்: 30 November 2016. 
  7. "sales in Gani market"". alloftextiles (Erode). 1 January 2014 இம் மூலத்தில் இருந்து 1 டிசம்பர் 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20161201014259/http://alloftextiles.com/news_details.aspx?id=11684. பார்த்த நாள்: 30 November 2016. 
  8. "purchase locations in Erode"". veethi (Erode). http://www.veethi.com/travel/Erode-what_to_do-74.htm. பார்த்த நாள்: 30 November 2016. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=அப்துல்கனி_துணி_சந்தை&oldid=3860134" இலிருந்து மீள்விக்கப்பட்டது