அப்துல்லா யாமீன்
அப்துல்லா யாமீன் அப்துல் கையூம் ( Abdulla Yameen Abdul Gayoom, திவெயி: އަބްދުﷲ ޔާމީން އަބްދުލް ގައްޔޫމް; பிறப்பு 21 மே 1959), பொதுவாக அப்துல்லா யாமீன், மாலைத்தீவின் அரசியல்வாதியும் மாலைத்தீவுகள் குடியரசின் தற்போதைய அரசுத் தலைவரும் ஆவார்.[1][2] இவர் முன்னாள் அரசுத்தலைவர் மாமூன் அப்துல் கையூமின் ஒன்றுவிட்ட உடன்பிறப்பாகும்.[3]
அப்துல்லா யாமீன் عبدالله یامین | |
---|---|
மாலைத்தீவுகளின் 6 ஆவது அரசுத் தலைவர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 17 நவம்பர் 2013 | |
துணை அதிபர் | முகம்மது ஜமீல் அகமது அகமது அதீபு |
முன்னையவர் | முகமது வாகித் அசன் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | அப்துல்லா யாமீன் அப்துல் கையூம் 21 மே 1959 மாலே, மாலைத்தீவுகள் |
இறப்பு | thumb மாலைத்தீவுகளின் அரசுத்தலைவர் அப்துல்லா யமீன் |
இளைப்பாறுமிடம் | thumb மாலைத்தீவுகளின் அரசுத்தலைவர் அப்துல்லா யமீன் |
அரசியல் கட்சி | மாலைத்தீவுகள் முன்னேற்றக் கட்சி |
துணைவர்கள் | பாத்திமா இபுறாகீம் |
பெற்றோர் |
|
வாழிடம்s | முலியாகெ |
முன்னாள் கல்லூரி | பெய்ரூத் அமெரிக்கப் பல்கலைக்கழகம் கிளேர்மோன்ட் பட்டதாரி பல்கலைக்கழகம் |
மாலைத்தீவுகள் முன்னேற்றக் கட்சியின் வேட்பாளராக 2013ஆம் ஆண்டு நடந்த அரசுத் தலைவர் தேர்தலில் மாலைத்தீவுகள் சனநாயகக் கட்சியின் வேட்பாளரும் முன்னாள் அரசுத்தலைவருமான மொகமது நசீத்தை தோற்கடித்து அரசுத் தலைவரானார்.[4][5] அரசியலைத் தவிர, யாமீன் தலைநகர் மாலேயில் தான் வளர்ந்த மச்சன்கோலி வார்டில் சமூக ஒருங்கிணைப்பாளராக பங்காற்றி உள்ளார். மக்கள் கூட்டணி என்ற கட்சி உருவாக்கத்திற்கு பாடுபட்ட யாமீன் பின்னர் அதிலிருந்து விலகி 2010இல் மாலைத்தீவுகள் முன்னேற்றக் கட்சியில் இணைந்தார்.[6] இக்கட்சியின் நாடாளுமன்ற குழுத் தலைவராக யமீன் பணியாற்றினார். பாத்திமாது இப்ராகிமை மணந்துள்ள யமீனுக்கு மூன்று குழந்தைகள் உள்ளன.
இளமையும் வாழ்க்கையும்
தொகுயாமீன் தமது துவக்க, இடைநிலை பள்ளிக் கல்வியை மாலேயிலுள்ள மஜீதிய்யா பள்ளியில் முடித்தார்.[7] வணிக மேலாண்மையில் பட்டப்படிப்பை லெபனானின் பெய்ரூத் அமெரிக்கப் பல்கலைக்கழகத்தில் முடித்தார்.[7] பின்னர் கலிபோர்னியாவின் இலாசு ஏஞ்செல்சு கவுன்ட்டியிலுள்ள கிளெர்மான்ட் பட்டதாரிப் பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டத்தை பொதுக் கொள்கையாக்கத்தில் நிறைவு செய்தார்.[7] தனது ஒன்றுவிட்ட சகோதரர் மஃமூன் அப்துல் கையூம் அரசுத் தலைவராக இருந்தபோது மாலேயில் மச்சன்கோலி வார்டில் சமூக ஒருங்கிணைப்பாளராக பங்காற்றினார். 1993 நவம்பரில் இவர் வணிக, தொழிற்றுறை அமைச்சராக நியமிக்கப்பட்டார்.[7] 2005 - 2007 கால கட்டத்தில் உயர்கல்வி, வேலைவாய்ப்பு, சமூக பாதுகாப்பு அமைச்சராகவும் 2008இல் சுற்றுலா மற்றும் விமானத்துறை அமைச்சராகவும் பொறுப்பேற்றுள்ளார்.[7]
அரசுத் தலைவர் (2013-நடப்பு)
தொகுமக்கள் கூட்டணியிலிருந்து விலகிய பின்னர் யாமீன் அரசுத்தலைவர் கயூமின் கட்சியான மாலைத்தீவுகள் முன்னேற்றக் கட்சியில் இணைந்தார். 2013இல் அரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிட்டார். இந்தத் தேர்தல் 2012இல் அரசுத்தலைவராக இருந்த நசீமின் பதவி விலகல் தொடர்பான சர்ச்சைகளுக்கிடையே நடைபெற்றது. முதல் சுற்றில் நசீதுக்கு 45.45% வாக்குகளும் யமீனுக்கு 25.35% வாக்குகளும் கிடைத்தது. இரண்டாம் சுற்றுத் தேர்தலில் யமீனுக்கு 51.39% வாக்குகளும் நசீதுக்கு 48.61% வாக்குகளும் கிடைத்தன; இதனால் யாமீன் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார்.[8][9][10] இந்த முடிவை எதிர்கட்சிகள் எதிர்த்தன; தகுதியற்ற பல வாக்காளர்கள் இரண்டாம் சுற்றின் போது சேர்க்கப்பட்டதால் மாலைத்தீவுகளின் உச்ச நீதிமன்றம் துவக்கத்தில் இரண்டாம் சுற்றுத் தேர்தலை இரத்து செய்திருந்தது.[11][12][13]
யாமீன் அரசுத் தலைவராக இருந்த காலத்தில் பல பொருளாதார சீர்திருத்தங்களை முன்வைத்தார். முதல்முறையாக மாலைத்தீவுகளில் வெளிநாட்டினர் நிலம் வாங்க அனுமதித்தார்.[14] சீன மக்கள் குடியரசுடன் நெருக்கமான தொடர்பை விரும்பிய யாமீன் சீனாவின் கடல்சார் பட்டுச் சாலைத் திட்டத்தை ஆதரித்தார். தவிரவும் மாலைத்தீவுகளில் சீனாவின் மற்றும் பிற நாடுகளின் மூலதனத்தை வரவேற்றார்.[15][16]
முன்னாள் அரசுத்தலைவர் மோகமது நசீதையும் முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் மொகமது நசீமையும் கைது செய்து சிறையில் அடைத்ததற்காக எதிர்கட்சிகளாலும் வெளிநாட்டுத் தலைவர்களாலும் யாமீன் விமர்சிக்கப்பட்டார்.[17][18][19] அரசியல் காரணங்களுக்காக பொய்க்குற்றம் சாட்டி இவர்களை சிறையில் அடைத்திருப்பதாக குற்றம் சாட்டுகின்றனர்; இதனை யாமீன் மறுத்துள்ளார்.[20]
அரபு நாடுகளுடன் நெருக்கமாக உள்ளதால் இத்தொடர்பு மூலமாக மாலைத்தீவுகளுக்கு பல்வேறு நலத் திட்டங்களை ஈர்த்திருக்கிறார். பாலத்தீனத்திற்கு ஆதரவான நிலை கொண்டுள்ளார். அவர்கள் ஐக்கிய நாடுகள் அவையில் சேர்த்துக் கொள்ளப்படுவதற்கு அவரது அரசு ஆதரவளித்துள்ளது. கிழக்கு, ஆசிய பசிபிக், அராபிய நாடுகளுடனான சுமுகமான நட்புறவால் நாட்டிற்கு பலகோடி ரூபாய் மதிப்புள்ள திட்டங்களை ஈர்த்துள்ளார்.
யமீனின் பொருளாதாரக் கொள்கைகளை உலக வங்கியும் அனைத்துலக நாணய நிதியமும் பாராட்டியுள்ளன. யாமீன்
மேற்சான்றுகள்
தொகு- ↑ "Maldives swears in new president". Al-Jazeera. பார்க்கப்பட்ட நாள் 17 July 2013.
- ↑ "Yameen sworn in as president of the Maldives". BBC World News. பார்க்கப்பட்ட நாள் 17 July 2013.
- ↑ "Maldives profile - Leaders - BBC News". பார்க்கப்பட்ட நாள் 2015-09-14.
- ↑ "Maldives election: Abdulla Yameen wins run-off vote - BBC News". பார்க்கப்பட்ட நாள் 2015-09-14.
- ↑ http://www.theguardian.com/commentisfree/2015/apr/30/release-mohamed-nasheed-maldives-president-conviction
- ↑ "Progressive Party of Maldives - Official Website - Dhivehi". Ppm.mv. Archived from the original on 2013-06-28. பார்க்கப்பட்ட நாள் 2013-06-26.
- ↑ 7.0 7.1 7.2 7.3 7.4 "The President's Office - President Abdulla Yameen Abdul Gayoom". www.presidencymaldives.gov.mv. Archived from the original on 2015-09-20. பார்க்கப்பட்ட நாள் 2015-09-14.
{{cite web}}
: Unknown parameter|=
ignored (help) - ↑ Male, Nicholas Milton in; Burke, Jason. "Maldives presidential election goes to second-round vote". the Guardian. பார்க்கப்பட்ட நாள் 2015-09-14.
- ↑ "Sun Online: Maldives Presidential Elections 2013". www.sun.mv. Archived from the original on 2014-05-15. பார்க்கப்பட்ட நாள் 2015-09-14.
- ↑ "Yaameen elected Maldivian President by a narrow margin" (in en). The Hindu. 2013-11-16. http://www.thehindu.com/news/international/south-asia/yaameen-elected-maldivian-president-by-a-narrow-margin/article5357532.ece.
- ↑ "Maldives court annuls presidential election result - BBC News". பார்க்கப்பட்ட நாள் 2015-09-14.
- ↑ "Maldives election: Supreme Court delays run-off vote - BBC News". பார்க்கப்பட்ட நாள் 2015-09-14.
- ↑ "Maldives top court annuls September 7 presidential vote, sets new election". Reuters. 2013-10-07 இம் மூலத்தில் இருந்து 2013-11-13 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20131113083535/http://www.reuters.com/article/2013/10/07/us-maldives-election-court-idUSBRE9960S320131007.
- ↑ "Maldives foreign land ownership reform bill is approved - BBC News". பார்க்கப்பட்ட நாள் 2015-09-15.
- ↑ "HaveeruOnline - China-Maldives relations on new upward trajectory". www.haveeru.com.mv. Archived from the original on 2015-09-03. பார்க்கப்பட்ட நாள் 2015-09-15.
- ↑ "China and Maldives: Partners in Building 21st Century Maritime Silk Road Together". mv.chineseembassy.org. பார்க்கப்பட்ட நாள் 2015-09-15.
- ↑ "Maldives ex-leader Mohammed Nasheed jailed for 13 years - BBC News". பார்க்கப்பட்ட நாள் 2015-09-15.
- ↑ "Fears Of Instability In Maldives After Ex-President Jailed". The Huffington Post. பார்க்கப்பட்ட நாள் 2015-09-15.
- ↑ "Maldives jails ex-defence minister for 11 years". பார்க்கப்பட்ட நாள் 2015-09-15.
- ↑ "President denies that he had been aware of Nazim being framed- Spokesperson". பார்க்கப்பட்ட நாள் 2015-09-15.
வெளி இணைப்புகள்
தொகு- Abdulla Yameen sworn in as new Maldivian president at தி டைம்ஸ் ஆஃப் இந்தியா
- Yameen sworn in as president of the Maldives at பிபிசி
- Maldivian president Abdulla Yameen inaugurated after Mohamed Nasheed's shock defeat at ABC News (Australia)
- Abdullah Yameen topples favorite in Maldives election at Deutsche Welle