அப்துல் அஹத் மொமந்த்

ஆப்கானித்தானின் விண்வெளி வீரர்

அப்துல் அஹத் மொமந்த் (Abdul Ahad Momand; பிறப்பு 1959) ஒரு ஆப்கான்-ஜெர்மானியரும், முன்னாள் ஆப்கானிய விமானப்படை விமானியும் ஆவார். இவர் விண்வெளிக்கு பயணம் செய்த முதல் மற்றும் தற்போது வரையுள்ள ஒரே ஆப்கானிய குடிமகனாவார். விண்வெளியில் இருந்து இவர் தனது தாயுடன் தொலைபேசியில் பஷ்தூ மொழியில் பேசியபோது, விண்வெளியில் அதிகாரப்பூர்வமாக பேசப்பட்ட நான்காவது மொழியானது.[1]

அப்துல் அஹத் மொமந்த்
Abdul Ahad Momand
عبدالاحد مومند
தாய்மொழியில் பெயர்عبدالاحد مومند
பிறப்புஅப்துல் அஹத் மொமந்த்
1959 (அகவை 64–65)
சர்தே பந்த், அந்தர், காசுனி, ஆப்கானித்தான் இராச்சியம்
தேசியம்ஆப்கானியர் (1959–2003)
ஜெர்மானியர் (2003–தற்போது)
படித்த கல்வி நிறுவனங்கள்காபூல் பாலிடெக்னிக் பல்கலைக்கழகம்
பணி
  • போர் விமானி
  • விண்வெளி வீரர்
  • கணக்காளர்
அரசியல் கட்சிஆப்கானித்தான் மக்கள் ஜனநாயகக் கட்சி
பிள்ளைகள்3

இவர் சோயுஸ் டிஎம்-6 குழு உறுப்பினர்களில் ஒருவராக ஆனார். மேலும், 1988 இல் மீர் விண்வெளி நிலையத்தில் ஒரு சோவியத் விண்வெளித் திட்ட ஆராய்ச்சி விண்வெளி வீரராக ஒன்பது நாட்கள் கழித்தார்.[2] ஆப்கானிஸ்தான் விண்வெளி வீரராக பல சாதனைகளை படைத்துள்ளார். [3] சுல்தான் பின் சல்மான் அல் சவுத், முகமது பாரிஸ் மற்றும் மூசா மனரோவ் ஆகியோருக்குப் பிறகு, விண்வெளிக்குச் சென்ற முதல் ஆப்கானிஸ்தான் குடிமகன் மற்றும் நான்காவது முஸ்லிலீம் ஆவார்.

சுயசரிதை

தொகு

மொமந்த் 1959 ஆம் ஆண்டு [a] [4] ஆப்கானிஸ்தானின் கசுனி மாகாணத்தில் உள்ள ஆண்டார் மாவட்டத்தில் சர்தே பந்த் என்னுமிடத்தில் பிறந்தார். இவர் பஷ்தூன் இனக்குழுவின் மொமந்த் என்ற பழங்குடியினத்தைச் சேர்ந்தவர். தனது ஆரம்பப் பள்ளிப் படிப்பை முடித்த பிறகு, 1976 இல் 17 வயதில் காபூல் பாலிடெக்னிக் பல்கலைக்கழகத்தில் நுழைந்தார். ஒருவருடம் க்ழித்து பட்டம் பெற்றார். பின்னர், 1978 இல் இராணுவத்தில் சேர்ந்தார். பின்னர் விமானி பயிற்சிக்காக சோவியத் ஒன்றியதிற்கு அனுப்பப்பட்டார். அங்கு கிராஸ்னோடர் உயர் விமானப்படை பள்ளி மற்றும் கியேவ் உயர் விமானப்படை பொறியியல் பள்ளி ஆகியவற்றில் படித்தார். 1981 இல் ஆப்கானிஸ்தானுக்குத் திரும்பிய இவர் தரவரிசையில் உயர்ந்து, தலைமை நேவிகேட்டராக ஆனார். 1984 இல் ககரின் விமானப்படை கழகத்தில் பயிற்சி பெற சோவியத் ஒன்றியத்திற்கு திரும்பினார். 1987 இல் பட்டம் பெற்ற பிறகு, சோவியத் விண்வெளித் திட்டத்திற்கான விண்வெளிவீரரராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

விண்வெளியில்

தொகு

மீர் விண்வெளி நிலையத்தில் ஒன்பது நாட்கள் தங்கியிருந்த போது, மொமந்த் தனது நாட்டின் புகைப்படங்களை எடுத்தார். வானியற்பியல், மருத்துவம் மற்றும் உயிரியல் சோதனைகளில் பங்கேற்றார். தனது நாட்டின் அதிபர் முகமது நஜிபுல்லாவிடம் பேசினார். மேலும் குழுவினருக்கு ஆப்கானிஸ்தான் தேநீர் காய்ச்சினார். [5] ஆப்கானிஸ்தான் அரசாங்கத்தின் வேண்டுகோளின் பேரில் மொமந்த் விண்வெளியில் குர்ஆனை ஓதுவதையும் பதிவு செய்தார்.

தரையிறக்கம்

தொகு

லியாகோவ் மற்றும் மொமந்த் ஆகியோர் சோயுஸ் டிஎம்-5 விண்வெளி கப்பலில் பூமிக்குத் திரும்பினர். செப்டம்பர் 6 ஆம் தேதி திட்டமிடப்பட்ட விண்கலத்தின் தரையிறக்கம் இயந்திர சிக்கல்கள் காரணமாக தாமதமானது. மாஸ்கோ வானொலி, லியாகோவ் மற்றும் மொமந்த் நன்றாக இருப்பதாகவும், தரைக்கட்டுப்பாட்டு அலுவலகத்துடன் தொடர்பில் இருப்பதாகவும் உறுதியளித்தது. ஒரு நாள் கழித்து, சோயுஸ் டிஎம்-5 ஜெஸ்கஸ்கான் அருகே தரையிறங்கியது. [6] செப்டம்பர் 7, 1988 அன்று “சோவியத் ஒன்றியத்தின் நாயகன்” என்ற பட்டமும், “ஆப்கானிஸ்தான் ஜனநாயகக் குடியரசின் நாயகன்” மற்றும் “லெனின் ஆணை” என்ற பட்டமும் மொமந்திற்கு வழங்கப்பட்டது. [7]

இவர் நாடு திரும்பியதும், பொது விமானப் போக்குவரத்து துணை அமைச்சராக நியமிக்கப்பட்டார்.

1992 இல் முகமது நஜிபுல்லாவின் அரசாங்கம் வீழ்ச்சியடைந்தபோது அரியானா ஏர்லைன்ஸ் தொடர்பான புகாரைத் தீர்க்க மொமந்த் இந்தியாவில் இருந்தார். பின்னர் ஜெர்மனிக்கு குடிபெயர முடிவு செய்து, அங்கு புகலிடம் கோரி, 2003 இல் ஜெர்மன் குடிமகனாக ஆனார்.[8] அங்கு அச்சிடும் சேவையில் பணிபுரிந்தார். இப்போது இசுடுட்கார்ட் அருகிலுள்ள ஆஸ்ட்ஃபில்டர்னில் கணக்காளராக பணியாற்றுகிறார். [9] இவர் 2010 இல் "விண்வெளி ஆய்வில் தகுதிக்கான" உருசிய பதக்கத்தைப் பெற்றார். தனது விண்வெளிப் பயணத்தின் இருபத்தைந்தாவது ஆண்டு நிறைவை முன்னிட்டு, முன்னாள் அதிபர் ஹமித் கர்சாயின் வேண்டுகோளின் பேரில், 2013 இல் ஆப்கானிஸ்தானுக்குத் திரும்பினார்.

அடிக்குறிப்புகள்

தொகு
  1. மொமந்தின் பெற்றோருக்கு, பல ஆப்கானியர்களைப் போலவே, இவர் பிறந்த தேதி சரியாகத் தெரியவில்லை. எனவே இவரது பிறந்த தேதியை ஆண்டின் முதல் நாளாகக் குறிப்பிட்டார்.

சான்றுகள்

தொகு
  1. "Pashto report on Abdul Ahad Momand the first Afghan who sent to space". யூடியூப்.
  2. Abdul Ahad Momand – The First Afghan in Space (August 29 to September 6, 1988) பரணிடப்பட்டது 28 அக்டோபர் 2004 at the வந்தவழி இயந்திரம்
  3. "Pashto report on Abdul Ahad Momand the first Afghan who sent to space". யூடியூப்."Pashto report on Abdul Ahad Momand the first Afghan who sent to space".
  4. Burgess & Vis 2015, ப. 252.
  5. Burgess & Vis 2015, ப. 258-259.
  6. Burgess & Vis 2015, ப. 261.
  7. (in உருசிய மொழி)Biography at the website on Heroes of the Soviet Union and Russia
  8. Meinhardt, Birk (1 – 2 April 2010). "Mister Universum" (in de). Süddeutsche Zeitung (மியூனிக்): p. 3. "Er ist der einzige Afghane, der je ins All fliegen durfte. Von dort sah Abdulahad [sic] Momand die Erde und war sehr stolz um sie. Zurück auf dem Boden aber mußte er aus seiner Heimat fliehen – und sich durch die deutsche Welt kämpfen." 
  9. Burgess & Vis 2015, ப. 264.

உசாத்துணை

தொகு

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=அப்துல்_அஹத்_மொமந்த்&oldid=3790341" இலிருந்து மீள்விக்கப்பட்டது