அப்துல் சலீல் மசுதான்

இந்திய அரசியல்வாதி

அப்துல் சலீல் மசுதான் (Abdul Zalil Mastan) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் உறுப்பினரான இவர் 2015 ஆம் ஆண்டு நடைபெற்ற பீகார் சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு ஐந்தாவது நிதிசு குமார் அமைச்சரவையில் பதிவுத்துறை , கலால் மற்றும் மதுவிலக்குத் துறைகளின் அமைச்சராக இருந்தார். அப்துல் சலீல் மசுதான் இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவராவார்.[1][2] அமவுர் சட்டமன்ற தொகுதியிலிருந்து பீகார் சட்டமன்றத்திற்கு 1985 ஆம் ஆண்டு முதல் ஆறு முறை தேர்ந்தெடுக்கப்பட்டார். பீகாரின் கோசி-சீமாஞ்சல் பகுதியில் அவருக்கு வலுவான ஆதரவு உள்ளது. 2020 ஆம் ஆண்டு நடைபெற்ற பீகார் சட்டப் பேரவைத் தேர்தலில் அக்தாருல் இமான் என்பவரால் அப்துல் சலீல் மசுதான் தோற்கடிக்கப்பட்டார்.

அப்துல் சலீல் மசுதான்
Abdul Zalil Mastan
பதிவுத்துறை, மதுவிலக்கு மற்றும் கலால்
பீகார் அரசு
பதவியில்
20 நவம்பர் 2015 – 16 சூலை 2017
துணை முதல்வர்தேசசுவி யாதவ்
உறுப்பினர், பீகார் சட்டப் பேரவை
பதவியில்
2015–2020
முன்னையவர்சபா சாபர்
பின்னவர்அக்தருல் இமாம்
தொகுதிஅமவுர்
பதவியில்
2000–2010
பதவியில்
1985–1995
தனிப்பட்ட விவரங்கள்
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு

மேற்கோள்கள்

தொகு
  1. "Abdul Jalil Mastan(Indian National Congress(INC)):Constituency- AMOUR(PURNIA) - Affidavit Information of Candidate:". myneta.info. பார்க்கப்பட்ட நாள் 2020-12-09.
  2. "Abdul Jalil Mastan Election Results 2020: News, Votes, Results of Bihar Assembly". NDTV.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-12-09.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அப்துல்_சலீல்_மசுதான்&oldid=3811378" இலிருந்து மீள்விக்கப்பட்டது