அப்பங்களும் மீன்களும் பலுகிய கோவில்

அப்பங்களும் மீன்களும் பலுகிய கோவில் (Church of the Multiplication of Loaves and Fishes), சுருக்கமாக பலுகல் கோவில் என்பது இசுரேலில் கலிலேய கடற்கரைக்கு வடமேற்கில் டப்கா எனும் இடத்தில் அமைந்துள்ள ஓர் உரோமன் கத்தோலிக்க கோவில் ஆகும். தற்போதுள்ள கோவில் அதற்கு முற்காலத்தில் இரு கோவில்கள் இருந்த அதே இடத்தில் அமைந்துள்ளது.

அப்பங்களும் மீன்களும் பலுகிய கோவில்
அடிப்படைத் தகவல்கள்
அமைவிடம்இசுரேல் டப்கா, இசுரேல்
புவியியல் ஆள்கூறுகள்32°52′24″N 35°32′55″E / 32.87333°N 35.54861°E / 32.87333; 35.54861
சமயம்உரோமன் கத்தோலிக்கம்
நேர்ந்தளிக்கப்பட்ட ஆண்டு1982
தலைமைதூய பெனடிக்ட் சபைத் துறவிகள்

வரலாறு

தொகு

இயேசு ஐந்து வாற்கோதுமை அப்பங்களையும் இரண்டு மீன்களையும் கொண்டு ஐயாயிரம் மக்களுக்கு அற்புதமான விதத்தில் உணவளித்தார் என்னும் செய்தி மத்தேயு, மாற்கு, லூக்கா, யோவான் என்னும் நான்கு நற்செய்தியாளர்களாலும் குறிக்கப்பட்டுள்ளது. காண்க: மத்தேயு 14:13-21; மாற்கு 6:30-44; லூக்கா 9:10-17; யோவான் 6:1-15.

இந்த நிகழ்ச்சியை நினைவுகூரும் விதமாக திருநாட்டில் பண்டைக் காலத்தில் ஒரு கோவில் கட்டப்பட்டது என்னும் செய்தி எஜேரியா என்னும் திருப்பயணி கி.பி. 380 அளவில் எழுதிய ஒரு குறிப்பில் காணக்கிடக்கிறது. அவர் கீழ்வருமாறு கூறுகிறார்:

விரிவாக்கம்

தொகு

கி.பி. 480 அளவில் கோவில் விரிவாக்கப்பட்டது. தரையில் கற்பதிகை ஓவியங்கள் சேர்க்கப்பட்டன. இப்புதுப்பித்தல் பணியை நிகழ்த்தியவர் மறைமுதுவர் மார்த்தீரியோசு (Patriarch Martyrios) என்பவர் ஆவார்.

பிசான்சியப் பாணியில் அமைந்த அக்கோவிலைப் பாரசீகர்கள் 614இல் அழித்தார்கள். அதைத் தொடர்ந்து அக்கோவில் அமைந்திருந்த இடம் சுமார் 1300 ஆண்டுகளாக மறக்கப்பட்ட நிலையில் இருந்தது.

1888ஆம் ஆண்டு செருமனியின் கொலோன் மறைமாவட்டத்தோடு தொடர்புடைய "செருமானிய கத்தோலிக்க பாலத்தீனத் தூதகம்" என்னும் நிறுவனம் அந்த இடத்தை வாங்கி, அகழ்வாய்வுக்கு ஏற்பாடு செய்தது. முதல் ஆய்வு முயற்சிகள் 1892இல் தொடங்கின. 1932இல் அகழ்வாய்வுப் பணி முடுக்கிவிடப்பட்டது.

இந்த அகழ்வாய்வின் பயனாக, 4ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ஒரு சிறுகோவில் கண்டுபிடிக்கப்பட்டது. அக்கோவிலின் அடித்தளத்தின் மீது 5ஆம் நூற்றாண்டில் ஒரு கோவில் கட்டப்பட்டது. அக்கோவிலின் தரையில் அழகிய கற்பதிகை ஓவியங்கள் பதிக்கப்பட்டது. இவை அனைத்தும் அகழ்வாய்வின் விளைவாகத் தெரியவந்தன.

இன்றைய கோவில் 5ஆம் நூற்றாண்டு பிசான்சியக் கலைக் கோவிலின் அதே அளவைக் கணித்து கட்டப்பட்டது. 1939ஆம் ஆண்டிலிருந்து இக்கோவிலின் மேற்பார்வை புனித பெனடிக்ட் சபைத் துறவியரிடம் உள்ளது. எருசலேமில் அமைந்துள்ள "மரியா துயில்கொண்ட இல்லம்" என்னும் துறவியர் மடத்தின் கிளை இல்லமாக இக்கோவில் விளங்குகிறது.

படத்தொகுப்பு

தொகு

வெளி இணைப்புகள்

தொகு