அமரகங்கேயன்

சாகம்பரியின் ஆட்சியாளர்

அமரகங்கேயன் (Amaragangeya) (ஆட்சி சுமார் 1164-1165 பொ.ச.), அபரகங்கேயன் என்றும் அழைக்கப்படும் இவர், சாகம்பரியின் சௌகான் வம்சத்தைச் சேர்ந்த ஒரு இந்திய மன்னராவார். வடமேற்கு இந்தியாவில் இன்றைய இராஜஸ்தானின் சில பகுதிகளை உள்ளடக்கிய சபடலக்ச நாட்டை ஆட்சி செய்தார்.

அமரகங்கேயன்
சாகம்பரியின் மன்னன்
ஆட்சிக்காலம்சுமார் 1164-1165 பொ.ச.
முன்னையவர்நான்காம் விக்ரகராசன்
பின்னையவர்இரண்டாம் பிருத்விராஜன்
அரசமரபுசாகம்பரியின் சௌகான்கள்

சகமான அரசன் நான்காம் விக்ரகராசனின் மகனான இவர் தனது சிறு வயதிலேயே அரியணை ஏறியதாகவும், மிகக் குறுகிய காலமே ஆட்சி செய்ததாகவும் தெரிகிறது. [1] இவருக்குப் பிறகு இவரது தந்தைவழி உறவினரும் விக்ரகராசனின் சகோதரர் ஜகத்தேவனின் மகனுமான இரண்டாம் பிருத்விராஜன் அரியணைக்கு வந்தார். தோட் ருத்தி ராணி கோவிலில் கிடைத்த கல்வெட்டின் படி, பிருத்விராஜன் சாகம்பரி மன்னனை தோற்கடித்ததாகத் தெரிகிறது. இது பிருத்விராஜன் அமரகங்கேயனை அரியணையில் இருந்து அகற்றி, சகமான மன்னரானார் என்பதைக் குறிக்கிறது. [2] 15 ஆம் நூற்றாண்டின் காஷ்மீரி வரலாற்றாசிரியர் ஜோனராஜாவின் கூற்றுப்படி, அமரகங்கேயன் திருமணமாகாமலேயே இறந்ததாகத் தெரிகிறது. [3]

சான்றுகள்

தொகு
  1. R. B. Singh 1964, ப. 153.
  2. R. B. Singh 1964, ப. 154.
  3. Dasharatha Sharma 1959, ப. 65.

உசாத்துணை

தொகு
  • Dasharatha Sharma (1959). Early Chauhān Dynasties. S. Chand / Motilal Banarsidass. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780842606189.
  • R. B. Singh (1964). History of the Chāhamānas. N. Kishore. இணையக் கணினி நூலக மைய எண் 11038728.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அமரகங்கேயன்&oldid=4062335" இலிருந்து மீள்விக்கப்பட்டது