ஜகதேவன் (சகமான வம்சம்)

சாகம்பரியின் ஆட்சியாளர்

ஜகதேவன் (Jagaddeva ) (ஆட்சி சுமார் 1150 பொ.ச.) சாகம்பரியின் சௌகான் வம்சத்தைச் சேர்ந்த ஒரு இந்திய மன்னராவார். வடமேற்கு இந்தியாவில் இன்றைய இராஜஸ்தானின் சில பகுதிகளை உள்ளடக்கிய சபடலக்ச நாட்டை ஆட்சி செய்தார். இவர் தனது தந்தை அர்னோராஜாவைக் கொன்ற பிறகு அரியணை ஏறினார். மேலும் தனது சகோதரர் நான்காம் விக்ரகராசனால் ஆட்சியிலிருந்து அகற்றப்படுவதற்கு முன்பு குறுகிய காலம் ஆட்சி செய்தார்.

ஜகதேவன்
சபடலக்ச நாட்டின் ஆட்சியாளர்
ஆட்சிக்காலம்சுமார் 1150 பொ.ச.
முன்னையவர்அர்னோராஜா
பின்னையவர்நான்காம் விக்ரகராசன்
அரசமரபுசாகம்பரியின் சௌகான்கள்

ஆட்சி தொகு

சகமான அரசர் அர்னோராஜாவிற்கும் மார்வாரின் இளவரசியான அவரது ராணி சுதாவா ஆகியோருக்கு பிறந்த மூன்று மகன்களில் ஜகதேவனும் ஒருவர். விக்ரக ராசன், தேவதத்தன் ஆகிய இருவரும் இவரது சகோதரர்கள். [1] பரசுராமன் தன் தாய்க்கு (அதாவது பெற்றோரைக் கொன்றது) அளித்த அதே தண்டனையை சுதாவாவின் மூத்த மகன் அர்னோராஜாவுக்கு அளித்ததாக பிருத்விராஜ விஜயம் கூறுகிறது. உரை இந்த மகனுக்கு பெயரிடவில்லை. ஆனால் அர்னோராஜாவின் வாரிசென விக்ரகராசனைப் பெயரிடுகிறது. ஹம்மிர மகாகாவியம், பிரபந்த கோசம், சுர்ஜன சரிதம் போன்ற பிற நூல்கள் அர்னோராஜாவின் வாரிசாக ஜகத்தேவனைக் குறிப்பிடுகின்றன. ஜகதேவன் தனது தந்தையைக் கொன்ற பிறகு சகமான சிம்மாசனத்தில் ஏறினார் என்பதை இது குறிக்கிறது. [2]

ஜகதேவன் தனது பதவியை உறுதிப்படுத்துவதற்கு முன், இவரது இளைய சகோதரர் விக்ரகராசன் இவரை அரியணையில் இருந்து அகற்றி புதிய சகமான அரசரானார். [3] பிருத்விராஜ விஜயம் ஜகதேவனை சொர்க்கத்தை அடையாத ஒரே சகமான ஆட்சியாளர் என்று விவரிக்கிறது. [4]

சான்றுகள் தொகு

  1. Dasharatha Sharma 1959, ப. 55.
  2. R. B. Singh 1964, ப. 140-141.
  3. R. B. Singh 1964, ப. 141.
  4. Dasharatha Sharma 1959, ப. 56.

நூல் பட்டியல் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜகதேவன்_(சகமான_வம்சம்)&oldid=3430051" இலிருந்து மீள்விக்கப்பட்டது