அர்னோராஜா
அர்னோராஜா (Arnoraja) சாகம்பரியின் சௌகான் வம்சத்தைச் சேர்ந்த ஒரு இந்திய மன்னராவார். வடமேற்கு இந்தியாவில் இன்றைய இராஜஸ்தானின் சில பகுதிகளை உள்ளடக்கிய சபடலக்ச நாட்டை ஆட்சி செய்தார். அர்னோராஜா மேற்கில் இருந்து வந்த கஸ்னாவிட் படையெடுப்பை முறியடித்தார். மேலும் பரமாரகள் மற்றும் தோமரர்கள் உட்பட பல அண்டை இந்து மன்னர்களையும் தோற்கடித்தார். இவர் சோலாங்கியர்களுக்கு எதிராக தோல்விகளை சந்திக்க வேண்டியிருந்தது. இறுதியில் இவரது சொந்த மகன் ஜகதேவனால் கொல்லப்பட்டார்.
அர்னோராஜா | |
---|---|
மகாராஜாதிராஜா-பரமேசுவரன் | |
சபடலக்ச நாட்டின் ஆட்சியாளர் | |
ஆட்சிக்காலம் | சுமார் 1135-1150 பொ.ச |
முன்னையவர் | இரண்டாம் அஜயராஜன் |
பின்னையவர் | ஜகதேவன் |
இராணி | காஞ்சனா தேவி |
குழந்தைகளின் பெயர்கள் | ஜகத்தேவன் |
அரசமரபு | சாகம்பரியின் சௌகான்கள் |
தந்தை | இரண்டாம் அஜயராஜன் |
தாய் | சோமல்லாதேவி |
ஆரம்ப கால வாழ்க்கை
தொகுஅர்னோராஜா சகமான அரசர் இரண்டாம் அஜயராஜன் மற்றும் அவரது மனைவி சோமல்லாதேவி ஆகியோருக்கு மகனாகப் பிறந்தார். இவர் அனலதேவன், அனலதேவா, அனா, அண்ணா மற்றும் ஆனகா உள்ளிட்ட பல்வேறு பெயர்களால் அறியப்படுகிறார். பொ.ச. 1139 தேதியிட்ட இரண்டு ரேவசா கல்வெட்டுகள் இவரது பட்டத்தை "மகாராஜாதிராஜா - பரமேசுவரா" என்று குறிப்பிடுகின்றன. அவஷ்யகா-நிர்யுக்தியின் 1141 தேதியிட்ட கையெழுத்துப் பிரதியில் "பரமபட்டாரக-மகாராஜாதிராஜா-ஸ்ரீமத்" என்று இவரது பட்டப்பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது. [1]
இறப்பு
தொகுஅர்னோராஜாவுக்கு குறைந்தது நான்கு மகன்களாவது இருந்தனர். இவர்களில் குசராத்தின் சோலாங்கிய இளவரசியான காஞ்சனாவிற்கு பிறந்த சோமேசுவரர் குறிப்பிடத் தக்கவர். [2] ஜகத்தேவன், நான்காம் விக்ரகராசன் மற்றும் தேவதத்தன் ஆகிய மூவரும் மார்வாரின் இளவரசி சுதாவின் மூலம் பிறந்தவர்கள். [1] விக்ரகராசன் அடுத்த மன்னராக வருவதற்கு முன்பு, ஜகதேவன் அர்னோராஜாவைக் கொன்று, சகமானாவின் சிம்மாசனத்தை சிறிது காலம் ஆக்கிரமித்தார். [2]
சான்றுகள்
தொகு- ↑ 1.0 1.1 Dasharatha Sharma 1959, ப. 43.
- ↑ 2.0 2.1 R. B. Singh 1964, ப. 59.
உசாத்துணை
தொகு- Asoke Kumar Majumdar (1956). Chaulukyas of Gujarat. Bharatiya Vidya Bhavan. இணையக் கணினி நூலக மைய எண் 4413150.
- Dasharatha Sharma (1959). Early Chauhān Dynasties. S. Chand / Motilal Banarsidass. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780842606189.
- R. B. Singh (1964). History of the Chāhamānas. N. Kishore. இணையக் கணினி நூலக மைய எண் 11038728.